மயிலம்
இளமுருகு அவர்களின் அயல் சினிமா குறித்த முழுமையான
விமர்சனம் நம்பிக்கையளிக்கிறது! - நன்றி
//அயல் சினிமா இதழ் ....
முதலில்
இப்படிப்பட்ட ஒரு இதழ் தொடங்கி , அதுவும் சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டுள்ள இதழாசிரியர்களுக்கு
வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..
தமிழ் சினிமாக்
குறித்து பேசுவதற்கு வேறு இதழ்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு இதழ், ஆகச்சிறந்த
அயல்நாட்டு சினிமாக் குறித்த கருத்துகளைச் சொல்ல இல்லையே என்ற குறையை நிவர்த்தி
செய்வதாக ' அயல் சினிமா ' இதழ்
வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.68 பக்கங்களைக் கொண்டதாக
இதழ் அமைந்துள்ளது. ஆசிரியர் 3 ஆம் பக்கத்திலேயே இதழிற்கான
நோக்கத்தைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவினூடாக அயல் சினிமாவின்
பங்களிப்பு என்ன, தற்போதைய தமிழ் சினிமாவின் நிலை குறித்தும்
அறிந்து கொள்ள, இன்னும் வளர்த்ததெடுக்க தன்னாலான பங்களிப்பை
செய்ய முன்வந்துள்ள விதம் ,வரும் இதழ்கள் எப்படி அமையுமென்று
கூறியுள்ளது நினைக்கத்தக்கது.
பதினான்கு விதமான
தலைப்புகளைப் பேசுவதாக இதழ் அமைந்துள்ளது. மரணத்தின் தேதி தெரிந்த மனிதர்கள் என்ற
கட்டுரையில் பாஸ்கர் சக்தி , சினிமாவில் கடவுள் குறித்தப் படங்களையும் அதே
சமயம் உலக சினிமாவில் எடுத்துரைக்கப்பட்ட வித்தியாசத்தினை அழகுபட விளக்கியுள்ளார்.
பிராண்ட் நியூ டெஸ்டமெண்ட் என்ற திரைப்படத்தை தெளிவாக வாசகருக்கு விளங்கும்
வகையில் கூறியுள்ளார். ஆண் கடவுள் செய்கின்ற செயலையும் அதனால் துன்பப்படுகின்ற
மகள் மற்றும் மனைவி குறித்தும் எடுத்துரைத்து ,பின்
மகளின் செயலால் மற்றவருக்கு மரணத்தேதி தெரியவருகின்றது . மரணத்தின் தேதி தெரிந்த மனிதர்களின் நிலை, கடவுள்
படுகின்ற துன்பம் என நகைச்சுவையுணர்வுடன் எடுக்கப்பட்ட விதத்தை சிறப்பாக
எடுத்துரைத்துள்ளார்.
அஜயன் பாலா
எழுதிய மிஷிமா வாழ்க்கையின் நான்கு பகுதிகள் என்ற கட்டுரையின் நடை நம்மை படம்
பார்க்க வைத்த... வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக அமைகின்றது.
மிஷிமாவின் வாழ்க்கை வரலாற்றை ஏன் படமாக எடுக்க வேண்டும் என்ற காரணமும் , பால்
ஷ்ரேடர் ஏன் அதனை நான்கு பகுதிகளாக பிரித்து கொண்டாரென்று
விளக்கப்பட்டுள்ளது.மிகச்சிறந்த எழுத்தாளரின் வாழ்க்கை ..அவர் செய்த விபரீத
நிகழ்வு ..பின் தன்னுடைய மூன்று கோரிக்கை நிறைவேறாதச்சூழலில் ஜப்பானின் சாமுராய்
மரபான ஹரகிரி முறையில் தற்கொலை செய்த கொண்டது என விளக்கி இன்றும் ஆண்டுதோறும்
நவம்பர் 25 ஆம் தேதி மிஷிமா நினைவு நாளாக போற்றுகின்றர்
என்பதையும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கருந்தேள் ராஜேஷ்
அவர்கள் தற்கால தமிழ் சினிமாவை மலையாள சினிமாவோடு ஒப்பிட்டு தமிழ் சினிமா
குறித்தான அவருடைய ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளமை எண்ணத்தக்கது.Feel good என்ற வகையில் தமிழ் சினிமாவில் நடக்க வேண்டிய மாற்றங்களைத்
தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு துளி நட்சத்திரம் என்ற தலைப்பில் சி.ஜெ.ராஜ்குமார் அவர்கள் திரைப்பட
விழாக்கள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக கேமர் இமேஜ் திரைப்பட விழா
குறித்து மேலதிகமாக பேசியுள்ளார். மேலும் வெனிஸ், சான்பிரான்சிஸ்கோ
,கெய்ரோ, விழாக்கள் குறித்தும்,
1952 இல் நேரு தோற்றுவித்த IFFI விழா கோவாவில்
நடைபெறுகின்ற விதத்தினையும் குறிப்பிட்டுள்ளார். விருதுகள் குறித்தானச்
செய்திகளையும் நாம் இதன்வழி அறிந்து கொள்கிறோம்..
இயக்குநர்
லிங்குசாமி என்னை பாதித்த உலக சினிமாவில் 'ரோமன் ஹாலிடே ' திரைப்படம்
குறித்து விளக்கியுள்ளமை சிறப்பு.ரோம் நாட்டிற்கு
வரும் இளவரசி மறுநாள் தான் காண்கின்ற அனுபவங்கள் & பத்திரிக்கையாளின்
செயல் , காதல் என விரிவான முறையில் அழகாக கூறியுள்ளார்.
இப்படத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் இருந்த விதத்தினையும் குறிப்பிட்டுள்ளது
அவருடைய நேர்மையை காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில்
பேய்படங்களின் நிலை ..யார் யார் பேயாக நடிக்கின்றனர் , தற்கால
பேய் படங்கள் எப்படி அமைகின்றன என்று அனு ராஜேந்திரன் அவர்கள் விவரித்துள்ளார்.
அந்தக் கால மோகினிகள் தந்த கிளர்ச்சியையும் , பூதங்கள் தந்த
பயத்தையும் இப்போதைய படங்களில் இல்லையென்று ஏமாற்றப்படுவதையும் பதிவு
செய்துள்ளார்..
டி காப்ரியோவின்
பேட்டியை வெகு அழகாக தமிழ்ப்படுத்தி வாசகருக்கு இன்பம் தந்துள்ளார் தீபலக்ஷமி
அவர்கள்... தற்போது ஊடகங்களின் நடைமுறை , பொதுப்புத்தி
, படங்கள் குறித்தான எண்ணங்களை வெளிப்படுத்துவதாக கேபிள்
சங்கர் ....பொன்முட்டை என்ற தலைப்பிலான கட்டுரை அமைந்துள்ளது. இதனுள் விமர்சனம்,
அரசியல், ஊடகங்கள் , இணையம்,
ஜி.எஸ் .டி யின் தாக்கம் என பலவற்றை விவாதித்த விதம் அருமை.
பிரதீப் செல்லத்துரை அவர்கள் இந்திய பாலிவுட்
மற்றும் பாகிஸ்தான் திரைப்படத்தின் நிலை , வசூல் , வரலாற்று அடிப்படையில் தரவுகளைத்தந்து விளக்கியது அவருடைய சினிமாப்
புரிதலை காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வசனங்கள் குறித்தானப் புரிதலைத் தருவதாக பிருந்தா
சாரதியின் கட்டுரை திகழ்கிறது.
கதை to திரைக்கதை என்ற கட்டுரையில் தீபா அவர்கள் திரைக்கதை எப்படி அமைகிறது,
பலம் , ஹாலிவுட் படப் பின்னனி என சிறப்பாக
விரிவாக குத்துச்சண்டை , மில்லியன் டாலர் என பல படங்களினூடாக
விளக்கம் பெறுகின்றன.
ஓவியர் ஜீவாவின்
எண்ணங்களை அவருடைய எழுத்துகள் காட்டிகொடுத்து விடுகின்றன. கேரளாவில் சினிமா , கம்யூனிஸ்ட்
கட்சி தாக்கம் சினிமாவில் வெளிப்பட்ட எண்ணங்கள்
என பலவற்றை அறிய முடிகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த
திரைப்படங்கள் குறைவென்றும் ...திரைப்படங்களில் குறைவாக காட்டுகின்ற நிலைமையும்
இதன் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்...
தனுஷ் மற்றும்
மர்ஜானே சத்ரபி நடிக்கும் திரைப்படம் குறித்தும் ....கதை, நாவல்
குறித்துமாக பலவற்றை பக்கம் 66 நமக்கு சொல்கின்றது...
மொத்தத்தில் சினிமா குறித்தான இதழ் வரலாற்றில் அயல் சினிமா இதழ்
அசைக்க முடியாத இடத்தை பெறும் என்பது என்னுடைய அசைக்கமுடியாத எண்ணம் ...
இதழ் ஆசிரியர்& ஆசிரியர் குழு சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
மேலும்
எதிர்பார்க்கிறோம் ....
இப்படிக்கு
மயிலம்இளமுருகு
கைப்பேசி. 9600270331
0 Response to "அயல் சினிமா இதழ் ஆகஸ்ட் விமர்சனம்"
Post a Comment