தரமணி திரைப்பட விமர்சனம்

Trending

Breaking News
Loading...

தரமணி திரைப்பட விமர்சனம்

தரமணி திரைப்பட விமர்சனம்
கவிதையா, சிலவிடங்களில் , நாவலாக .....
கட்டமைக்கப்பட்டுள்ளது #தரமணி

நெகிழ்வுத் தன்மையுடைய சினிமாவில் தனக்கான இடத்தை இயக்குனர் ராம் அவர்கள் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டே வருகின்றார்.

இதற்கு முன் எடுத்த தங்கமீன்கள் படம் பெண் குழந்தைப் பற்றியது.இயல்பாக இருக்கும் குழந்தையை சமூகம் ஏற்கனவே உண்டாக்கியுள்ள சட்டகத்தைப் பொருத்திக் பார்கின்ற சிக்கல்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் படுகின்ற இன்னல்களையும், வடிகால்களையும் ஆங்காங்கே எடுத்துரைத்துச்  வெளிப்படுத்தும் படமாக தரமணி  அமைந்துள்ளது. ஆல்தியாவின் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் பல்வேறு இடங்களில் தன்நிலைமையை, இடத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். கணவன் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையின் சிக்கல்களை சாதுர்யமாய் கடத்திச்செல்கிறார். பிரபுநாத்தின் அன்பில் அவள் மட்டுமின்றி தன்னுடைய மகனும் வைத்திருந்த நேயத்தைத் தெரிந்து( டால்பின்களோடு நீச்சலடித்து உரிய இடம் பெற்றகின்றான் பிரபுநாத்) தன் காதலை சொல்கிறாள்...

இதற்கு பின் நடக்கும் பிரபுநாத்தின் ஆண் சார்ந்த உளச்சிக்கலை சரியான கண்ணோட்டத்தொடு இயக்குநர் வெளிப்படுத்தியிருப்பது இன்றைய சமூகத்தில் நடைபெற்ற நடைபெறுகின்ற விதம் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.

குரலில் வெளிப்படுத்தியப் பார்வைகள்
1) மற்ற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் வேலையாட்களின் உயிர் மதிக்கப்படுவதில்லை
2) விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீடு கட்டப்படுதல்
3) பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமை
4) பெண்களின் உரிமை மறுக்கப்பட்டமை
5) நாகரீகமாக இருக்கும் பெண்கள் தவறு செய்வார்கள் என்பது கட்டுடைக்கப்பட்டுள்ளது
6) மத்திய அரசின் முன்னெச்சரிக்கை இல்லாத ரூபாய் மதிப்பு அழித்தமை
7) கணவனிடத்து அன்பாக இருந்தாலும் சில நேரங்களில் சஞ்சலப்படுகின்ற சூழல் கூறப்பட்டுள்ளது.
8) குழந்தைகளிடத்து பொய்க்கூறினால் என்ன நடக்கும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
9) தன் மனமறிந்து தவறு செய்யக்கூடாது _ பிரபுநாத் பணம் திருடுதல்
10) கணவன் இல்லையெனில் பெண்ணை சமூகம் பார்க்கின்ற விதம் விதந்தோதப்பட்டுள்ளது.
11)நாம் என்ன செய்தாலும் மனைவி ஏற்றுக்கொள்வாள் என்பது தவறு...
இதனை ஆல்தியாவின் தோழி தன் கணவனை Dog என்று சொல்வதின் மூலமாக மாற்றி யோசிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
11) மனைவியை மட்டுமே நேசிக்காது மற்ற வேலைகளில் ஈடுபட்டால் என்ன நேரிடும் என்பது சொல்லப்பட்டுள்ளது.
12) மற்ற மதத்தையும் மதிக்க வேண்டுமென்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.
13) இன்றைய காலத்தில் சமூக ஊடகத்தின் பங்கு.... வீட்டிலுள்ளவர்களை நேசிக்காமல் மற்றவர்களை நேசிப்பதனால் ஏற்படும் விபரீதங்கள் ....
14) பெண் தன்னம்பிக்கை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
15) விளிம்புநிலை மக்களின் வாழ்நிலை
எனப்பலவாக எடுத்துரைக்கப்பட்ட கதைகளின் கோர்வைகளாகவே தரமணி படம் எனக்குக் காட்சி தருகின்றது.
சமூத்தை சமூகப்பிரக்ஞையோடு அணுகியுள்ளார் ராம்..
இப்படிப்பட்ட படங்களை எடுக்க உண்மையில் நெஞ்சுரம் வேண்டும் ....சிறப்பாகவே தன்னுடைய படங்களில் வெளிப்படுத்தும் சிந்தனை மனிதர் ராம் அவர்களுக்கும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்

மாற்றங்களை வெளிப்படுத்தும் வெகுசன கவிதையாக , சிலவிடங்களில் நாவலாக .....
கட்டமைக்கப்பட்டுள்ளது #தரமணி

மயிலம் இளமுருகு


0 Response to "தரமணி திரைப்பட விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel