அயல்சினிமா செப்டம்பர் 2017

Trending

Breaking News
Loading...

அயல்சினிமா செப்டம்பர் 2017

அயல்சினிமா செப்டம்பர் 2017
செப்டம்பர் மாத அயல் சினிமா இதழ் குறித்த என் பார்வை...
செப்டம்பர் மாத அயல்சினிமா இதழ் 15 தலைப்புகளின் கீழ் மிக நேர்த்தியாக சென்ற இதழைப் போன்றே சிறப்பாக வந்துள்ளது. அட்டைப்படமே வாசகரை ஈர்ப்பதாக உள்ளது. தலையங்கத்தில் ஆசிரியர் வேடியப்பன் அவர்கள் முதல் இதழ் குறித்தான வாசகவெளியைச் சொல்லி இனிவரும் இதழ் எப்படி அமையுமென்றும் , அதற்கான குறிப்பு மற்றும் சில திட்டங்களையும் முன்வைத்து அடுத்தகட்ட முயற்சியினை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  ஏகம்பவாணன் அவர்கள் விதி எனும் பிக்பாஸ் என்ற கட்டுரையில் விஜய் டிவி நிகழ்ச்சியோடு The Trueman show படம் குறித்து மிக விரிவாக தன்னுடைய பார்வையை சிறப்பாக சொல்லியிருந்தார். ஆங்கிலப் படத்தின் கதையினை நாம் இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. லைவ் ஷோ , செயல், காதல், காணாமல் போதல் , வாழ்க்கைப் பயணம் , விதிகள், என வாழ்க்கையின் புரிதலை இக்கட்டுரை படத்தின் வழியாக பேசியுள்ளது.
  நோலன் படங்களின் பாணி என்னவென்று சிவராஜ் திரைக்கதை நுணுக்கங்கள் , படத்தின் தளம் , தனித்துவமான திரைக்கதை , கதாபாத்திரம், காலம், முடிவை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தும் பாணி , Memento படம் , சின்ன சின்ன நுணுக்கங்கள், திரைக்கதை அமைக்கும் பாணி என அவருடைய படங்களோடு ஒப்பிட்டு சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பது அருமை.
    காலத்தின் நாயகன் என்ற ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நேர்காணல்களின் சிறுதொகுப்பினை தமிழில் கவிதா முரளிதரன் கொடுத்த விதம் நன்று. தமிழ் வாசகருக்கு புரியும் வகையில் தமிழ்படுத்தி இருப்பது சிறப்பு. இக்கட்டுரையில் பல்வேறு பட்ட செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
  பிளாக் மாஜிக் அர்சா மின் காமிரா குறித்த செய்திகளை ராஜ்குமார் அளித்துள்ளது நடப்பு கேமிரா செய்தியாக உள்ளது. கருந்தேள் ராஜேஷின் சென்ற இதழ் தொடர் கூர்முனையற்ற  நம் கதைகள் என்னும் பகுதியில் பகத் ஃபாஸிலின் நடிப்புத்திறன் , அவரின் செயல்பாடுகள் , என பல்வேறு சிறப்புகளைக் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் கதை இடம்பெறுகின்ற விதத்தினை குறிப்பிட்டமை நன்று.
Brindha Sarathy  அவர்கள் எழுதியுள்ள கதைக்கரு வசனங்கள் என்னும் பகுதி, எவ்வாறு கதைக்கரு வசனங்கள் எழுதப்படுகின்றது , இலக்கியத்தோடு ஒப்பிட்ட விதம் , தோன்றும் முறை , என குறிப்பிட்டது ஆகச்சிறப்பு. நாயகன், அஞ்சான், ரமணா, ஆனந்தம் என வசன முறையை தெரிந்து கொள்ள இப்பகுதி ஏற்படுத்தி தந்துள்ளது.
  பிருந்தா சேது அவர்கள் எழுதியுள்ள ரசிகப்பார்வைகளில் என்னும் கட்டுரை பல்வேறு உலகப்படங்களின் கதை , தான் பார்க்க வேண்டி செய்த அனுபவங்கள் , குறிப்பிட்ட படங்களைக் குறிப்பிட்டு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றார். உலக சினிமாக் குறித்து இளம் வாசகர்கள் அறிந்து கொள்ள இப்பகுதி உதவியாக இருக்கும்.
  கிங் விஸ்வாவின்  பறக்க கிடைக்கும் வானம்  என்னும் பகுதியில் அமெரிக்க வாழ் மக்களுக்கான திரைப்படங்கள், The Red Turtle  குறித்த படத்தினை பல்வேறு கோணங்களில் ரசித்த பார்வையினை மிகத்தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் நோக்கில் எழுதியுள்ளமை முக்கியமானதாக உள்ளது. இக்கட்டுரைக்கான படமும் , ஓவியமும் நன்றாக உள்ளது. டூடெக்கின் முதல் கணினி வரைகலை அனிமேஷன் படம் இதுதான் என குறிப்பிட்டு கதை வளர்ச்சி , நுணுக்கங்கள் என குறிப்பிட்டுள்ளமை நன்று.
  கேமர் இமேஜ்-  ஒரு துளி நட்சத்திரம் குறித்த கட்டுரை ஒளிப்பதிவு குறித்த நல்ல கட்டுரையாக உள்ளது. தங்கத் தவளை விருது வென்ற the piano திரைப்படம் ஒளிப்பதிவு ஸ்டுவர்ட் டிரைபர்க்கு  வெள்ளித் தவளை விருது பெற்ற ஒளிப்பதிவாளர் குங் சாங் வீ குறித்துப் விரிவாக அழகாக சொல்லியுள்ளது வாசகர்களை கவர்வதாக உள்ளது. பல்வேறு தலைப்புகளின் வழி ஒளிப்பதிவு நுட்பங்களை சொல்லியுள்ள விதம் அருமை.
  Old boy  என்ற கொரிய படம் குறித்தும் , அதில் தன்னை ஈர்த்த வூ ஜின் கதாபாத்திரம் மிக அழகாக தெளிவாக வன்மத்தின் காதலர்கள் என்ற கட்டுரையில் அகிலாஷ் சூறாவளி கூறியுள்ளது படம் குறித்தான எண்ணவோட்டங்களை தருவதாக உள்ளது.
  அய்யப்ப மகாராஜனின்  Tyrannosaurus படம் குறித்த மனிதன் என்பவன் மனிதனாகலாம் என்ற கட்டுரையில் ஜோசப் , ஹன்னா, சாமுவேல் குறித்த கதாபாத்திரம் , திரைக்கதை , இயக்கம் , மொழிநடை என  பலவிதமான கருத்துக்களை அறிய முடிகின்றது.
என்னை பாதித்த உலக சினிமாவில் இந்த இதழில் இயக்குநர்  சசி அவர்கள் குறிப்பிட்டுள்ள படம் After Shock  என்ற சீனப்படமாகும். இப்படம் தனக்குள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியது என்றும் , அப்படம் குறித்த எண்ணங்களை மிக விரிவாக பதிவு செய்துள்ளமை நன்று.
  பிங்க் எனும் படம்குறித்த ஈரோடு கதிர் எழுதிய கட்டுரையில் அவருடைய எண்ணங்கள் , சமூகப்பிரக்ஞை , சினிமா எதிர்கொள்ளும் விதம், கதை என பயணித்து கூறியமை சிறப்பு. பிரதீப் செல்லதுரை எழுதியுள்ள களவும் கற்று மற என்னும் பகுதியில் வங்கிக்கொள்ளை , பல்வேறு படங்கள்  , கொள்ளைச் சம்பவம், பணயக் கைதிகள் என்று குறிப்பிட்டு தமிழ் படங்களின் நிலை எடுக்கப்பட்டுள்ள விதம் என நாகரிகமாக சிலவற்றை பதிவு செய்துள்ளார்.
என இப்படியாக இந்த மாத இதழ் பல்வேறு வகையான ரசிக்கத்தக்க, வித்தியாசமான செய்திகளை கூறும் இதழாக மிளிர்ந்துள்ளது கவனத்திற்குரியது..   வாழ்த்துகளுடன்
மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com

0 Response to "அயல்சினிமா செப்டம்பர் 2017"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel