நிஜத்தை புரட்டியெடுத்த  தீரன் சமீபத்திய வீரன்

Trending

Breaking News
Loading...

நிஜத்தை புரட்டியெடுத்த  தீரன் சமீபத்திய வீரன்

நிஜத்தை புரட்டியெடுத்த  தீரன் சமீபத்திய வீரன்
நிஜத்தை புரட்டியெடுத்த  தீரன் சமீபத்திய வீரன்
    சதுரங்க வேட்டையில்அனைவரது  கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் எச்.வினோத் மற்றும் சிறுத்தையில் போலிஸாக நடித்த கார்த்தி இருவரின் கூட்டணியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது தீரன் திரைப்படம். வழக்கமான போலீஸ் கதைதான் ஆனால் உண்மைச் சம்பவங்களை வைத்து ,புள்ளி விவரங்கள் மற்றும் அந்த கேஸ் சென்ற விசாரணை நடைமுறை என பலதிறப்பட்ட வகையில் ஆய்வு செய்து ஒரு சிறந்த திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத்  . 1995 முதல் 2005 வரை நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைகள் குறித்த நிகழ்வினை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ,ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த வீடுகளை நோட்டமிட்டு பிறகு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. அதன் உச்சகட்டமாக தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு தமிழக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. வட இந்தியாவிற்கு சென்று முக்கிய குற்றவாளிகள் இருவரை சுட்டும் மேலும் இருவரை கைது செய்தும் வந்தனர்.  தண்டணை வழங்கப்பட்டது . இச்சம்பவத்தை அசத்தலான திரைக்கதையின் மூலமாக வேற லெவல் படமாக மாற்றியுள்ளனர் தீரன் திரைப்படக் குழுவினர். 
    
   என்கவுண்டர் ,ஆக்ஷன், துப்பறியும் கதை , நேர்மையான போலீஸ் அதிகாரி, என்ற வகையில் ஒரு சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாக தீரன் திரைப்படம் உள்ளது. வலுவான திரைக்கதை , மாறுபட்ட இடத்தேர்வு, அசத்தலான இசை , தத்ரூபமாக எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு , சுறுசுறுப்பை கொண்டு வரும் படத்தொகுப்பு , நடிப்பு என்று பல்வேறு வகைகளில் அருமையான எண்டர்டைமண்ட் படமாக இப்படம் இருக்கிறது. நடிப்பில் பொருத்தமான காவல்துறை கண்காணிப்பாளராக கார்த்தி அருமையாக பொருந்தி கதையை உள்வாங்கி நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டுள்ளார். அவருடைய திரைவாழ்வில் மறக்கமுடியாத திரைப்படமாக இத்திரைப்படம் விளங்கும். ரகுல்ப்ரீத் சிங் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் செமையாக நடித்துள்ளார். கார்த்திக்கு பிறகான இடத்தில் போஸ் வெங்கட் தன்னுடைய பணியை சிறப்பாகவே செய்து அசத்தியுள்ளார். ஹீரோயினுடைய  தந்தையாக மனோபாலாவும் , சத்யன் போன்றோரும் தன் பங்கை செலுத்தியுள்ளனர். வில்லானாக நடித்த அபிமன்யூ சிங் அழுத்தமான நடிப்பை  வெளிப்படுத்தி உள்ளார். 
   இசையில் ஜிப்ரான் இனிமை தரந்துள்ளார். பின்னணி இசை ,சண்டைக்காட்சிகள் சார்ந்த இடம் ,பல்வேறு பயணம் போன்ற இடங்களில் வித்தியாசமான இசையைக் கொடுத்து நம்மை கவர்ந்திழுக்கின்றார். தன்னுடைய அழகான ஒளிப்பதிவால் கவனம் பெற்றுள்ளார் சத்தியன் சூரியன் . வட இந்தியாவைக் காட்டும் இடத்திலும் இவருடைய ஒளிப்பதிவின் வீரியத்தை நாம் ரசிக்க முடிகின்றது. திலீப் சுப்ராயனின் ஆக்ஷன் சூப்பராக உள்ளது. காட்சிகளை அழகாக அடுக்கி நம்மை வேற லெவல் திரைப்பட அனுபவத்தை பெற வைக்கிறார் படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன். கதிரின் கலை வண்ணத்தில் நாம் அசந்து போகின்றோம். 
   கதை இதுதான் 7.6.1995 அன்று வாலாஜாவில் வட இந்திய கொள்ளைக்காரக் கும்பல் ஒரு குடும்பத்தைக் கொலைசெய்துவிட்டு செல்கின்றனர். 1999 ஆம் ஆண்டு சென்னை அசோக்நகர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சிக் காட்சி என படம் நகர்கிறது. வீட்டுக்கு வரும் தீரனிடம் தங்கை செய்யும் சேட்டைகள் ,+2 பெயிலாகி வீட்டில் இருக்கும் ஹீரோயினாக ரகுல்ப்ரீத் சிங் அறிமுகம் ஆகின்றார். தீபாவளிக் காட்சிகள், முகத்தில் வட்டம் போட்டு எப்படி என்று பிரியா (  ரகுல்ப்ரீத் சிங் )கார்த்தியிடம் கேட்கும் விதம் அருமை. பேச வந்த கார்த்தியிடம் அப்பாகிட்ட சொல்லவா என்று பிரியா சொல்ல அசடு வழிகின்றார் கார்த்தி. கஷ்டப்பட்டு படிச்சாதான் பாஸாக முடியும் என்று சொல்வது  ,பிரியாவிற்கு பாடம் சொல்லித் தருகிறேன் என்று கார்ர்த்தி செய்யும் அலப்பறையும் ,பிரியா செய்யும் அட்டகாசங்கள்  சிரிக்க வைக்கின்றது. ஜ லவ் யூன்னு சொல்லு என்றும் நாலு விட்டுவிடுவேன் என்று சொல்லும் வழக்கமான காட்சிகள் நம்மை  நெலிய வைக்கின்றது. 
  கொஞ்சிப் பேசிக்கொண்டு இருக்கும் போது தந்தை மனோபாலா பார்த்து விடுகின்றார். திருமணம் நடத்தல் , நெருக்கமான காட்சிகள் , என படம் விரிகிறது. 2.37 மணிநேரம் படத்தில் மேற்சொன்ன காட்சிகள் 25 நிமிடம் கடந்து விடுகிறது. பிறகு தீரன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கின்ற காரணத்தால் பல்வேறு இடங்களான தூத்துக்குடி,மதுரை,நெல்லை ,மன்னார் குடி  என கதையை நோக்கி இயக்குநர் மெல்ல ரசிகர்களை அழைத்துச் செல்கின்றார். 5.2.2003 இல் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் ஒரு குடும்பத்தை  கொள்ளைக்காரர்கள் தாக்குகின்றனர். அப்போது தீரன் பொன்னேரிக்கு பணிமாற்றப்படுகின்றார். மறுபடியும் கொள்ளை நடக்கிறது .அப்போது தீரன் தன் செயலில் ஆர்வத்தை கூட்டுகின்றார். கொலை மற்றும் கொள்ளை நடந்த இடத்தில் தீரன் சென்று நடந்ததை யூகித்து அறிகின்றார். 
      இப்படி தொடர்ந்து வருகின்ற  கொள்ளைகளால் தொலைக்காட்சியில் குற்றம் நடந்தது என்ன என்று கூட நிகழ்ச்சி காட்டப்படுகின்றது. பல்வேறு குற்றவாளிகளை போலீசார் விசாரிக்கின்றார். பாதிக்கப்பட்டவர்களை தீரன் சந்திக்கின்றார். அப்போது மூதாட்டி சொல்லும் வார்த்தைகளில்  தீரன் கொள்ளைக்காரர்கள் மீது கொதிப்படைகின்றார். தீரன் எடுக்கும் முடிவுகளுக்கு உயர் அதிகாரிகள் உறுதுணையாக இல்லாததால் வேதனை அடைகின்றார். உங்களால் பிடிக்க முடியாது என்று சொல்லும் போதெல்லாம் தக்க பதில்களை தந்து நகர்கிறார் தீரன். 5 .1.2005 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரில்  மனைவியிடம் கொஞ்சல் நடக்கிறது. பிரியா கர்ப்பமடைகிறார். 9.1.2005 அன்று வட இந்திய கும்பல் பொருட்களை விற்பனை செய்யும் விதத்தில் சென்று வீட்டை நோட்டமிட்டு செல்கின்றனர். வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றனர், நாய் மற்றும் பிறவற்றை கவனித்து செல்கின்றனர். மூகமூடி கொள்ளையர்களால் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்படுகின்றார். பொதுமக்கள் ,என்று பலபேர் தன்னுடைய கருத்தை ஊடகத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். வரலாற்று நிகழ்வுகள் வரிசையாக காட்டப்படுகின்றது. கைரேகையை மட்டுமே வைத்துக்கொண்டு வட இந்தியாவிற்கு சென்று பல்வேறு இடங்களில் கொள்ளையர்களின்  கைரேகை பொருந்துகிறதா என்று பார்க்கின்றனர். கொள்ளைக்காரர்களை பிடிக்க கடுமையான முறையில் தேடுதல் வேட்டை செய்கின்றனர் போலீசார். 
     ஒரு கைரேகை பொருந்துவதைக் கண்டு மகிழ்கின்றார் தீரன். போலீசாரை உயர்வாக காட்டும் இத்திரைப்படம் சிலவிடங்களில் அவர்களது  இயல்பையும் சுட்டிக்காட்டுகின்றார் இயக்குநர். தமிழக போலீசார்ன்னா சரியாக இங்கிலீஸ் பேச மாட்டார்கள் என்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். சாலையில் தடுப்பு ஏற்படுத்தி தேடுகின்றனர். இரவில் மழையில் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக காட்சிகள் நகர்கிறது. ஊரில் போஸ் வெங்கட் வீட்டில் கொள்ளை & கொலை நடக்கிறது .பிரியா வந்து குழந்தையை காப்பாற்ற முயலுகின்றார் அப்போது வில்லன் அவளைத் தாக்கிவிட்டு  தப்பித்து விடுகின்றார். தீரனும் வில்லனைப் பிடிக்க முயலுகின்றார் ஆனால் பிடிக்க முடியவில்லை. 
    பிரியாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். சுயநினைவை இழுந்துவிட்டதாக டாக்டர் சொல்கிறார். மனைவியைப் பார்த்து கண்கலங்குவது திடீரென்று கோபம் கொப்பளிக்க பயணமாவது என கார்த்தி நடிப்பில் அமர்களப்படுத்துகின்றார். வட இந்திய மக்களின் வாழ்விடம், வாழ்க்கை முறை , போன்றவை காட்டப்படுகின்றது. வில்லன் இருக்கின்ற இடத்திற்கு போலீசாருடன் செல்கின்றார் கார்த்தி. ஊர் மக்கள் எல்லோரும் போலீசாரை தாக்க அருமையாக காரில் கொம்பைப் போட்டு தப்பிக்க  தீரன் வழி ஏற்படுத்த  வந்துவிடுகின்றனர் . ஒருவரின் துணையோடு அவ்வூர் மக்களுக்கு உதவி செய்யும் நபரை சாதுர்யமாய் கைது செய்கின்றனர். அவரை எவ்வளவு அடித்தாலும் நான் ஒரு அப்பாவி என்று மட்டுமே சொல்கிறார். மேலதிகாரிகள் ஒத்துழைக்காத நிலையில் தீரன் வேதனை அடைகின்றார். 
   மனித உரிமை கமிஷனில் ஆஜராகி தன் நிலையை எடுத்துரைக்கின்றரார் தீரன். Pupwas ஊருக்கு போலீசாருடன் செல்கின்றார். பச்சைத் தொப்பியின் குறியீட்டால் அறிந்து பஸ்ஸில் வில்லனின் கூட்டாளிச் செல்வதை அறிந்து அவனை மடக்கி கைது செய்கின்றனர். அருமையான படக்காட்சிகள் நம்மை கவர்கின்றது. நீதிமன்றக்காட்சிகள் …என படம் நகர்கிறது. வில்லன்  அபிமன்யூ சிங் தப்பித்து செல்கின்றார். இரவில் போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும்  இடையில் நடக்கும் சண்டைக்காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. பிரியாவின் நிலை குறித்து மனோபாலா சொல்ல வேதனை அடைகின்றார் தீரன். மேலே இருந்து கொண்டு கொள்ளையர்களைத் தாக்கும் விதம் சூப்பர். வில்லன் குறிப்பறிந்து தப்பித்து ஓடுகின்றார். பின் தொடர்ந்த தீரன் மீது மண் அள்ளி முகத்தில் போட  நிலைதடுமாறி கஷ்டப்படுகின்றார் தீரன். இறுதியில் வில்லனை அடித்து விட்டு கயிறில் கட்டி குதிரையில் இழுத்து வருகின்றார் தீரன். லஞ்ச ஒழிப்புத் துறையால் இருக்கும் தீரனை காண சல்யூட் அடிக்கின்றார் தீரனின் நண்பனுடன் வந்த  இளைஞர். போலீசார் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியுள்ளமை சிறப்பு. விறுவிறுப்பாக இருக்கின்ற தீரன் அதிகாரம் ஒன்று …ரசிகர்களை கவர்ந்துள்ளது…தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கின்றது. அருமையான திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தலால் நாம்  சீட்டின் நுனிக்கே வந்து கதையோடு ஒன்றிப் போகிறோம்..  விரைவில் தீரன் அதிகாரம் இரண்டை எதிர்பார்க்கிறோம் இயக்குனர் எச் வினோத்திடம்….படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்….
மயிலம் இளமுருகு
CELL - 7010694695
19.11.2017
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்

0 Response to "நிஜத்தை புரட்டியெடுத்த  தீரன் சமீபத்திய வீரன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel