லட்சுமி குறும்படம் விமர்சனம்

Trending

Breaking News
Loading...

லட்சுமி குறும்படம் விமர்சனம்

லட்சுமி குறும்படம் விமர்சனம்

லட்சுமி குறும்படம் விமர்சனம்
     லட்சுமி குறும்படம் ஒரு குறும்பு படமாகவே காட்சியளிக்கின்றது. இதைப்பார்த்தவுடன் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் மேலோங்கி தட்டையான செய்திகளுக்கு மோடிமஸ்தான் வேலை ஏன் என்ற கேள்வி ஏற்படுகிறது. ஆண் இப்படத்தில் தவறு இழைப்பதாக காட்டப்படவில்லை. ஆனால் அதன் சூட்சுமம் வைக்கப்பட்டு பெண் செய்கின்ற அடாவடித்தனம் ஏன்? என்று கேள்வி இயல்பாகவே மனதை மடக்கி விடுகிறது.  விருது ,பிரபலம் போன்றவற்றிற்காக எதை வேண்டுமென்றாலும் எடுக்கலாமே ? என்று யோசித்ததின் விளைவாகவே இப்படம் தெரிகிறது. 
   கற்பிதங்களை உடைப்பது நியாயம் என்றாலும் அதனை இத்தனை விகாரத்தோடு காட்ட வேண்டிய அவசியம் எதற்காக என்று மனதில் துடுக்கென்று தோன்றிவிடுகின்றது. இப்படம் பார்ப்பவரை தவறிழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றது. ஒரு திருமணமான பெண்னை எளிதில் தன் இச்சைக்கு சம்மதிக்க வைத்துவிடலாம் என்று காட்டுவது சமூக பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது. இது போன்ற குறும்படங்களால் இன்னும் தவறிழைப்பது கூடுமேயன்றி குறைய வாய்ப்பில்லை.     

      முன்மாதிரி படங்கள் வெளிவரும் சூழலில் இப்படிப்பட்ட படங்களும் வெளிவந்து பிரபலமாவது விந்தையாக உள்ளது. வேதனை என்னவென்றால் இன்றைக்கு விலையில்லா கணினி & மொபைல் போன்று வளர்ந்துவிட்ட நிலையில் இளைஞர்கள் இப்படியானவற்றை பார்த்து கெட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது நினைக்கத்தக்கது. கிளர்ச்சியூட்டும் காட்சிகள் வைத்து விருது வாங்குவது மற்றமொழி , வேறு நாட்டினருக்கு பொருத்தமானதாகவே இருந்துள்ளது. ஆனால் நம் தமிழ்ச்சூழலில் இது தேவையா ? என்று நியாயமான கேள்வி உருண்டோடுகிறது. குடும்பங்களின் சிதைவை ,சிக்கலை கட்டமைப்பதாகவே இக்குறும்படம் இருக்கிறது. 
    கதையில்தான் கோளாறு என்றாலும்  ,காட்சியமைப்பிலும் படுமோசம். மொன்னைத்தனமான காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இயல்போடு ஒட்டாமல் ,மேட்டிமைத்தன சிக்கல் , விடயங்கள் போன்றவற்றில்  பல்லிலிப்பவளாகவே  இந்த லட்சுமி தெரிகின்றாள். ஒரு நல்ல விடயத்தை மறைக்க இன்னொன்று பிரபலமாகின்ற இக்காலக்கட்டத்தில்   இப்படம் நகர்ந்துள்ளவிதம் சற்று வித்தியாசமானதாக உள்ளது. தமிழ் படைப்பாளர்கள் தயவுசெய்து இதனை முன்மாதிரியாக வைத்து தொடர்ந்து எடுத்துவிடமாட்டார்கள் என்று நம்புவோம்.  பிறழ்நிலையை பித்தலாட்டக் கோணத்தில் தெரிந்த லட்சுமி சறுக்கியவளே அன்றி சாதனையானவள் அல்லள்….
மயிலம் இளமுருகு
19.11 2017
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்

0 Response to "லட்சுமி குறும்படம் விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel