இது எங்கள் வகுப்பறை
ஆசிரியர் – வே.சசிகலா உதயகுமார்
பதிப்பகம்- புக்ஸ் ஃபார் சில்ரன் ,சென்னை
முதல்பதிப்பு - செப்டம்பர் 2017
விலை ரூ.160, பக்கம் - 184
வந்தவாசியில் உள்ள சன்னதி நிதியுதவிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வே.சசிகலா உதயகுமார் அவர்கள் வழக்கமான கற்பித்தல் முறையில் சிவமாற்றங்களையும் ,மாணவர்கள் பங்கேற்பு ,வகுப்பறைச் சூழலை மாற்றியமைத்தல் ,ஆர்வத்தைத் தூண்டல் என பள்ளியில் ஆசிரியர்கள் ,தலைமை ஆசிரியருடன் உதவியுடன் பல்வேறு செயல்பாடுகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். தான் பணியாற்றும் பள்ளியில் செய்த அனுபவங்களை முகநூலில் பகிர்ந்து கொண்டு வந்திருந்தார். முகநூலில் பதிவிட்டு வரும் காலத்தில் கல்வியாளர்கள்,எழுத்தாளர்கள் , ஆசிரியர்கள்,கல்வி ஆர்வலர்கள் என போன்றோர்களால் விரும்பி கவனிக்கப்பட்ட பதிவாக இவருடைய பதிவுகள் இருந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பேரா. ச.மாடசாமி அவர்கள் வழிகாட்டுதலோடு ,எழுத்தாளர் கமலாலயன் அவர்களின் செம்மைபடுத்தலோடு ,கலைச்செல்வன் , முத்தையா வெள்ளையன் ,இரத்தின விஜயன் ,மதுரை சிவா , பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜன் போன்றோர்களின் உதவியோடு வெளிவந்துள்ள நூலே “ இது எங்கள் வகுப்பறை “ என்ற நூலாகும். தற்கால கல்வி , மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவு , கற்பித்தல் முறையில் வெளி , தளம் என பலவற்றிலும் இந்நூல் உரிய கவனம் பெறுகிறது.
ஆண்டு துவக்கம் முதல் இறுதிவரஞ ஆசிரியரின் வகுப்பறையில் பயணம் செய்த அனுபவத்தை இப்புத்தகம் நமக்கு தருகின்றது. பதட்டம் ,மகிழ்ச்சி,வளர்ச்சி ,கற்றல் அடைவு ,சமூகப்பிரக்ஞை,இயற்கை ஆர்வம் என பலவற்றை தன் மாணவர்களுக்கு அனுபவத்தின் மூலமாக விதைத்துள்ள ஆசிரியரின் அரிய ஆர்வ உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. இந்நூலைப் படிப்பவர்கள் தன்னுள்ளும் மாற்றங்களை உணர்வர். சிலவற்றை பின்பற்றவும் செய்வர் என்பது உறுதி.
இந்நூலில் ஆசிரியரின் செயல்பாடு ,கல்வி ,மாணவர்களின் வெளிப்பாடுகள் என மொத்தம் 82 தலைப்புகளின் வழியாக உரிய புகைப்படத்தோடு நூலாக்கம் பெற்றுள்ளது. நூலாசிரியர் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார். பேச்சு நடை,எழுத்து நடை என பலவிதத்தில் அருமையாக நம்முடன் பயணிக்கிறது இப்புத்தகம்.
பேரா. ச.மாடசாமி அவர்களின் அணிந்துரை படிப்பவரை வழிப்படுத்துவதாகவும் , ஆர்வம் ஏற்படுத்துவதாகவும் ,ஒரு பாணனைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. உடைபடும் சத்தங்களை வழக்கமான முறையில் கொடுத்துள்ள முறை எண்ணுதற்குரியது. எதையெல்லாம் குறிப்பிட வேண்டுமோ அதனைக் குறிப்பட்டு படிப்பவருக்கு வழி அமைத்துள்ள தந்துள்ள விதம் அருமை. முன்னுரையில் ஆசிரியர் சசிகலா அவர்கள் நூல் தோன்றிய காரணம் ,அதற்கு உறுதுணையாக இருந்துள்ளவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். குடும்பத்திற்கும் மரியாதை கொடுத்துள்ளமையை நாம் பார்க்க முடிகின்றது.
தான் பணியாற்றும் பள்ளியை தன் வரலாறு கூறும் முறையில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றார். தான் பணியேற்கும்போது தன் முன்னுள்ள சவால்கள் என்னவென்று தெரிந்து வைத்துள்ளார் ஆசிரியர். சன்னதிப் பள்ளியில் படித்தது ,ஆசிரியரானது என வாழ்க்கையைச் சொல்லி ஒரு மாணவி ,எப்படி ஆசிரியரானார் என தன் பள்ளிப்பருவ நிலைகள் ,தன்னுடைய ஆசிரியர்களின் பெயர்பட்டியலை தந்து நினைவுபடுத்தி நன்றியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் பணியேற்ற நாளின் நிகழ்வுகளை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வருகிறார். ( பக் 21) தனக்கு பாடமெடுத்த ஆசிரியருடன் தானும் சக ஆசிரியராக பணிபுரிகின்ற நிலையை நினைத்து பெருமையாக பேசிச் சென்றுள்ளார். தான்பட்டதுன்பத்தை தன் மாணவர்கள் அடையக்கூடாது என உறுதிமொழி , தற்போதைய கல்வி சார் சவால்கள் என அனைத்திலும் நேர்மையோடு இருந்துள்ளமை அருமை.
மாணவர்களிடத்து ஓவியம் ,கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கற்பித்தலில் சொல்லிக்கொடுத்துள்ளார். குழந்தைகளை சில சமயங்களில் கண்டித்தாலும் ,அன்போடு அரவணைத்த விதம் ,மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் , பெற்றோர் உடனான நட்பு என பலவற்றை இப்புத்தகம் பேசிச் செல்கிறது. ஆசிரியர் சிலா ஒருங்கிணைத்த கல ல வகுப்பறை ஏற்படுத்திய பன்முகப்பயிற்சியால் பலன்பெற்று அதனை மாணவர்களிடத்து விதைத்துள்ளார். காலவோட்டத்தில் எல்லாம் மாறிய சூழலில் குழந்தைகளிடத்து மட்டும் கற்பித்தலில் ஒரே தொனி , அதே வராத்தைகள் என மாற்றமில்லாமல் இருத்தல் வேதனை அளிப்பதாக உள்ளதென்கிறார்.
தன் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியும் , பயிற்சியின் பலனாவது தன் மாணவர்களுக்காக மட்டுமே என எடுத்துரைத்துள்ளார். மனதளவிலும் பயிற்சி பெறல் , புரிதல் என ஆசிரியர்கள் மாற வேண்டிய நிலையை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிடலில் தன்னை மாற்றி கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளமை அருமை. கல்வி ஆண்டின் முதல் நாள்தயக்கம் , பணி , செயல்பாடுகள் , கதை கூறும் வகையில் பேச்சு வழக்கு என 54 மாணவர்களின் மாற்றம் , மாற்றம் தன்னளவில் நிகழவேண்டுமெனக் கூறியது எண்ணத்தக்கது.
குழந்தைகள் வணக்கம் செலுத்தும் பழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி ஹேப்பி மார்னிங் ,ஆப்டர்நூன் , ஈவனிங் என முறைப்படுத்தியவிதம் , மாணவர்களின் பேச்சு ,சிரிப்பு ,நகைச்சுவை போன்றவற்றை இந்நூல் நமக்கு தருகிறது. விட்டுப்போன வீட்டுப்பாடம் என்னும் பகுதியில் ஆகி என்ற மாணவன் சொன்ன போது தை ,அருமை என இப்படி மாணவர்களை பேச வைத்தும் ,அவர்களின் மன விருப்பப்படி அவரவர்க்கான திறன்களை வளர்க்க செயல்படுவது சிறப்பு.
பாடப்பொருள் சார்ந்த வீட்டுப்பாடம் , அதனுள் மாணவர்களின் பக்கேற்றலை உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பள்ளிக்கு லிங்கராஜ் என்பவர் செய்து கொடுத்த கணினி மையக்கல்வி ( ஸ்மார்ட் கிளாஸ் )பயன்படுத்திய விதம் , உதவியருக்கு நன்றி கூளியமை ,மாணவர்களை ஒருங்கிணைத்து கதையும் நானே ,முடிவும் நானே என்பதில் மாணவர்களை ஒருங்கிணைத்த விதம் ,ஈடுபட வாய்ப்பளித்தல் ,மற்றும் அனைவரையும் உற்றுநோக்கி ஒதுங்கி இருக்கும் மாணவர்களையும் பங்கேற்க வாய்ப்பு தருவது முக்கியத்துவம் பெறுகிறது.
மாணவர்களைப் பாராட்டினால் மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்பது வெளிப்படை. ரகு செய்த களிமண் டைனோசர் என்னும் பகுதி சிறப்பு. வீட்டுப்பாட முறையில் மாதம் ஆர்வத்தைத் தூண்டல் ,குழுக்கள் பிரித்தலின் அவசியம் ,செயல்பாடுகள் ,கதைகட்டு நிகழ்ச்சி , தன் சக ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு ,கதை எழுத பயிற்சி கொடுத்து கற்பனை வளத்தைத் தூண்டிய விதம் அருமை. தளிர்த்திறன் திட்டத்தில் பெற்ற வித்தியாசமான விளையாட்டு ,இப்படியாக விளையாட்டிற்இஉ முக்கிய இடம் கொடுத்து மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
பச்சைக்கிளி செத்துப்போச்சே விளையாட்டின் புரிதல் , விளையாட்டின் மூலம் கற்பித்தலை தன் வசமாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழ் ,ஆங்கில மொழிப்படங்களைக் கற்பிக்கும் முறையிலும் மாற்றம் , புரிதலை ஏற்படுத்துவது, தன்க்கு சில பயிற்சிகள் வெறுப்பைத் தருவதாகவும் ,அதாவது தன் குழந்தைகளிடம் இருந்து பிரிக்கிறதே என வருத்தமுற்று இருந்த சூழலும் பதிவு செய்யந்பட்டுள்ளது. மாணவர்கள் இயல்பாகவே ஏதாவது ஒன்றில் ஈடுபடுவர் என்று விளையாட்டை வகுப்பறைக்கும் கொண்டு வந்தது , அதில் அனைவரையும் பங்கேற்க ஆயத்தப்படுத்தியமை அழகு.
பம்பரம் விடமுயன்று பல்பு வாங்கியது , மாணவர்களின் இன்பங்களையும் வெளிப்படையாக குறிப்பிடுகிறார். எதனைச் செய்தாலும் உடன்பாட்டு முறையில் அணுகி ,குழந்தைகளை உற்சாகப்படுத்தியது , உற்சாகப்படுத்துவது அருமை. ஆசியர்களை மாணவர்கள் எப்படி பார்க்கின்றனர் ,எல்லாம் அறிந்தவர்களாகவே ஆசிரியர்கள் உள்ளனர் என்று கருதுகின்றனர். எது கல்வி என புரியவைத்தல், வினையையும் ( VERB ) விளையாட்டாய் கற்பிக்கும் முறை ,கற்கும் முறையை தெளிவுபடுத்துகின்றது இந்நூல். பல்வேறு சொற்களை அறிதல், பயன்பாடு ,செயல்களில் , அனுபவங்களின் மூலமாக கற்றல் ,அனுபவங்களைப் பெறுவதின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளமை நன்று. பாடத்தலைப்பிற்கேற்ப ஒரு நிகழுவை செயல்படுத்தி பிறகு பாடப்பொருள் விளக்குவது குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது.
நன்றி
புதிய புத்தகம் பேசுது
0 Response to "இது எங்கள் வகுப்பறை ..நூல் மதிப்புரை"
Post a Comment