மெர்சல் -விமர்சனம்

Trending

Breaking News
Loading...

மெர்சல் -விமர்சனம்

மெர்சல் -விமர்சனம்

 மெர்சல் -விமர்சனம்
கமர்ஷியல் ,அரசியலில் கால்பதிக்கும் மெர்சல்
தீபாவளிக்கு அதிக படங்கள் ரிலீஸாலது வழக்கம் ,ஆனால் அதிக படங்கள் இல்லாமல் குறைவான படங்களோடு வெளிவந்து அசத்தலாக வசூல் செய்து வருகின்றது விஜயின் மெர்சல் திரைப்படம். ஏற்கனவே தெறி என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த அட்லி இயக்கியுள்ள படமென்பது கூடுதல் சிறப்பு. நடிப்பு : விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால்,S.J சூர்யா,சத்யராஜ் ,மொட்டை ராஜேந்திரன்,வடிவேலு, கோவைசரளா , காளி வெங்கட் , இசை : ஏ.ஆர்.ரஹ்மான்,ஒளிப்பதிவு : விஷ்ணு, திரைக்கதை : அட்லீ, விஜயேந்திர பிரசாத்,போன்றோரின் உழைப்பில் வெளிவந்து ,கமர்ஷியல் ரீதியாக வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல்.
   படத்தின்   கதை
மருத்துவர்கள் கடத்தப்படுகின்றனர். வடிவேலு இந்தப்படத்தில் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார். இந்த பஸ் வருமா என்று கேட்க அதற்கு இன்னொருவர் அது ஆம்புலன்ஸ் எனக்கூறி விடுகின்றார். சத்யராஜ் தலைமையில் விஜய் இருக்கும் இடம் அறிந்து அவரது வீட்டை ரவுண்டு கட்டி கைது செய்கின்றனர். அப்போது விஜய் கையைத் தூக்கி அங்கிருக்கும் மக்களைப் பார்த்து கைஅசைப்பதாக இருப்பது பழைய தலைவா படத்தை நினைவுபடுத்துகின்றது.
ஏன் விஜய் கைது செய்யப்பட்டார் என்பதற்கான விளக்கம் காட்டப்படுகின்றது. அதாவது மாறன் என்ற மருத்துவர் விஜய் ரூபாய் .5 மட்டுமே பெற்றுக்கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்கின்றார். இத்தகைய மனிதநேயத் தொண்டிற்காக பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் அவருக்கு விருது கொடுக்கப்படுகின்றது .அதனால் விஜய் பாரிஸ் செல்கின்றார். வேட்டியில் பார்த்த அங்கிருந்த அதிகாரிகள் ,அவரை விசாரணை அறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே விஜய் யார் என்று தெரியாமல் தரக்குறைவாக நடத்துகின்றனர். அப்போது கண்ணாடியில் இருந்து பார்க்கின்றார் மாறன். ஒரு பெண் கீழே விழுந்து விடுகின்றார். உடனே விசாரணை அதிகாரிகளை அடித்து விட்டு கீழே வந்து அப்பெண்ணிற்கு முதலுதவி செய்கின்றார். அவர் மருத்துவர் என்று தெரிந்தவுடன் விசாரணை செய்தவர்கள் மன்னிப்பு கேட்கின்றனர்.
விருது வழங்கும் விழாவில் விஜய் பாராட்டப்படுகின்றார். இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்,  இவரை தன்னுடன் வந்து பணிபுரிய வேண்டுமென அழைக்கிறார். அவரைக் கேவலமான முறையில் திட்டிவிட்டுச் செல்கின்றார் மாறன்.  காஜல் அகர்வால் அறிமுகம் செய்யப்படுகின்றார். வடிவேலு காமெடி செய்கிறார்  Body wash பண்ணிட்டு வரேன் எனக் கூறுகின்றார். ஏதோ  Hand wash பண்ற மாதிரி. மாறனின் அம்மா என்று அறிமுகம் செய்யப்படுகின்ற  கோவை சரளாவிடம் ஸகைப்பில் விஜய் பேசுகின்றார். அப்போது கிழக்கு பார்த்து நில் என்கிறார் ஏனென்று கேட்க சுத்திப்போடனும் என்று சொல்ல நம் பழக்கத்தை பறைசாற்றி அம்மாவாக மாறுகிறார். பிறகு காஜலிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சண்டை என நகர்கிறது திரைப்படம்.      பாடல் காட்சிகள் லோகேஷன் என அருமையான பதிவு. ஸ்டேடியம் மற்றும் விதவிதமான பல்வேறு அழகிய இடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேஜிக் காட்சி காட்டப்படுகின்றது. பெட்டியில் இருந்து வெளிவருவது, பொம்மையைப் போட்டு புலியை வரவைப்பது பிறகு பொம்மையாக மாற்றித் தருவது என்ற  காட்சியில் அட்டகாசம் செய்கின்றார் விஜய். மருத்துவரை பெட்டியில் வைத்து கத்தியால் சொருகுவது “ நீ பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிய”  என்று சொல்லும் போது திரையரங்கில் விசில் சத்தம் காதை கிழிக்கின்றது. இவர் இறந்தவுடன் S.J.சூர்யா வருகின்றார். நடை ,உடை என அர்ஜுன் சாயலில் தெரிகின்றார் சூர்யா.
சத்யனிடம் பேச்சு , பிறகு சத்யராஜிடம் தொடர்கிறது கதை. சென்னை வருகின்ற விஜய்க்கு உற்சாக வரவேற்பு தருகின்றனர் அப்பகுதியில் வாழும் மக்கள். மொட்டை ராஜேந்திரன் வந்து  வாழ்த்திவிட்டு விஜயை  அரசியலுக்கு  வரவேண்டும் என அழைத்து விட்டு செல்கின்றார். குழந்தைகள் குதுகலத்தோடு பாட மாறனும் அட்டகாசமாய் நடனமாடுகின்றார். இசைத் துள்ளலாக அமைத்துள்ளார் ரகுமான்.
சரியாக 45 நிமிடம் கழித்து சமந்தா டீவி சேனலில் பணியாற்றும் ரிப்போர்டராக அறிமுகம் ஆகுகின்றார். 5 ரூபாய் டாக்டரை நம்ம சேனலுக்கு அழைத்து வரவேண்டும் என்ற பணி கொடுக்கப்படுகின்றது. ரிசப்ஷனிஸட் ஷீலாவைத் தேடி ,பிறகு பாட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார் சமந்தாவுடன் வந்தவர். மாறன் செல்போன் , வாட்ஸாப் , பேஸ்புக் என பல தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தமாட்டர் என்று தெரிந்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று மாறனிடமே மாறனைப் பற்றி விசாரிக்கின்றார் சமந்தா . இக்காட்சியில் இருவரும் செம்மையா நடித்து அப்லஸ் அள்ளுகின்றனர்.
மாறனை தம்பி என்று அழைப்பது ,செல்பி எடுப்பது , டேய் தம்பி என அழைப்பது போன்ற காட்சிகள் அருமை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆட்டோவில் வந்திறங்குவது , பிறகு பேட்டி தருவது , பேட்டியில் அரசியல் பேசுவது PM,CM,MLA,IAS,IPS,  என அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டுமென கூறுவது. இவ்விடத்தில் ரமணா படப்பாணியில்  சில புள்ளி விவரங்களைக் கூறுகின்றார் மாறனாகிய விஜய். 120 கோடி மக்களுள் 120 பேருக்கு மட்டுமே மருத்துவம் கிடைப்பது நாட்டின் வளர்ச்சி இல்லை என்கிறார். மருத்துவம் உடல்பரிசோதனை என்று கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்ற அபத்தத்தை குறிப்பிட்டு பேசுகின்றார். சாதாரண மனிதர்களை நோயாளிகள் ஆக்கும் விதத்தையும்கேள்வி கேட்கின்றார்.

தரமான மருத்துவம் அதுவும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். நீதானே பாடல் அருமையாக நெஞ்சை அள்ளுகின்றது. தெறி போன்று இதிலும் சமந்தா ,விஜய் கெமிஸ்ட்ரி சூப்பர். தன் அப்பாவாகிய காளி வெங்கட்டிடம் பேசிவிட்டு வரும் பெண் லாரி மோதி உயிருக்கு போராடுகின்றார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் & புரோக்கர் ,மருத்துவர் செய்யும் தகிடுத்தனங்கள் நமக்கு ரமணா திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றது.6 இலட்சம் பணம் கேட்டல் , பிறகு மகள் இறந்தவுடன் பெண்னைப் பார்க்க விடாமல் மீதிப்பணம் 1.50 இலட்சம் கட்டுங்கள் எனக் கூறக்கேட்டு அவளது தாய் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.
இக்கதையைக் கேட்ட சத்யராஜ் கூட கண்ணீர் விடுகின்றார். இப்படி இரண்டு உயிர்களை சாகடித்து பரிதாபத்தை தேடிக்கொள்கிறார் இயக்குனர் அட்லி. அந்த பெண் குழந்தை இறப்பிற்கு காரணமாக இருந்த அனைவரும் இறக்கின்றனர். விஜய் வேண்டுமென்றே கைதாகி இருப்பது தெரிந்து சத்யராஜ் கிண்டல் செய்வது அருமை. தொலைக்காட்சியில் பார்த்த சூர்யா மாறனை கொல்ல தன் அடியாட்களை” ஐ “ படத்தில் நடித்தவர் பாடிபில்டர் காசியாக இப்படத்தில் நடித்துள்ளார். மாறனை அடிக்கும் போது இன்னொரு விஜய் வெற்றியாக தோன்றுகிறார். சண்டைக்காட்சிகள் சிரத்தையோடு எடுக்கப்பட்டுள்ளது. தன் மேஜிக்கின் திறனை சொல்ல சத்யராஜ் வாய்விட்டு நக்கலாக அசத்துகிறார்.
மருத்துவர் மாறனிடம் தன் காதலி சமந்தா , அம்மா கோவை சரளா கத்திமுனையில் மிரட்டுகிறார் சூர்யா. வெற்றி வேண்டுமென சீறுகின்றார் சூர்யா. வெற்றியிடம் வடிவேலு பேசிக்கொண்டு இருக்க அச்சமயத்தில் வெற்றியைத் தாக்குகின்றார் மாறன். பிறகு வடிவேலு பிளாஸ்பேக் சொல்கின்றார்.
பஞ்சாபில் குஸ்தி நடைபெறுகிறது. விஜய் குஸ்தி போட்டுக்கொண்டு இருக்கும் போதே அவருடைய மனைவி நித்யா மேனனுக்கு ( ஐஸ்வர்யா ) குழந்தை பிறக்கிறது . பிறகு மதுரைக்கு  சொந்த ஊர் வருகின்றனர்.  ‘தமிழன் ஆளப்போறான் “என்ற பாடலுக்கு திரையரங்கில்  ரசிகர்களும் சேர்ந்து ஆடிப்படுவதை பார்க்க முடிகின்றது. நித்திய மேனனுக்கு அருமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.அவரும்  அதனை சரியாகவே பயன்படுத்தி உள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ள தன் அம்மாவிடம் பந்தையம் கட்டி உள்ளேன் என்று கூறும்போதும் , மாங்கா வாங்கித் தா என்று கூறும்போதும், விஜய் கோவில் கட்ட முற்படுகையில் தீவிபத்து ஏற்பட்டு இருவர் இறந்து விட அப்போது விஜய் நமக்கு கோயிலைவிட மருத்துவமனைதான் முக்கியம் என்று சொல்லும்போது முதல் ஆளாக தன் சங்கலியைக் கொடுக்கும் போதும் , இறுதியில் சூர்யாவால் ஏமாற்றப்பட்டு இறக்கும் தறுவாயில் என பல்வேறு இடங்களில் தன் கதாபாத்திரம் அறிந்து அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளார் நித்யா மேனன்.
இந்தியா முழுக்க மருத்துவத்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற செய்தியை ஆணித்தரமாக சொல்வதாக இப்படம் உள்ளது. மனைவி இறக்க வெளியில் வரும் விஜயை கண்ணாடி பாட்டிலால் தாக்குவது . அதனால் தன் மகனை காப்பாற்ற விஜய் செய்யும் செயல் என திரைப்படம் நகர்கிறது. ஏன் இவ்வளவு ஆயுதம் ,கத்தி என இறங்கியிருப்பது அட்லி-  க்கே வெளிச்சம். சிசேரியன் பிரசவத்தின் அரசியலை இப்படம் தோலுரித்துள்ளது. விஐய் கூடவே இருந்த சிறிய வயது பையனே தற்போதைய வடிவேலு என காட்டப்படுகின்றது .கதையைக்கேட்ட இருவரும் புரிந்து கொண்டு பழிவாங்க ஆயத்தமாகுகின்றனர்.
இறுதிக்காட்சியில் வெற்றி கீழே விழுந்துவிட துள்ளி குதிக்கிறார் சூர்யா. விஜய் மீண்டும் எழுந்து “ செத்து பிழைக்கிறது புதுசு இல்ல என்று சொல்வது பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டவே இக்காட்சி வைக்கபட்டிருப்பதாக கருதுகிறேன். இறுதியில் சிறைக்குச் செல்கிறார் விஜய். பிறகு அரசியலில் பயணிக்க நகர்வதாக படம் முடிந்துள்ளது.
படம் பேசும் அரசியல்.•   M.G.R .பாடல்கள் ,அவரைக் காட்டுவது என மக்கள் மத்தியில் தன் பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. • விஜயகாந்த் போல தற்போது விஜய் தொடர்ந்து கத்தி,தலைவா , தெறி ,பைரவா  என சமூகப்பிரக்ஞை உள்ள படங்களளத் தேர்வு செய்து நடிப்பது.• பாடல், வசனம், என அனைத்திலும் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் அமைத்திருப்பது.  என படம் முமுக்க அரசியல் சார்ந்ததாக உள்ளது.
  படத்தில் உள்ள மைனஸ்.
• கோவில் விழாவில் தீப்பிடித்து கொண்டு எரியும் ,அப்போது விஜய் மேலுள்ள தண்ணீர் டேங்கை உடைக்க முயற்சி செய்யும்போது உடனடியாக செய்யாமல் சற்று நின்றுவிட்டு பிறகு செயல்படுவது ….உயிர் காக்க சீன் போடுவது.• படத்தில் உள்ள காட்சிகள் , கரு என்பவை நம்முடைய தமிழ் திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்துவிடுகிறது. • மூன்று முகம், இந்தியன் , ரமணா, சிவாஜி, கஜினி, அந்நியன் ,விவேகம் என பலவற்றின் கலவை கலந்துள்ளது.• GST குறித்த புரிதலின்றி பொத்தாம் பொதுவான கருத்தைத் திணித்திருப்பது. • மாறன் மற்றும் வெற்றி யார் என்று விஜய் கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டப்படவில்லை
திரைப்படத்தின் பலம்.
• விஜய் நடிப்பு, நடனம் , சண்டைக்காட்சிகள்  என்று முழுவதுமாக       படத்தை புரிந்து நடித்திருப்பது  .    *  கமர்ஷியல் , சிம்பதி , ஆக்ஷன் , இசை என அமர்க்களப்படுத்தியிருப்பது.   *  A.R.  ரகுமான் இசை.விஷ்ணு-  வின் சிறப்பான ஒளிப்பதிவு.      சமூகச்சிக்கல் சார்ந்த பொறுப்புணர்ச்சி • லோகேஷன், அழகான காட்சியமைப்பு , மக்களை புரிந்து கொண்டு இயக்கியுள்ள திறமை .
என பல்வேறு காரணங்களுக்காக இப்படத்தை பொதுப்புத்தி சார்ந்து ரசிக்கலாம்….

மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com 19.10.2017

நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்

0 Response to "மெர்சல் -விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel