ஜெயலலிதா மனமும் மாயையும்

Trending

Breaking News
Loading...

ஜெயலலிதா மனமும் மாயையும்

ஜெயலலிதா மனமும் மாயையும்
ஜெயலலிதா மனமும் மாயையும் 


       ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை கூடிய மட்டும் நேர்மையாக எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் எழுதியுள்ளார். ஜெயலலிதா சொன்ன மாதிரியே அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் தான். தேசிய அளவில் அரசியலில் பெண்கள் குறைவு. தமிழகத்தில் இவருக்கு முன் இப்படி ஒரு ஆளுமை இல்லவே இல்லை. ஆரம்பம் முதல் அவருடைய இறப்பு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையை நிரல்பட சொல்லியுள்ளார் நூலாசிரியர்.
      நூலின் மீது சில விமர்சனம் இருந்தாலும் சொல்ல வந்த செய்திகளை ஆற்றொழுக்காக எழுதியுள்ளார். ஜெயலலிதா சந்தர்ப்பவசத்தால் நடிக்க வந்தவர். காலம் காட்டிய திசையில் பயணிக்காமல் தனக்கென ஒரு பாதையை தானே தேர்ந்தெடுத்தவர். RM வீரப்பன் முதல் பல்வேறு எதிரிகளை எதிர்த்தே வெற்றி பெற்றவர். தன்னுடைய எதிரிகளுக்கு பதவிகளை வழங்கியவர். ( குறிப்பாக RM வீரப்பன், சுப்பிரமணிய சுவாமி ) .
    1989 இல் நேரிடையாக தேர்தல் களம் கண்டவர் ஜெயலலிதா. தொடக்கம் முதலே கருணாநிதிதான் அவரது அரசியல் எதிரி.  2011இல் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த போது கலைஞரை அவர் எதிரியாக நினைக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஆட்சியமைக்கும் போது பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தார். இக்கால கட்டத்தில் அவருடைய எண்ணங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று தோன்றியது.
    அதைப்போன்றே சூழலும் அவருக்கு அமைந்தது என்று கருதினார். ஆனால் மோடி அலையில் பா.ஜா. பெரும்பான்மை பெற்றது . 37 MP க்கள் வைத்திருந்தாலும் தன்னுடைய சூழலை உணர்ந்து அமைதியானார். ஆனால் சொத்துகுவிப்பு வழக்கை கவனிக்காதநிலையில் அது அவருக்கு பலத்த அடியாக அமைந்தது. இப்படி அரசியல் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் ஜெயலலிதா. 1991 இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கும் 2011 ,2016 லிலும்  முதலமைச்சராக இருந்ததற்கும் அதிக வித்தியாசங்கள் இருந்தன.
       மூன்றாவது நான்காவது முறை ஆட்சி அமைத்தபோது பக்குவப்பட்ட முதலமைச்சராக அவர் ஜொலித்தார். சரியான வழிகாட்டுபவர் இல்லாததுதான் அவருடைய இந்த மரணத்திற்கு காரணம். தொடக்கத்தில்  அவர் பட்ட அவமானத்தால் அவர் யாரையும் நம்பத்தயராக இல்லை. உடனிருந்தவர்களின் தவறான வழிகாட்டுதல் ,சுயநலம் போன்ற இத்யாதிகளுக்கு எதிர்காலம் பதில் சொல்லும்.
  ஒரு நூலைப் படித்து முடிக்கையில் ஒரு திருப்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அந்தவகையில் மீண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்காக கண்ணீர் வடித்தேன். வாஸந்தி அவர்கள் ஜெயலலிதாவின் ஆளுமையை எடுத்து தொடுத்து முடித்த விதம் அருமை. வாழ்த்துகள் எழுத்தாளருக்கும் பதிப்பித்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும்…..
   வாஸந்தி அம்மாவிற்கு அன்பு முத்தங்கள்
    ( விரிவான கட்டுரை விரைவில் )
      தமிழக அரசியல் வரலாற்றில் மறுக்கமுடியாத ஆளுமையின் லரலாற்றை உள்வாங்கி கொண்டு….

மயிலம் இளமுருகு
14.02.2017
7. 30 Pm

   

0 Response to "ஜெயலலிதா மனமும் மாயையும் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel