உன் புகழ்பாடும் இலக்கிய மாணவன்

Trending

Breaking News
Loading...

உன் புகழ்பாடும் இலக்கிய மாணவன்

உன் புகழ்பாடும் இலக்கிய மாணவன்








உன் புகழ்பாடும் இலக்கிய மாணவன்
திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் இணையருக்கு
 திருவின்றி உதித்து சூரியனாய் தமிழகத்தின் 
விடிவெள்ளியாய்த் தோன்றினாய்…
 உன் கை படாத இடமோ உள்ளமோ உலகில் இல்லை
13 முறை சட்டமன்ற உறுப்பினவிருட்சமாய் 
உள்ளங்களிலும் வெற்றி கொண்டாய்
மாணவப் பருவத்திலேயே மாணவ நேசனைத் தொடங்கினாய்..
 திரைத்துறையில் ராஜகுமாரிக்கு ராஜகுமாரனாய் தோன்றினாய்..
64 வருடங்கள் 69 திரைப்படங்களில் பணிபுரிந்தாய்…
இலக்கியத்துறையின் நாடகம், கவிதை, சிறுகதை, 
கட்டுரை, பயண இலக்கியம், தன் வரலாறு, கடிதம்
இவையெல்லாம் உங்கள் கம்பீரம் பேசுகின்றன..
 வரலாற்றையும் வரித்துக்கொண்டு வரலாறாய் மாறிப்போனாய்,
உதயசூரியன் சின்னத்திற்காய் உதயசூரியன் நாடகம் எழுதினாய்,
ஏழைகளின் துயர்துடைத்திடவே திட்டங்கள் வகுத்தாய்
உலகைப் புரட்டிப் போட்டன எண்ணங்கள், 
ரிக்ஷாவை 1973ல் தடைசெய்தாய், திருவள்ளுவர் ஆண்டு
 என மாற்றம் ஏற்படுத்தினாய், வள்ளுவர் கோட்டத்தை 
உலகிற்கு பரிசளித்தாய், தமிழ்த்தாய் வாழ்த்தைத் 
தமிழன்னைக்கு கொடுத்தாய், விசாலப் பார்வையால் 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிவு தீபமேற்றினாய்
பதினோரு முதலமைச்சருடன் அரசியல் செய்தாய், 
தகவல் தொழில்நுட்பத்திற்காய் டைடல் பார்க் உருவாக்கினாய், 
மேம்பாலங்களைக் கட்டி இந்தியாவிற்கே வழிகாட்டியானாய், 
தமிழக வளர்ச்சியின் ஒவ்வொரு அடியிலும் உம்  புரட்சிப்பேசும், 
இறுதி வரைக்கும் எழுத்தோடே வாழ்ந்தாய்(ராமானுஜர் தொடரோடு)
எழுத்தில் உலக சாதனை படைத்தாய்(முரசொலியில் உடன்பிறப்பே)
பலமுறை இறப்பைப் பொய்யாக்கி எங்களோடு வாழ்ந்தாய்
உம் பணியோடும் தமிழோடும் எம் நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறாய்
கனத்த இதயத்தோடு உன் புகழ்பாடும் 
இலக்கிய மாணவன் மயிலம் இளமுருகு








(சென்னையில் நடைபெற்ற கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி நிகழ்வு 07.09.2018)


0 Response to "உன் புகழ்பாடும் இலக்கிய மாணவன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel