'கவிமாமணி' விருது - 18.10. 2018, திருவையாறு

Trending

Breaking News
Loading...

'கவிமாமணி' விருது - 18.10. 2018, திருவையாறு

'கவிமாமணி' விருது -  18.10. 2018, திருவையாறு

வணக்கம் 18.10. 2018 வியாழக்கிழமை, தமிழ் ஐயா கல்விக் கழகம் மற்றும் ஔவை அறக்கட்டளை திருவையாறு, நடத்திய கலைமகள் ஔவையார் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 'ஔவை அறம் நூறு' என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மேலும் நூறு கவிஞர்களுக்குக்  கவிமாமணி விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மயிலம் இளமுருகு,  (இணையர்) முனைவர் இரா. மோகனா ஆகிய எங்களுக்குக் 'கவிமாமணி' விருது  அளித்தனர். இச்செய்தியைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஔவை கோட்டம் அறிஞர் பேரவை, தமிழ் ஐயா  கல்விக் கழகம் சார்ந்தோர்க்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.


தமிழ் தமிழரின் அடையாளமே
அதிசயங்களின் அகிலம் நீவிர்
அறிவிலும் அன்பிலும் உலகாள்பவர்
இலக்கியங்களும் உதாரணம் பேசும் உத்தமர்
சிறுவயதிலிருந்தே வயது கூடாதவர்
உம் பெயரிலேயே உரக்கப்பேசும் புலவர்கள் பலர்
 மக்களின் தாயாகவும் சேயாகவும் சாத்தியமெப்படி
உருவத்திலும் உம்மை முதியவராக்கியப் பெருமை
தமிழருக்கே சாத்தியம், அனைத்திலும் உம் முத்திரை
மன்னர்களும் மதித்த அறிவாற்றல்
திரைப்படங்களும் உம் திறம் பேசும்
சங்க இலக்கியத்தில் அதிகம் பேசிய
உன் நாவின் மதி விசாலமானது
கவிதை வித்தைகள் சூரியனையே சுட்டெரிக்கும்
“வேர்கிளர் மராஅத்து அம்தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு” பிரிவை உனையன்றி
 பிழிவாக யார் சொல்வார் அறமொடு காதல், வாழ்வியல்
உலகத்திற்கான ஆலோசனைகள் பலப்பல
தமிழோடு உன்புகழ் பேசும் சங்கங்கள், சிலைகள்,
கோட்டங்கள், கோவில்கள், வழிபாடு,  விருதுகள் நீளும் பட்டியல்
பெயரில் ஆறென்றும் பலரென்றும் பகரும் வரலாறு
உலக மன்னர்களின் ஒற்றுமை பேசிய
உம்கதை தமிழக மக்களோடு  வறுமையில் செம்மையோடு
வளர்கிறாய் நாளும் குழந்தைப்பருவ மனநிலத்தில்
உம் பெயர் சொல்லியே நாங்களும் பெருமை கொள்கிறோம்

 மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்)
கைப்பேசி - 9600270331
தமிழாசிரியர்,












0 Response to "'கவிமாமணி' விருது - 18.10. 2018, திருவையாறு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel