முத்தமிழ் மொழியே
உனக்கு எம் வணக்கம் ,
தீந்தமிழ் மொழியே
எம் பணிவான வணக்கம்..
எம் தாய் மொழியே
உனக்கு பலகோடி வணக்கம் ..
அகம் முழுதும் நிறைந்த
தமிழே....
மொழிக்கு மகுடமாய்
திகழும் அன்னையே.....
தாய் பாடும் தாலாட்டில்
அன்பாய் ததும்பும் எம் உயிரே....
கொஞ்சி பேசும் குழந்தைகளின்
செல்லமொழியே
உன்னை வாசிக்கும்
போதெல்லாம்
கேட்காமல் கரைகிறது
எங்கள் காலங்கள்.....
யுகங்கள் பல கடந்தாலும்
எம் தமிழே நீயும்
யுகங்கள் கடந்து நிலைப்பாய்.
தாய்க்கும் தாய்
நீ..
கருவறையிலே எம்தாய்
ஊட்டினாள்
அழுதாய் தமிழை..
அமுதே.. தமிழே..
நிறைகுடமே.. தீந்தேனே..
தென்றலே ..குளிரே
எங்களின் பூங்கொடியே ...
உயிரே மெய்யே
உன்னால் அல்லவோ
நாங்கள் உயர்கிறோம்
சுவைத்துப் பார்க்கிறோம்
தினமும் உன்
தேன்தமிழின் இனிமையை
அதனால் அல்லவோ பாரதிதாசன்
..
கனியிடை ஏறிய சுளையும்
- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும்
- காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும்
பாலும் - தென்னை
நல்கிய குளிர் இள
நீரும்,
இனியன என்பேன் எனினும்
- தமிழை
என்னுயிர் என்பேன்
கண்டீர்! என்றார்.
அழகுக்கும் தமிழே
,
அறிவுக்கும் தமிழே
!
தமிழர் என்று
பெருமிதம் கொள்வோம்
!
தமிழுக்கும் பெருமை
சேர்ப்போம்"
!
உணர்வுகளில் ஊற்றெடுக்கும்
உனை
உலகத்திற்கு பறை
சாற்றும் உம் குழந்தைகள் நாங்கள்..
வாழ்க தமிழ்..
0 Response to "தமிழ் வாழ்த்து"
Post a Comment