ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இவ்வாறு வினாவுவதை வினா என்கின்றனர்.
அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை
ஏவ றிரும்வினா வாறு மிழுக்கார்
- நன்னூல் ,385
அறிவு = அறிதலும், அறியாமை = அறியாமையும், ஐயுறல் = சந்தேகித்தலும், கொளல் = கொள்ளுதலும்,கொடை = கொடுத்தலும், ஏவல் = ஏவுதலும் ஆகிய அறுவகைப் பொருளையும், தரும் வினா ஆறும் இழுக்கார் = தருதலால் வரும் வினாக்கள் ஆறனையும் களையாது கொள்வர் புலவர் என்பது நன்னூல் நூற்பா தரும் விளக்கமாகும்.
வினா வகைகள்
இவ்வாறு கேட்கப்படும் வினா ஆறு
வகைப்படும். அவை,
1.அறிவினா
2.அறியா வினா
3.ஐய வினா
4.கொளல் வினா
5.கொடை வினா
6.ஏவல் வினா
1.அறிவினா
தம் அறிவோடு பிறர் அறிவை
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப்
பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா
ஆகும்.
எ.கா:
·
ஆசிரியன் இச்சூத்திரத்திற்குப் பொருள்யாது என்பது அறிவினா
இப்பாடற் பொருள் யாது? என ஆசிரியர் மாணவரிடம் வினாவுதல், அவன் அறிவை அளந்தறியவும், உண்மைப் பொருளை அவனுக்கு உணர்த்துவதால்
இவ்வினா அறிவினாவாகும்.
2.அறியா வினா
மாணவன் தான் அறியாத பொருளை அறிந்து
கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.
எ.கா:
·
இப்பாடற் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம்
வினாவுதல். மாணாக்கன் இவ்வாறு
கேட்பது சொல்வது அறியா வினா ஆகும்.
3.ஐய வினா
எ.கா:
·
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ?
·
குற்றியோ மகனோ என்பது ஐய வினா.
இதுவோ அதுவோ என ஐயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுதல் ஐய வினாவாகும்.
4.கொளல் வினா
ஒன்றனைப் பெற்றுக் கொள்ளும்
பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும்.
எ.கா:
·
பயறு உளதோ வணிகீர் என்பது கொளல் வினா.
·
பத்தாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “பத்தாம் வகுப்புத் தமிழ்ப்
புத்தகம் உள்ளதோ?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்.
5.கொடை வினா
இல்லாதவர்க்கு ஒரு பொருளைக்
கொடுத்தற் பொருட்டு வினாவுவது கொடை வினாவாகும்.
எ.கா:
·
புலவரிடம் பொருள் இல்லையோ? என்று மன்னன் புலவரிடம் வினாவுதல் கொடை வினாவாகும்.
·
சாத்தனுக்கு ஆடையில்லையா என்பது கொடை வினா.
கொடுத்தற் பொருட்டு வினாவுவதால்
கொடை வினாவாயிற்று.
6.ஏவல் வினா
ஒரு செயலைச் செய்யுமாறு
ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும்.
எ.கா:
·
ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?”
என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும்.
· சாத்தா உண்டாயா என்பது ஏவல் வினா.
மாணவன் மனப்பாடம் செய்யவில்லை
என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப்பாடம் செய்துவிட்டேன் என்று கூறினால்
“பார்க்காமல் எழுதிக்காட்டு” என்று ஏவவும்
வினா வினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று.
அருமை ஐயா.வாழ்த்துகள்
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி.. நன்றி ஐயா...தொடர்வோம்..😊💐
Deleteஅருமையிலும்
ReplyDeleteஅருமை......
4ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயில்பவர்களுக்கு தங்களுடைய இந்த படைப்பு தமிழை எளிதாக அறிய உதவுகிறது.
நன்றி ஐயா..மகிழ்ச்சி..
Delete