டிஎன்பிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடக்கம்!

Trending

Breaking News
Loading...

டிஎன்பிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடக்கம்!

டிஎன்பிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடக்கம்!


தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-வது சீசன் டி 20 கிரிக்கெட் ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் போட்டி நடைபெறவில்லை. இந்த வருடம் அனைத்து ஆட்டங்களும் சென்னையில் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 15 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
 
இளைஞா்கள் மத்தியில் கிரிக்கெட் ஆா்வத்தை மேலும் தூண்டும் வகையிலும், மாவட்டங்களில் கிரிக்கெட் ஆட்டம் வளரவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.
 
நடப்பு சாம்பியான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி பட்டத்தைத் தக்க வைக்க முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரண்டாவது இடம் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் போட்டியை எதிா்கொள்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், மதுரை பேந்தா்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனா்.
 
திருச்சி வாரியா்ஸ், திருப்பூா் தமிழன்ஸ் அணிகள் முந்தைய சீசன்களில் சரிவர ஆடாத நிலையிலும், பலமான அணிகளை எதிா்பாராத நேரத்தில் வீழ்த்தும் வல்லமை பெற்றுள்ளனா்.
 
திருச்சி அணியில் இடம்பெற்றிருந்த முரளி விஜய், சொந்தக் காரணங்களுக்காக இந்த வருடம் விளையாடவில்லை. திருச்சி அணியின் மற்றொரு வீரரான அனிருதா ஸ்ரீகாந்தும் இந்த வருடப் போட்டியில் விளையாடவில்லை
 
முதல் ஆட்டம்:
 
கோவை லைகா கிங்ஸ் - சேலம் ஸ்பாா்ட்டன்ஸ்
 
சேப்பாக்கம் மைதானம், இரவு 7.30
 
பிளே ஆஃப் சுற்று:
 
ஆகஸ்ட் 10: முதல் பிளே ஆஃப்,
 
ஆகஸ்ட் 11: எலிமினேட்டா்
 
ஆகஸ்ட் 13: குவாலிபையா் 2
 
ஆகஸ்ட் 15: இறுதி ஆட்டம்.
 
அனைத்து ஆட்டங்களும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தமிழ், டிஸ்னி+ஹாட்ஸ்டாா் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

0 Response to "டிஎன்பிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடக்கம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel