
கொரோனாவுக்கு உலக அளவில் 4,124,263 பேர்
பலி*
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
41.24 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,124,263 பேர் கொரோனா வைரசால்
உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 192,210,309 பேர்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 174,912,376 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 80,944 பேர் கவலைக்கிடமான நிலையில்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*✍🏼 ஜூலை-21: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை
ரூ.94.39க்கு விற்பனை*
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி
அமைக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு
ரூ.102.49,ஆகவும், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.94.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
*✍🏼 இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில்
இந்திய அணி த்ரில் வெற்றி*
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை
இந்திய அணி கைப்பற்றியது.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில், இந்தியா – இலங்கை
அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
டாஸ்வென்று, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில்
9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக இலங்கை அணி வீரர் அசலங்கா
68 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.
அதைப்போல் இலங்கை அணி வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 71
பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளர்கள்
புவனேஸ்வர் குமார் மற்றும் சஹால் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீபக்
சஹர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
*✍🏼 மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள்
வழங்கப்படுகிறது: மத்திய அரசு*
மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள்
வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா
தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில்
பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா, மக்கள் தொகை
விகிதாச்சார அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக
தெரிவித்தார். நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு
வழங்கப்படுவதாகக் கூறினார்.
இந்தியாவுக்கு தடுப்பூசிகள் வழங்க பல வெளிநாட்டு
நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்
கூறினார்.
ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் வெளிச்சந்தையில்
விற்பனைக்கு வந்துவிட்டதாகவும், குழந்தைகளுக்கான கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும்
அவர் கூறினார். கொரோனா 3வது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எனக்
கூறப்படுவதால்,
அதற்கான
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மான்சுக் மாண்டேவியா
தெரிவித்தார்.
*✍🏼 மதுரை வழியாக சென்னை - கன்னியாகுமரிக்கு
வந்தே பாரத் ரயில் இயக்குவது எப்போது*
மதுரை : மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையிலிருந்து
கன்னியாகுமரிக்கு மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்க
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் 2019 பிப்., 15ல் டில்லி -
வாரணாசி இடையே துவக்கப்பட்டது. டில்லியில் புறப்படும் இந்த ரயில் கான்பூர், அலகாபாத் வழியாக
வாரணாசி சென்று அதே நாளில் டில்லி திரும்புகிறது. எட்டு மணி நேரத்தில்760 கி.மீ., துாரத்தை கடக்கிறது.
2வது வந்தே பாரத் ரயில் டில்லி - கத்ரா ஸ்டேஷன்கள் இடையே இயக்கப்பட்டது.
தானியங்கி கதவுகள், கண்காணிப்பு
கேமராக்கள், சென்சாரில்
இயங்கும் குடிநீர் குழாய்கள், முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் வைபை வசதி
உள்ளது. ரயிலில் காற்றை கிழித்து செல்லும் வகையில் விமானத்தை போன்ற வடிவமைப்பு
இருக்கும்.ஸ்டேஷன்களில் ரயிலை உடனடியாக நிறுத்த முடியும். வந்தே பாரத் ரயில் ஒன்று
தலா ரூ.100 கோடி மதிப்பில் வடிவமைக்கப்படுகின்றன.
தற்போது சென்னை - மதுரை வரை மின்மயமாக்கத்துடன் இரட்டை
அகல ரயில் பாதை உள்ளது. மதுரை - கன்னியாகுமரி வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிகள்
இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படவுள்ளன. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு
தேஜஸ் ரயிலை தவிர ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள்டக்கர், ஜனசதாப்தி போன்ற அதி விரைவு ரயில்கள்
இல்லை.சமூக ஆர்வலர்பாண்டியராஜா கூறியதாவது: சென்னை- மதுரை இடையே வேகமாக ரயில்களை
இயக்கும் வகையில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி வரையில் இரட்டை பாதை பணிகளை விரைந்து
முடித்து சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கினால் தென் மாவட்ட பயணிகளுக்கு
வசதியாக இருக்கும் என்றார்.
*✍🏼 இந்தியாவில் 40 கோடி பேருக்கு தொற்று
ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர்*
மூன்றில் இரு பங்கு இந்தியர்களுக்கு உடலில் கொரோனா நோய்
எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாகவும், இது கிடைக்காத 40 கோடி பேர் தொற்று ஏற்படும்
அபாயத்தில் உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
கொரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வந்து
கொண்டிருக்கும்நிலையில் மக்களிடம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை மேற்கொண்டது. 21 மாநிலங்களில்
70 மாவட்டங்களில் 6 வயதிற்கு மேற்பட்ட 28,975 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து
ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் 67 சதவிகிதம் பேருக்கு அதாவது சுமார்
80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் ஏற்பட்டிருக்கும் என தெரியவந்துள்ளதாக
ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மீதமுள்ள 40 கோடி பேருக்கு எதிர்ப்புத் திறன் இல்லாததால்
தொற்று அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
*✍🏼 சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு
ஏற்பட வாய்ப்பில்லை - உறுதி செய்யும் தரவுகள்*
சென்னையில் மழைப்பொழிவு சிறப்பாக உள்ள நிலையில் இந்த
ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை
இதுவரை தமிழகத்துக்கு 155.7 மி.மீ மழை கொடுத்துள்ளது. இது வழக்கத்தை விட 78%
அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழையின்
தாக்கத்தால் சென்னையிலும் ஜூலை மாதத்தில் மழைப்பொழிவு சிறப்பாகவே உள்ளது. இதன்
காரணமாக சென்னையின் நீராதார ஏரிகளில் கடந்தாண்டு இருந்ததை விட தற்போது இரு மடங்கு
நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 கன அடியாக உள்ள
நிலையில் தற்போது அதில் 1,143 கன அடி நீர் உள்ளது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு1,081
கன அடியாக இருக்கும் நிலையில் 599 கன அடி நீர் இருப்பு உள்ளது. செங்குன்றம்
ஏரியின் கொள்ளளவு 3,300 கன அடியாக உள்ள நிலையில் தற்போது 2,659 கனஅடி நீர் இருப்பு
உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி 3,645 கனஅடி நீரை கொள்ளக் கூடிய
நிலையில் அதில் தற்போது 2,632 கனஅடி நீர் இருப்பு உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட
தேர்வாய் கண்டிகை கண்ணன் கோட்டை ஏரியில் 436 கனஅடி நீர் உள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் 7.5 டிஎம்சி
நீர் உள்ள நிலையில் அது சென்னைக்கு வரும் ஜனவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என
அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில்
சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு குறித்த அச்சமின்றி இருக்கலாம் எனவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
*✍🏼 யானை தாக்கியதில் தந்தை- மகள் படுகாயம்*
கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே உள்ள வாழையத்து
வயல் சுடலைமாடசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மாறாமலை காரி மணி
எஸ்டேட் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை டீக்கடையை திறப்பதற்காக தமது மகள்
ஸ்ரீநாவுடன் இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, சி.எம்.எஸ் வளைவு
அருகே வனப்பகுதியில் நின்றிருந்த யானை ஒன்று, அவர்களை
தாக்கியுள்ளது. இதில், மணிகண்டனுக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மகள்
ஸ்ரீநா, யானை
தாக்கியதால் சுயநினைவின்றி விழுந்தார்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் தந்தையையும் மகளையும் மீட்டு
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து
கீறிப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*✍🏼 2வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாட்டில்
ஒருவர் கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு*
கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்
நாட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து
காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை
இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். ஆக்சிஜன்
பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள் அளித்த அறிக்கை மூலம்
தெரிய வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனா மரணங்களை எவ்வாறு வகைப்படுத்தி தெரிவிக்க வேண்டும்
என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்ததாகவும், அதன்படி வழங்கப்பட்ட
அறிக்கைகளை பார்த்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என தெரிய
வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு என பல மாநிலங்களில்
இருந்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதை மறுக்கும் வகையில்
அமைச்சரின் பதில் வெளியாகியுள்ளது.
*✍🏼 சிங்கப்பூரில் பயங்கரம்: பள்ளிக்கூடத்தில்
13 வயது சிறுவன் கோடாரியால் வெட்டி கொலை - சக மாணவன் வெறிச்செயல்*
உலகிலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைவாக
நடக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில் அங்கு உள்ள ஒரு
பள்ளிக்கூடத்தில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த
நாட்டை அதிர வைத்துள்ளது.
சிங்கப்பூரின் மதிப்புமிக்க பள்ளிக்கூடங்களில் ஒன்றாக
அறியப்படுவது ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம்
வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தில்
உள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு சக மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக
கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல்
தெரிவிக்க, அவர்கள்
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார்
மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மாணவனின் உடலுக்கு
அருகே கிடந்த ரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன்
என்பதும், அதே
பள்ளிக்கூடத்தில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை
செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை
வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம்
குறித்து போலீசார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த
கொலை சம்பவம், பள்ளி
பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்து நாட்டு மக்களிடையே
இணையதளத்தில் தீவிர விவாதங்களை தூண்டியுள்ளது.
*✍🏼 ஈராக்கில் சந்தையில் பயங்கர குண்டு வெடிப்பு; 25 பேர் பலி*
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை அமெரிக்க
படைகளின் உதவியோடு ஈராக் கடந்த 2018-ம் ஆண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ்.
பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாக ஈராக் அறிவித்தது. ஆனால்
அண்மைகாலமாக ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது.
குறிப்பாக தலைநகர் பாக்தாத்தில் அவர்கள் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை
அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் சதர் நகரில்
உள்ள மிகப்பெரிய சந்தையில் நேற்று முன்தினம் இரவு மக்கள் பக்ரீத்
கொண்டாட்டத்துக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர
சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம்
உருவானது. சந்தையில் இருந்த ஏராளமான கடைகள் தீக்கிரையாகின. பீதியடைந்த மக்கள்
தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த பயங்கர
குண்டுவெடிப்பில் சிக்கி 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும்
டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில்
உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத
அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி
இருப்பார்கள் என ஈராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
*✍🏼 பக்ரீத் பண்டிகை; தமிழக கவர்னர்
வாழ்த்து*
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை
கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு
தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்
பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
“ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி நம்முடைய
இஸ்லாமிய சகோதர,
சகோதரிகளுக்கு
என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித நாள் அன்பு, சகோதரத்துவம் மற்றும்
மனிதகுலத்துக்கான சேவையை குறிக்கிறது.
இந்த திருநாளில் பிரார்த்தனை, இரக்கம், தாராள மனப்பான்மை
ஆகியவற்றின் பாதையை கடைப்பிடிக்க நாம் அனைவரும் தீர்மானிப்போம். இந்த திருவிழா
அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும்
நல்ல ஆரோக்கியத்துடன் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்.”
*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
*✍🏼 மேகாலயா மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து லேசான
நிலநடுக்கம்*
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில்
அமைந்திருக்கும் வடக்கு காரோ மலைப்பகுதிகளில், இன்று அதிகாலை 2.10
மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி
இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை
4.57 மணிக்கு ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது. இந்த இரு நில
அதிர்வுகளும் குறைந்த தீவிரத்தை கொண்டிருந்ததால், மேகாலயா மற்றும்
லடாக் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
*✍🏼 ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டதற்கு
ஆதாரங்கள் இல்லை: பாக்.உள்துறை மந்திரி*
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள்
நீண்ட காலமாக சிதைந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக
சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்து
வருகின்றன. நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தலீபான்
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்
சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் நஜிப்
அலிகேலின் மகள் மர்ம நபர்களால் கடத்தி சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 27 வயதான சில்சிலா அலிகேல் கடந்த வெள்ளிக்கிழமை
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர்
அவரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் சில்சிலா அலிகேலை அடித்து
உதைத்து சித்ரவதை செய்தனர்.
கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர்கள்
சில்சிலா அலிகேலை சாலையில் விட்டுவிட்டு சென்றனர். தனது மகள் கடத்தப்பட்டு
சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது மனிதாபிமானமற்ற தாக்குதல் என கூறி கண்டித்த தூதர்
நஜிப் அலிகேலின்,
தற்போது
தனது மகள் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தங்கள் நாட்டில் தூதர்கள் மற்றும்
குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தானை
வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை 48 மணி
நேரத்துக்குள் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான
எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி
தெரிவித்துள்ளார். மேலும், ஒரே ஒரு வழக்கிற்காக ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டு தூதரை
திரும்ப அழைக்கக் கூடாது எனவும் ஷேக் ரஷீத் அகமது கூறியுள்ளார்.
*✍🏼 ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர்
அளவுகோலில் 5.3ஆக பதிவு*
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5.24
மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவானதாக
தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான
தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து
நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
*✍🏼 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு*
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில்
முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில்
இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று
வருகிறது. இதனால், சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து
காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல
அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 220- பேர்
உயிரிழந்துள்ளனர். எனினும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளிலேயே தொற்று
பரவல் அதிகமாக காணப்படுகிறது.
*✍🏼 கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து
கணக்கில் வராத ரூ.42,690 பறிமுதல்*
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத
ரூ.42,690-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்டவரிடம் கோத்தகிரி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*✍🏼 கொரோனா அச்சம்: திருவண்ணாமலை கோயிலுக்கு
கிரிவலம் செல்ல வர வேண்டாம்: ஆட்சியர் வேண்டுக்கோள்*
கொரோனா தொற்றின் காரணமாக திருவண்ணாமலை கோயிலுக்கு
பக்தர்கள், பொதுமக்கள்
பெளர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுக்கோள்
விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும்
நோய் தொற்றின் சில இடங்களில் அதிகம் காணப்படுவதால் கிரிவலம் செல்ல அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.
*✍🏼 சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முகாம்களில்
கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி*
சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முகாம்களில்
கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
வேலை மற்றும் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு
செல்வோருக்கு தடுப்பூசியில் முன்னூரிமை அளிக்கப்படுகிறது.
கையிரப்பில் 9 ஆயிரம் கோவிஷீல்டு இருக்கும் நிலையில் காலை
9 மணி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
*✍🏼 பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடி
விற்பனை செய்த 2 பேர் கைது*
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் காலனி பகுதியில் மானை
வேட்டையாடி விற்பனை செய்த மாவீரன், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்காக மான் வேட்டையாடிய மணிகண்டன், மாவீரனுக்கு வனத்துறை
ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
*✍🏼 மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 16,301
கனஅடியில் இருந்து 14,514 கனஅடியாக குறைவு*
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 16,301 கனஅடியில் இருந்து
14,514 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும்,
நீர் இருப்பு 35.79 டிஎம்சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன
தேவைக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
*✍🏼 சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட
போதைப் பொருளை பயன்படுத்திய 2 மாணவர்கள் கைது*
சென்னை பெரவள்ளூரில் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட போதைப் பொருளை
பயன்படுத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஸ்டாம்ப் என்ற போதைப்
பொருளை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளனர்.
ஸ்டாம்ப் போதை பொருளை பயன்படுத்திய பொறியியல் மாணவர்கள்
டேனியல், குமார் கைது
செய்யப்பட்டனர்.
*✍🏼 திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புலியூரில்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பறிமுதல்*
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புலியூரில் வீட்டில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உமேஷ், பிரகாஷ், ராகேஷ் ஆகியோரை கைது செய்த போலீஸ் 3 வாகனங்களையும்
பறிமுதல் செய்தனர்.
*✍🏼 ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய
13 விசைப் படகுகளுக்கு அனுமதி சீட்டு ரத்து*
ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய 13 விசைப்
படகுகளுக்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 விசைப் படகுகளுக்கும் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை
மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் வரக்கூடும் என்பதற்காக
30-க்கும் மேற்பட்ட போலீஸூ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
*✍🏼 நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு
மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு*
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு
மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில்
நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என
கூறப்பட்டுள்ளது.
50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகுத்தேர்வு நடத்த
வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வாட்சப் வாயிலாக 10, 12-ம் வகுப்பு
மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
*🎯பெரம்பலூர் மாவட்டம்* எறையூர் காலனி பகுதியில்
மானை வேட்டையாடி விற்பனை செய்த மாவீரன், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்காக மான் வேட்டையாடிய மணிகண்டன், மாவீரனுக்கு வனத்துறை
ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.️
*🎯இராமநாதபுரம்*
ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்திய 13 விசைப்
படகுகளுக்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 விசைப் படகுகளுக்கும்
மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். சட்டம்
ஒழுங்கு பிரச்சனை ஏதும் வரக்கூடும் என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீஸூ
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
*🎯நீலகிரி*
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத
ரூ.42,690-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் பறிமுதல்
செய்யப்பட்டவரிடம் கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*🎯திருவள்ளூர் மாவட்டம்* வெங்கல் அருகே புலியூரில்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமேஷ், பிரகாஷ், ராகேஷ் ஆகியோரை கைது
செய்த போலீஸ் 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்
*🎯திருவள்ளூர் மாவட்டம்* ஆரம்பாக்கத்தில் அசோக்
என்பவர் கடையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அசோக்கின்
செல்போன் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை ஆரம்பாக்கம் போலீசார் வலை வீசி
தேடி வருகின்றனர்.
*🎯சென்னை*
திருமங்கலத்தில் நடைபயிற்சியின் போது சென்னை மாநகர
போக்குவரத்து மேலான் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு.
சென்னை மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனர் அன்பு
ஆபிரகாமின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.
பூங்காசாலையில்
நடைபயிற்சியின் போது 2 இளைஞர்கள் செல்போன் பறித்துச் சென்றனர்.
செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்களை சிசிடிவி காட்சியை
கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
*🎯நீலகிரி மாவட்டம்* கூடலூர் மசினகுடி அருகே மாவனல்லாவில் பைக்கில் சென்ற
இருதயராஜை யானை தாக்கியதில் உயிாிழந்தார்.
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருதயராஜ்
உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
*🎯சென்னை* தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது.
தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ்
அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின்
ஆபரேட்டர் ஆரோக்கியசாமி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலப்புரத்தில் கைதான ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
*🎯சென்னை*
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த 3
ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.
5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3
அசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
*🎯தூத்துக்குடியில்*
ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள்
மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று
வருவதாக கூறப்படுகிறது.
பிரான்சிஸ் படகில் ஜான்பால், தமிழ் உள்ளிட்டோர்
சென்ற நிலையில் கரை திரும்பாததால் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
0 Response to "21.07.2021 - முக்கிய செய்திகள் "
Post a Comment