தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Trending

Breaking News
Loading...

தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…!


தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கபட்டுள்ளது. மேலும் ஐடிஐ, தொழிற்பயிற்சி நிலையங்கள் 50% மாணவர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ கீழ்‌ பார்வைத்திறன்‌ குறைபாடுடையோர்‌, செவித்திறன்‌ குறைபாடுடையோர்‌ மற்றும்‌ கை, கால்‌ இயக்கத்திறன்‌ பாதிக்கப்பட்ட குழந்தைகள்‌ மற்றும்‌ மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம்‌ என மொத்தம்‌ 22 அரசு சிறப்புப்பள்ளிகள்‌ உள்ளன. இப்பள்ளிகளில்‌ 2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கு மாணவர்‌ சேர்க்கை நடைபெறுகிறது.
 
இப்பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும்‌ இடம்‌ உட்பட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன்‌ மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே பார்வைத்திறன்‌ குறைபாடுடைய, செவித்திறன்‌ குறைபாடுடைய மற்றும்‌ கை, கால்‌ இயக்கத்திறன்‌ பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள்‌ மற்றும்‌ 5 முதல்‌ 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களும்‌ இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
 

0 Response to "தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel