தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!


தமிழகத்தில் போக்சோ மற்றும் லஞ்ச வழக்குகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை இனி வழங்க கூடாது என மாநில தகவல் ஆணையம் அதிரடி பரிந்துரையை முன்வைத்துள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் களையப்படும்.

அரசு ஊழியர்கள்:

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினால் நேரடியாக பணியில் இருந்து நீக்குதல், சம்பளம் கட் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அந்தந்த நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. ஆனால் அரசு துறைகளில் உடனடியாக அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பில்லை. சஸ்பெண்ட், துறை ரீதியான விசாரணை என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதற்கிடையில் லஞ்ச ஊழல், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் இடைநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியமாக 50% சம்பளமும் வழங்கப்படும். இதுவே 180 நாட்களுக்கு பின்னர் 100% சம்பளமும் வழங்கப்படுகிறது.

இதனால் அரசு ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி ஊழல், லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் 6 ஆண்டுகள் 50% பிழைப்பூதியமாக பெற்று வந்துள்ளார். இத்தகைய சாதக நடவடிக்கைகளினால் முறைகேடுகளை ஒருபோதும் ஒழிக்க இயலாது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். முறையான விசாரணைகள் முடிந்து தண்டனை அறிவிக்கப்படுவதற்குள் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய தொகை செலவாகிறது.

எனவே ஊழல், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு முன் வரை அவர்கள் மீதான துறை ரீதியான விசாரணையையும் நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தும் கொண்டு வருவது குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் பொதுமக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை பெருகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

2 Responses to "தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘இனி’ சம்பளம் கிடையாது – லஞ்சம், போக்சோ வழக்குகளில் சிக்கினால்!"

  1. சரியான பரிந்துரை. இதனையே எம்.எல்.ஏ. + அமைச்சர்களுக்கும் பொருந்தும்படி சட்டம் + விதிமுறைகளைத் தைரியமாக அரசு உருவாக்க வேண்டும்.

    பூனைக்கு யார் எப்படி மணி கட்டுவது......! ?

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel