திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்களாக பணிபுரிய தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 50 வயது வரை, 10ம் வகுப்பு கல்வித்தகுதி உடைய, சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுவோர் ரூ.5000 மதிப்பிலான என்.எஸ்.சி., பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களில் பெற்று ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்விச் சான்று, பான் கார்டு நகல்களை இணைத்து, முதுகலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திண்டுக்கல் கோட்டம், திண்டுக்கல்-624001 எனும் முகவரிக்கு டிச. 31 க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 82200-22313 ல் தொடர்பு கொள்ளலாம்.
0 Response to "அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் தேர்வு - டிச. 31 க்குள் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்"
Post a Comment