தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

Trending

Breaking News
Loading...

தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்


தோட்டப்
 பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்

தொடர் மழையால்தோட்டப் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெறவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.திருத்தணி வருவாய் கோட்டத்தில் 650 விவசாயிகள்வெண்டைகத்திரிமிளகாய்சேம்புவாழைபப்பாளி போன்ற தோட்டப்பயிர்களை, 1,300 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால்தோட்டப்பயிர்களில் மழை நீர் தேங்கிபயிர்கள் அழுகி வருகின்றனகாய்கறி பயிர்கள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் தோட்டப்பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.திருத்தணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோமதி கூறியதாவது:திருத்தணி கோட்டத்தில்வடகிழக்கு பருவ மழையால், 515 ஏக்கர் பரப்பில் உள்ள தோட்டப்பயிர்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதில் 380 ஏக்கர் பரப்பு பயிர்கள்மழையால் சேதம் அடைந்துள்ளன.பல்லாண்டு பயிருக்கு இரண்டரை ஏக்கருக்கு, 18 ஆயிரம் ரூபாய்ஓராண்டு பயிருக்குஇரண்டரை ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

மழையால் சேதம் அடைந்திருந்தால் கிராம நிர்வாக அலுவலர் சான்றுகணினி சிட்டாஅடங்கல்ஆதார் கார்டுரேஷன் கார்டுவங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களுடன்தோட்டக்கலை துறை அலுவலர்களிடம் விவசாயிகள் விண்ணப்பம் வழங்கலாம்.

0 Response to "தோட்டப் பயிர் சேத இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel