விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 75 ஆயிரம் - அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
.jpg)

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் P. ரத்தன் என்ற மாணவரின் தந்தை விபத்தில் காலமானார். தந்தையை இழந்த மாணவரின் நிலையைக் கண்டு வகுப்பாசிரியர் திரு R. சுகாானந்தம் அவர்கள் ஏதாவது இந்த மாணவருக்கு உதவித்தொகை பெற்றுத் தர முடியுமா என்று முயன்றார். அந்த வகையில் அரசின் சார்பில் வழங்கப்படும் 75 ஆயிரத்துக்கான பணம் பெற்றுத்தர முயற்சி செய்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் மாணவரின் நலனுக்காக தன்னால் முயன்ற அனைத்து பணிகளையும் செய்து முடித்தார். மாணவருக்கான உதவித்தொகை ரூபாய் 75 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணையை இன்று 5.9.2023 தலைமை ஆசிரியர் திரு சி. கருணாகரன் அவர்கள் வழங்கினார். மேலும் இம்மாணவர் உதவித் தலைமை ஆசிரியர் திரு. வெ. பாலமுருகன், வகுப்பாசிரியர் திரு R. சுகானந்தம். மற்றும் கணித ஆசிரியர் எ. அருள்மொழி ஆகியோரிடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
0 Response to "விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட 75 ஆயிரம் - அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி"
Post a Comment