அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று
1.9.2023 காலை பள்ளித் தூய்மை உறுதிமொழியை தலைமை ஆசிரியர் திரு. சி. கருணாகரன்
அவர்களின் முன்னிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் உறுதிமொழியை
ஏற்றனர். உதவித் தலைமை ஆசிரியர் திரு. சி. சாலமன் & திரு. வெ. பாலமுருகன்
மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் பங்கேற்றனர்...


பள்ளித்தூய்மை குறித்து தலைமை ஆசிரியர் அவர்கள்
விரிவாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பள்ளித் தூய்மை உறுதிமொழி
"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" இதில் நான்
பெருமை அடைகிறேன். என் பள்ளியைத் தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது எனது
கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன்.
பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையினை
ஏற்படுத்தமாட்டேன். மேலும். எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை
ஏற்படுத்துவேன்.
பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்பணித்துக்
கொள்வேன்.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான்
முழுமனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் அனைவரிடமும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியைத் தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன். மேலும், எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். என்று அனைவரும் பள்ளித்தூய்மை குறித்த உறுதிமொழியை உளமார ஏற்றுக் கொண்டனர்.
0 Response to "அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம். பள்ளித் தூய்மை உறுதிமொழியை ஏற்றனர்"
Post a Comment