அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , திருவள்ளூர் மாவட்டம் 7.9.23 - சமூக அறிவியல் மன்றத் துவக்க விழா


அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , திருவள்ளூர் மாவட்டம் 7.9.23 அன்று மதியம் 2
மணி அளவில் சமூக அறிவியல் மன்றத் துவக்க விழா இனிதே துவங்கியது.
நிகழ்ச்சிக்குப்
பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் திருமதி எம். செல்வி அவர்கள் வரவேற்புரை
வழங்கினார். வருகை புரிந்த பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் திரு. சி. சாலமன்
மற்றும் கணித முதுகலை ஆசிரியர் ஜானகிராமன் மற்றும் உயர்நிலை உதவித் தலைமை ஆசிரியர்
திரு. வெ. பாலமுருகன் & டி. சித்ரா அவர்களையும் மற்றும் நிகழ்விற்கு வருகை
தந்த அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் மிகச் சிறப்பாக வரவேற்று வரவேற்பு
உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வினைத்
தமிழ் ஆசிரியர் திருமதி பி. சரளா தேவி அவர்கள் தொகுத்து வழங்கினார். முதலில்
மாணவர்களின் படைப்புகள் அறை முழுவதிலும், பள்ளி சுவற்றிலும் மேசையிலும்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.. இவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்து
மாணவர்களின் திறனைப் பாராட்டினர். சூரிய குடும்பம் என்பதை விளக்குவதற்காக மிக
அருமையான பாடலுடன், சூரியனை எப்படி மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதை மிக
அழகாக நிகழ்த்தி காட்டினார்கள். மாணவர்களின் மாறுவேட போட்டியும் நடைபெற்றது.
வேலுநாச்சியாராக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தருண்ராஜ் மிகச் சிறப்பாக வீர வசனம் பேசி
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். கட்டபொம்மனாக ஒன்பதாம் வகுப்பு அருண் என்ற
மாணவனும் மிகச் சிறப்பாக தன்னுடைய வசனத்தை பேசி அனைவரையும் தன் வசம் ஈர்த்ததைப்
பார்க்க முடிந்தது. அதைப்போலவே காந்தி வேடமிட்ட அன்பரசன் என்ற மாணவனும் நேருஜி
வேடமிட்ட அசோக் ரத்தோர் என்ற மாணவனும் அழகாகன வசனங்களைப் பேசி அசத்தினர். மகாகவி
பாரதியார் வேடமிட்டு வந்த அஜய், அர்ஜூனன், என்ற மாணவர்களும் பாரதியாரையே கண்முன்
கொண்டு வந்தார்கள். கொடிகாத்த
குமரன்
வேடமிட்ட சஜின் பால் என்ற மாணவன் மிகச் சிறப்பாக கொடியின் விளக்கத்தையும் அந்தக்
கொடியை யார் யாரெல்லாம் பிடித்தார்கள் என்பதையும் மிகச் சிறப்பாக வசனம் பேசி
அனைவரையும் கவர்ந்தார். தஞ்சாவூர் பெரிய கோவில் குறித்த லக்ஷாராம் என்ற மாணவனும்
மிகச்சிறந்த முறையில் தன் பங்களிப்பை வழங்கினார். மாணவர்களின் கலைத்திறன் மற்றும்
கைத்திறனையும் கண்டு அனைவரும் வியந்து போயினர். நிகழ்வின் அடுத்த படியாக பள்ளியின்
உதவித் தலைமை ஆசிரியர் சாலமன் அவர்கள் சமூக அறிவியல் மன்றம் தோன்றுவதற்கான காரணங்களையும்
தமிழ் மன்றம் ஆங்கில மன்றம் இது போன்ற மன்றங்கள் மூலமாக மாணவர்களின் உள்ளார்ந்த
திறன் வளர்த்தெடுக்கப்படுவதாக கூறினார். இப்படிப்பட்ட மன்ற செயல்பாடுகளில் மூலமாக
மாணவர்கள் தங்களுடைய கலைத்திறனை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்த நிகழ்வில் இன்னும் அதிகமான படைப்புகளை மாணவர்கள் கொடுக்க வேண்டும் என்றும்
வாழ்த்தி பேசினார்.
நம்
பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அதிலும் இந்த
சமூக அறிவியல் மன்றம் மிகச் சிறப்பாக துவக்கப்பட்டுள்ளது. நல்ல நல்ல படைப்புகளை
நாம் பார்க்க முடிகின்றது என்று வியந்து பாராட்டினார். கணித ஆசிரியர் சமூக
அறிவியல் ஆசிரியரின் உழைப்பையும் மாணவர்களின் படைப்புகளையும் பார்த்து நிறை
குறைகள் என்று பேசி அதில் நிறைகளை மட்டுமே அதிகமாகப் பேசி மாணவர்களையும்
ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசுவதாக அன்னாரின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
அடுத்ததாக
பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் பாலமுருகன் அவர்களும் மன்றங்களின் செயல்பாட்டை
மதிப்பீடு செய்யும் முகமாக தன்னுடைய கருத்தை முன் வைத்தார். வரலாறு என்பது நமக்கு
மிகவும் முக்கியமானது என்றும் வரலாறு படிப்பதின் முக்கியத்துவத்தையும் தன்னுடைய
பேச்சில் வெளிப்படுத்தினார். மனித குல வரலாறு, இலக்கிய வரலாறு, கணித வரலாறு,
அறிவியல் வரலாறு, சமூக அறிவியல் வரலாறு என ஒவ்வொரு துறைகளின், பொருள்களின் வரலாறு,
வானிலையின் வரலாறு என்று எதை எடுத்தாலும் வரலாறு என்று இருப்பதையும்
ஆவணப்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் சான்றுகளையும் கூறி வெளிப்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.
கார்ல்
மார்க்சின் குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும் என்று யோசித்தபோது கார்ல் மார்க்ஸ்
தன் குழந்தையை வரலாறு படிக்க வேண்டும் என்று கூறியதை நினைவு படுத்தினார். அதைப்
போலவே உலக வரலாறு எப்படி தொடங்கியது, ஆங்கிலேயர் எப்படி இந்தியாவுக்குள்
வந்தார்கள், விடுதலை பெற்ற போது இந்தியாவின் நிலை, பிறகு எப்படி வளர்ந்தது,
விடுதலைக்கு முந்திய வரலாறு, முகலாயர்களின் ஆட்சி வரலாறு, சேர, சோழ,
பாண்டியர்களின் பேரரசுகளின் வரலாறு என வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் பேசியது
நினைக்கத்தக்கது. அதைப்போலவே தமிழ் ஆசிரியர் சரளாதேவி அவர்கள் தமிழுக்கும்
வரலாறுக்கும் உள்ள தொடர்பை மிக அழகாக தன்னுடைய பேச்சின் வழியாக வெளிப்படுத்தினார்.
தஞ்சாவூர்
கோபுரத்தில் உள்ள தமிழுக்குமான வரலாற்றுக்குமான அந்தச் சிறப்பைச் சோழ மன்னனுடைய
வெளிப்பாட்டையும் மக்களின் உழைப்பையும் மிகச் சிறப்பாக, தமிழ் எழுத்துக்களோடு
எப்படி பொருந்தி போகின்றது என்பதை வெளிப்படுத்தினார். 12 எழுத்துகள் 18 எழுத்துகள்
216 எழுத்துகள் 247 எழுத்துகள் எப்படி தஞ்சை கோபுரத்தோடு ஒத்துப் போகின்றன என்பதை
தெள்ளத் தெளிந்த கம்பீரமான குரலில் வெளிப்படுத்தி மாணவர்களையும்
ஆச்சரியப்படுத்தினார். சிறந்த படைப்புகளுக்கு சமூக அறிவியல் ஆசிரியரின் சார்பாக
பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் மாறுவேடம் அணிந்த மாணவர்களுக்கும் பரிசுகள்
வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்கள் மூன்று ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திரு. தியாகராஜன் அவர்களும் அருள்மொழி அவர்களும் சுசிலா அவர்களும் ஹசினா ரெகானா அவர்களும் செல்வி அவர்களும் சித்ரா அவர்களும் கலந்து கொண்டு தன்னுடைய பங்களிப்பையும் அளித்து மாணவர்களின் கலைத்திறனையும் கண்களித்து வாழ்த்தினர். சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு உற்ற துணையாக மேற்படி ஆசிரியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் சமூக அறிவியல் ஆசிரியர் திரு ஆர். சுகானந்தம் அவர்கள் மிகத் தெளிவான குரலில் அனைவரையும் விடாமல் அனைவருக்கும் நன்றி கூறியது என்பது தமிழ் பண்பாட்டை நிலை நிறுத்துவதாகவும் இருந்தது. நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
0 Response to "அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , திருவள்ளூர் மாவட்டம் 7.9.23 - சமூக அறிவியல் மன்றத் துவக்க விழா"
Post a Comment