அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 05.09.2023 ஆசிரியர்
தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில்
வரவேற்புரையைப் பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர் திரு. ஜானகிராமன் அவர்கள்
நிகழ்த்தினார். இந்நிகழ்விற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையேற்றார்.
ஆசிரியர்களின் பணி குறித்தும் ஆசிரியர் தின விழாவின் பொருண்மை பற்றியும் மிக
விரிவாகவும் அழகாகவும் தலைமை ஆசிரியர் பேசினார். மாணவர்கள் அனைவரும் தலைமை
ஆசிரியர் கூறிய கருத்தை மிக உன்னிப்பாக கேட்டனர். ஆசிரியர்கள் அனைவருக்கும்
பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் ஆசிரியர் தின பரிசுப் பொருளைக் கொடுத்தார்.

பரிசுப்
பொருளைக் கொடுக்கும்போது தமிழ் ஆசிரியர் திருமதி சரளா தேவி அவர்கள் ஒவ்வொரு
ஆசிரியரின் சிறப்புகளைக் குறிப்பிட்டு ஒவ்வொருவராக அழைத்து, தலைமை ஆசிரியர் பரிசு
கொடுக்க நிகழ்வானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறியது. சரளாதேவி அவர்களின் இனிய
உரையில் ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய பணியின் சிறப்பை உணர்ந்தார்கள். விழாவில்
ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்தார்கள்.
உயர்நிலை
உதவித் தலைமை ஆசிரியர் திரு. வெ. பாலமுருகன் அவர்கள் தலைமை ஆசிரியருக்கும் உதவித்
தலைமை ஆசிரியருக்கும் புத்தகத்தை வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளைக்
கூறிக்கொண்டார். மேலும் இவர் தான் ஆசிரியராக உருவாகக் காரணமாக இருந்தவர்களை
நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் உயர்வதற்கும்
மாணவர்கள் முழுமையான கற்றல் மதிப்பீடுகளைப் பெற தலைமை ஆசிரியர் முன்னெடுத்த
அனைத்தையும் குறிப்பிட்டு சக ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறினார். மாணவர்களின்
கல்வித் திறமும் ஒழுக்கமும் வளரக் காரணமாக இருந்த பள்ளிச் சூழலையும் உறுதுணையாக
இருந்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
உயிரியல் ஆசிரியர் கிறிஸ்டி மதுமதி அவர்கள் மாணவர்கள் எப்படி தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நல்ல அறிவுரைகளையும் தகுந்த எடுத்துக்காட்டுகளையும் கூறி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மேலும் சந்திராயன் மூன்று திட்ட இயக்குனர் வீர முத்துவேல் குறித்தும் அவரது தந்தையைக் குறித்தும் மிக விரிவாக பேசியது மாணவர்களுக்குத் தகுந்த பாடமாக அமைந்தது. கணித ஆசிரியர் அவர்கள் ஆசிரியர் தின விழாவின் சிறப்புகளை நன்றாக அவருக்கே உரிய பாணியில் மாணவரிடையேயும் ஆசிரியரிடையேயும் பேசினார். இறுதியில் பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் திரு. சி சாலமன் அவர்கள் நன்றி உரையை சிறப்பாக நிகழ்த்த நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.
0 Response to "அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா"
Post a Comment