சென்னை, அண்ணா நகர், ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


சென்னை, அண்ணா நகர், ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை
சார்பில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
நடத்த பெற்றது. இப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 34 பேர்
கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே துவக்கியது. எழுத்தறிவு
என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன்
பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம்
செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும்.
ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கருவியாகும்.
எழுத்தறிவானது தனியர்
தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச் சமூக நிகழ்வுகளில் பங்கேற்று
விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி
அறிவியல் பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவு குறித்து சொல்லிய வரையறையை எடுத்துக் கூறி
வரவேற்பு உரையையும் நடுவர் குறித்த அறிமுக உரையையும் தமிழ்த் துறையின் உதவிப்
பேராசிரியர் முனைவர் இரா. மோகனா நிகழ்த்தினார். ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர்
கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் ப.வனிதா
நடுவராக வந்து திருக்குறள் சார்ந்த கருத்துக்களை மாணவர்களிடத்தில் பகிர்ந்து
கொண்டார் . அதன் பின்னர் மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து போட்டியில் ஒப்புவிக்கச்
சொன்னார்.
மாணவர்களும் மிக அழகாக
குறளை ஒப்பித்தனர். சிறப்பாக ஒப்பித்த மாணவர்கள் முதல், இரண்டு, மூன்றாம்
இடங்களில் தேர்வு செய்யப் பட்டனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்
வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்குறளை எவ்வாறு கற்க வேண்டும் அதனைத்
தினமும் எவ்வாறு மனனம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து கூறினார். மாணவர்களுக்குச்
சிறிதும் சலிப்பு தோன்றாமல் இருப்பதற்காக இடையே நீதிக் கதைகளையும் நடுவர் கூற
மாணவர்களும் உற்சாகத்தோடு கதையைக் கேட்டு மகிழ்ந்தனர். திருக்குறள் குறித்த ஒரு
சில கேள்விகளை நடுவர் மாணவர்களிடம் கேட்டார். அவர்களும் ஆர்வத்துடன் பதில்
சொன்னார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும்
சான்றிதழை துணை முதல்வர் முனைவர் ஜெ. சந்திரிகா வழங்கினார். பங்கேற்ற அனைத்து
மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் எங்களுடன் பள்ளி ஆசிரியர்களும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி. காவேரி அவர்களும் உடன் இருந்தனர். நிகழ்விற்குத் தேவையான உதவிகளைத் தமிழ்த்துறை செயலர் ரூபஸ்ரீ, துணை செயலர் வசந்ரா இருவரும் இன்முகத்துடன் செய்தனர். நிகழ்வின் இறுதியில் தமிழ்த் துறைச் செயலர் நன்றி உரை கூறினார் . சிறப்பாக இப்போட்டி நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த கல்லூரி முதல்வர் முனைவர் அனிதா ராஜேந்திரனுக்கும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் நன்றி நவிலப்பட்டது. நாட்டுப்பண் உடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
0 Response to "சென்னை, அண்ணா நகர், ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி "
Post a Comment