அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், 1997 – 98 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் வெள்ளி விழா – சந்திப்பு - 15.10.2023

Trending

Breaking News
Loading...

அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், 1997 – 98 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் வெள்ளி விழா – சந்திப்பு - 15.10.2023

அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், 1997 – 98 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் வெள்ளி விழா – சந்திப்பு - 15.10.2023

 



அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் பள்ளியில் 1997 - 98 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் 27 நபர்கள் மீண்டும் தங்களுடைய பள்ளி பருவத்திற்குச் செல்ல விருப்பமானார்கள். வழக்கம் போலவே whatsapp குழுவில் சந்திப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டது. மீண்டும் எந்தத் தேதியில் சந்திக்கலாம் என்று தகவல் ஆனது குழுவில் பதிவிடப்பட்டது. நண்பர்களின் கருத்திற்கு இணங்க 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி கோல்டன் பீச் கடற்கரை விடுதியில் சந்திப்பது என்று முடிவானது. நண்பர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டு அனைவரும் எப்போது சந்திப்போம் என்று காத்திருந்தனர். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நண்பர்கள் மாலினி , அருண், பத்மநாபன், ரமேஷ், புனிதா செயல்பட்டனர். நண்பர்கள் அனைவரும் இதைப்பற்றியே பேசுவது என்றும் அதன் தொடர்ச்சியாக சந்திப்பது வரையிலான அனைத்து வேலைகளையும்  நண்பர்கள் தொடர்ந்து பார்த்தனர்.

 







குறிப்பாக 10 நாட்களுக்கு முன்பே ரிசார்ட்டில் உரிய தேதியில் முன் பதிவு செய்யப்பட்டது. அதேபோல சரியாக 11:30 மணி அளவில் கேக் வெட்டுவதற்கு கேக்கும் முன்பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பணியிலும் வகுப்பு நண்பர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சந்திக்கும் அந்த நாள் எப்போது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்காக நண்பர்கள் அனைவரும் ங்கினர். நாங்கள் சந்திப்பது இது மூன்றாவது முறையாக இருந்தது.ள்ளிப் பருவத்திற்குப் பின் அதிலும் குறிப்பாக இந்த மூன்றாவது சந்திப்பு என்பது வெள்ளிவிழா ஆண்டாக இருந்தது. 1998-2023. நாங்கள் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து சரியாக 25 ஆண்டுகள் முடிந்து விட்டன. நண்பர்கள் உள்ளத்திலும் உடல் அளவிலும் வேறுபட்டு இருந்தாலும் நண்பர்கள் என்று சொல்கின்ற போது ஒருமித்த கருத்து உடையவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்விற்கு 27 நபர்கள் வந்திருந்தனர்.

 







குறிப்பாக திருச்சியில் இருந்து நண்பன் ஹாஜா வந்திருந்து நிகழ்வைச் சிறப்பாக மாற்றினான். அதேபோலவே பொன்னேரியில் இருந்தும் வனிதா அவர்கள் வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை மிகச் சிறப்பாகவே விடிந்தது. அனைவரும் ஆங்காங்கே தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை வாட்ஸப்பில் புகைப்படமாக பகிர்ந்து கொண்டனர். ஒரு பக்கம் மகேஷ் தாம்பரத்திலிருந்து இன்னொரு பக்கம் அண்ணா நகரில் இருந்து பால மணிகண்டன், ஜெயா குழுவினரோடும் இன்னொரு பக்கம் கோடம்பாக்கத்தில் இருந்து ஹாஜா, பனையப்பன், குமுதா, ஹேமா குழுவினரும் போரூரில் இருந்து நானும் (பாலமுருகன்) பார்த்திபன், வேல்முருகன், ஆறுமுகம் என்ற குழுவும் மகிழுந்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தோம். அதேபோலவே மாலினி, செந்தில் என்ற குழுவும் விபின், பிரபாகரன் என்ற குழுவும் பிறகு ரவி, வெங்கடேசன், மனோ என்று அனைவருமே தாங்கள் எங்கெங்கே இருக்கிறோம் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார்கள்.

 











அனைவரும் 10 மணிக்கு குறிப்பிட்ட விஜிபி இடத்திற்கு வந்தார்கள். தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அரவணைத்துக் கொண்டு தங்களுடைய இன்பத்தை வெளிப்படுத்தினார்கள். காலையில் வரவேற்பு குளிர்பானத்தோடு நண்பர்களின் சந்திப்பானது தொடங்கியது. அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அனைவரும்ம் நெருங்கிய நண்பர்களோடு பேசிக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 11:30 மணி அளவில் ஏற்கனவே முன்பதிவு செய்து போல கேக் வந்தது. அதனை வெட்டினார்கள். அனைவரும் கேக்கைச் சாப்பிட்டார்கள். தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே அவரவர் நண்பர்களுக்கும் வாயில் திணித்து ஊட்டினார்கள். இது இன்னும் அந்தப் பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் சென்றது.

 

பள்ளிப் பருவத்தில் இருந்த அதே நட்பானது இன்னும் தொடர்வதை நினைத்து அனைத்து நண்பர்களுமே மகிழ்ந்தனர்.  கேக் சாப்பிட்டுவிட்டு பிறகு அனைவருமே விளையாடுவதற்காகச் சென்றார்கள். நான்கு நண்பர்கள் ஐந்து நண்பர்கள் என்று பூப்பந்து விளையாட்டிலும் இன்னொரு 10 நண்பர்கள் கிரிக்கெட்டிலும் இன்னொரு பத்து நண்பர்கள் பேசிக்கொண்டும் இருந்தார்கள். சில நேரம் கழித்து கால் பந்தாட்டம், கைப்பந்தாட்டம் என்று விளையாட்டானது மாறிக்கொண்டே சென்றது. நண்பர்கள் ஊஞ்சலில் உட்கார்ந்து தன்னுடைய பழைய கதைகளைப் பேசிக்கொண்டு 1998 ஆண்டிற்கே சென்ற அனுபவத்தை நாம் அங்கே பார்க்க முடிந்தது. அனைவருமே அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மாணவப் பருவத்திற்கே சென்றதை அங்கே கண்டு மகிழ முடிந்தது. கள்ளமில்லா உள்ளத்தின் செயல்பாட்டை நாம் அங்கே பார்த்தோம். அதே விளையாட்டு, அதே புன்னகை, அதே மகிழ்ச்சி என்று எங்கள் நினைவானது சென்று கொண்டிருந்தன.

 












மதியம் 1:30 மணி அளவில் மதிய உணவை அனைவரும் சாப்பிட்டனர். மதிய உணவு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சைவம், அசைவம் எனச் சுவையான உணவுகள் அங்கே பரிமாற காத்திருந்தன. பிறகு சாப்பிட்ட பிறகு குலோப் ஜாமுன் மற்றும் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட முடித்தவுடன் இன்டோர் கேம்ஸ், உள் அரங்க விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று தங்களுக்குப் பிடித்த விளையாட்டை அனைவரும் விளையாடினார்கள். பிறகு அந்த விளையாட்டு மாறி, கயிறு தாண்டுதல், உட்கார்ந்து விளையாடுதல், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம் என விளையாட்டானது நீண்டது. சரியாக 3 மணியளவில் கடற்கரைக்கு அனைவரும் சென்றோம்.

 











கடற்கரைக்குச் செல்லும் வழியில் அனைவரும் பேசிக்கொண்டே சென்றது மாணவப் பருவத்தை மீண்டும் நினைவுபடுத்தியது. மாணவர்கள் என்றாலே ஓட்டப்பந்தயம் இருக்கும் அல்லவா ஓட்டப்பந்தயத்தில் மாலினி, புனிதா, குமுதா ஹேமா என்று அனைவருமே கலந்து கொண்டார்கள் அதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் நண்பன் ஆறுமுகம் எடுத்துக் கொண்டிருந்தான். என்னுடைய கைப்பேசியிலும் அனைவரது மொபைலிலும் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்டன. என் மொபைலில் அதிகமாக எடுக்கப்பட்டது. நண்பன் ரமேஷ் தற்கு உதவி செய்தார். கடற்கரைக்குச் சென்று சிலர் குளிக்கவும் செய்தார்கள். குறிப்பாக ஹாஜாவும் செந்திலும் மிக மகிழ்ச்சியாக சட்டையை அவிழ்த்துவிட்டு கடற்கரையில் குளித்தார்கள். பள்ளித் தோழிகள் அனைவரும் கடற்கரை மணலில், நீரில் கால்களை நனைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள். நண்பர்கள் அனைவருமே மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இவை மிகவும் அழகான காட்சிகளாக இருந்தன. அப்போது சரிதா அவர்கள் புதன்கிழமை 18.10.2023 அன்று தாங்கள் குடிமனை புகுவிழா செய்யப் போகிறோம் என்ற தகவலைச் சொல்லி அழைப்பிதழைக் கொடுக்க அனைத்து நண்பர்களும் வாங்கிக் கொண்டார்கள்.

 
















பிறகு மீண்டும் நான்கு மணி அளவில் ஸ்னாக்ஸ் மற்றும் காபி குடித்து பேசிக்கொண்டிருந்தோம். ஐந்து மணி வரைக்கும் இந்த பேச்சானாது நீண்டது. அனைவரும் தங்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் 5 மணி 30 நிமிடங்களில் ஒவ்வொருவராக தங்கள் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அப்படித்தான் அனைவருமே மீண்டும் இன்னொரு முறை சந்திப்போம் என்பதாக கூறி அவரவரது வீட்டிற்குச் சென்றார்கள். இந்த நிகழ்வானது மிகவும் இனிமையான, பசுமையான, மகிழ்ச்சிகரமானதாக மாறியது. அனைத்து நண்பர்களும் ஒருமித்த கருத்து கொண்டதுதான் இதற்குக் காரணமாக இருந்தது.  நண்பர்கள் மகேஷ் நண்பன் மனோவும் இந்நிகழ்ச்சி குறித்து மிக அழகாக கவிதைகளை எழுதியுள்ளார்கள். அதை அப்படியே பின்வருமாறு தருகிறேன்.




















மனோ

நன்றி உரை எப்படி சொல்வது என் நண்பர்களுக்கு   நன்றியா!!!!

பக்குவப்பட்ட நண்பன் பக்காவாக பிளான் போடும் நண்பன் பட்ஜெட் பத்மநாபனுக்கு நன்றி சொல்வதா!!!

இந்த 25 ஆவது ஆண்டு முயற்சியில் முக்கியத்துவம்!! நீ, என்றுமே தனித்துவம். இந்த முயற்சியை எடுத்த மச்சி அருணுக்கு நன்றி கூறுவதா!!!

நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ்க்குச் சுட்டி குழந்தை சாம்கரன்!  நம்ப    GHSSக்கு எப்போதும் சுட்டிக் குழந்தை நம்ம பிரபாகரன் மச்சானுக்கு நன்றி கூறுவதா!!!

நட்பின் இலக்கணம்! எப்போதும் இல்லை தலக்கணம்! பேச்சு மட்டும் தினுசு! நட்புன்னு வந்தா நம்ம மகேஷ்! இந்த மச்சானுக்கு நன்றி கூறுவதா!!!

இந்த GHSS குரூப் இந்த அளவுக்கு வளர்ந்தற்குக் காரணம் நம்ம மூன்று ஆண்டுகள் கொண்டாடின விழா!! இதுக்கு முக்கிய காரணம் நம்ம ஜெயா!! செல்லம்மா எங்க மேடமுக்கு நன்றி கூறுவதா!!!

எல்லோரையும் இமைப்போல் காத்து தன் இமையும் பொருட்படுத்தாமல் இமயமலையாக நின்ற என் மச்சான் ரமேஷுக்கு நன்றி கூறுவதா!!

ஆறுபடையின் தலைவா நீ வந்ததே ஒரு நிகழ்வா நாங்கள் போடப் போகிறோம் அரோகரா எங்களைக் காக்க வந்த வேல் முருகா  உனக்கே நன்றி கூறுவதா..

என்றும் விட்டுக் கொடுக்காத ஜீவன் நீ ! உன்னைப் புரிந்து கொள்ளாதவன் மட சாம்பிராணி அன்புக்கும் பாசத்துக்கும் என்றும் மரியாதை எங்கள் மாலினி(நீ) என் தங்கச்சிக்கு நன்றி கூறுவதா!!

எப்போதும்  புன்னகையுடன்  கள்ளம் கபடாமல் இல்லாத குளுமையான மார்கழி பனியே எங்கள் கோயம்பேடு மணியே உனக்கு நன்றி கூறுவதா!!!

சரித்திரத்தைத் திருப்பி பாருங்கள். என் அன்பு சகோதரி சரிதாவைப் பாருங்கள் இவர்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த பாக்கியங்கள் சரித்திர நாயகி சரிதா நாயர் அவர்களுக்கு நன்றி கூறுவதா!!!

என் மௌன கீதம்!! என் அன்பு ராகம்!!

உன்னை விடாவா?  ஒரு நட்பு அதை நாங்கள் தவறவிட்டால் தப்பு!!

என் அன்பு சகோதரி வனிதாவுக்கு நன்றி கூறுவதா!!

உங்கள் மென்மையான குரலைக் கேட்க ஓடோடி வந்த எங்களை ஏமாற்றுவது நீங்கள் அல்ல, நாங்கள் தான் ஏம்மா  அன்பு சகோதரி Hema உங்களுக்கு நன்றி கூறுவதா!!

உன்ன நெனச்சு நெனச்சு மெழுகாய் உருகிப் போனேன் அந்த மெழுகுவர்த்தியைக் கையில் கொடுத்து விட்டால் நாங்கள் எடுப்போம் ஆர்த்தி!! நினைவிருக்கா பார்த்தி!! மச்சான், உனக்கு நன்றி கூறுவதா!!

தலக்கணம் இல்லாத இலக்கணமே! ஒவ்வொரு விஷயத்தையும் உனக்கு விளக்கணுமே! எந்தக் கேள்வி கேட்டாலும் இல்லை பதில். அதுதான் எங்கள் செந்தில்! என் மச்சானுக்கு நன்றி கூறுவதா!!!

இந்த GHSS in உயிரே! !! எங்களின் விடாமுயற்சியே!! எப்போதுமே நீங்கள் எளிமை!! நீங்கள் வந்தாலே எங்களுக்கு அது தான் வலிமை!!

நாங்கள் அப்பப்போ  நிற்போம் ஓரம்!! நீ வந்தாலே எங்களுக்கு வரும் வீரம்!! நீ வருவ கெத்தா அதுதான் நம் புனிதா உங்களுக்கு நன்றி கூறுவதா!!

உன்னுடைய ஒரு முகம் பார்ப்பதற்கு நாங்கள் ஆசைப்பட்டோம் ஆனால் உன்னுடைய ஆறு முகத்தையும் காட்டி (ஆறு முகம்) விட்டாயே நண்பா உனக்கு நன்றி கூறுவதா!!

நட்பின் ராஜனை நாடறியும் ராஜன் நாட்டுக்கு ஒரு ராஜன் எங்கள் நடராஜன் உனக்கு நன்றி கூறுவதா!!

நாளைய பாரதமே!! நாளைய வரலாறே!!

உங்கள் வண்டியில் கட்சியின் கொடி பாரதிய ஜனதா

தமிழ்நாட்டின் நாளைய தலைவர் எங்கள் குமுதா!!! உங்களுக்கு நன்றி சொல்வதா!!

பேசுவதில்லை அதிகமா!!

நான் இங்க வரனுமா!!

நட்பைக் காண வந்த உனக்குத் தேங்க்ஸ்

இதுதான் நம்ம வெங்கடேஷ் உனக்கு நன்றி கூறனுமா மச்சி!!

சொல்லில் அடக்க முடியாது!! பேச்சிலும் திமிர் கிடையாது!! என்றுமே கெத்து இவன் எங்கள் சொத்து!! மச்சான் விபினுக்கு நன்றி கூறுவதா!!!

அதிகம் பேசுவதே இல்லை வாயில்!!

அதிகம் பேசுவது செல்போனில்!!

இன்று இவன் வந்ததே அது ஒரு கவி!! இதுதான் நம் ரவி!! உனக்கு நன்றி கூறுவதா!!

பேச்சு தான் சரி! செயலிலும் சரி! சுத்துவாங்க டானா!

அதுதான் எங்கள் மீனா அவர்களுக்கு நன்றி கூறுவதா!!

தமிழ்த் தாயின் தவப்புதல்வன்!! நாளைய இளைய குழந்தைகளுக்கு முதல்வன்!! தமிழுக்குப் பாரதியார் நம்ம குழுவுக்கு நம்ம வாத்தியார் ஐயா  பாலமுருகனுக்கு நன்றி கூறுவதா,,,.

ஏழுமலை சுத்தி வந்தாலும் காணக் கிடைக்காத ஒரே அப்பன் எங்கள் பனையப்பன் கள்ளன் கபடம் இல்லாத எங்கள் அப்பனுக்கு நன்றி கூறுவதா!!

நண்பர்களைக் காண பக்கத்துத் தெருவில் கூட பார்த்துக் கொள்ளலாம் தயங்கி நிற்கும் நாம்,   பல நூறு கிலோமீட்டர் தாண்டி நம்மளைக் காண வந்த ராஜாவே எங்கள் ஹாஜாவே இந்த மச்சானுக்கு நன்றி கூறுவதா!!

கடைசி வரை வருவானா மாட்டானா என்று மன அழுத்தத்தை கிர வைத்த மச்சான் விஜயகுமாருக்கு நன்றி கூறுவதா!!

நட்பு ஒன்றுதான் சந்தோசம். இருக்கும் வரை சந்தோசமாக இருக்கலாம். அடுத்த வருஷம் ஒன்று கூடி தேர் இழுப்போம். அன்புடன் மனோ.

 *25வது ஆண்டு || 15.10.2023 || 3வது சந்திப்பு #கோடம்பாக்கம் #அரசுமேல்நிலைப்பள்ளி #முன்னாள்மாணவர்கள்*


*GHSS-KODAMBAKKAM FRIENDS 3RD REUNION 25TH YEAR SILVER JUBILEE (1998-2023) 15.10.2023 @VGP GOLDEN BEACH RESORT #CHENNAI*




மகேஷ்

நேற்று என் வாழ்வில் என்ன நடந்தது

 கனவா? நினைவா? காரிலே கடற்கரையை நோக்கி ஒரு பயணம் யார் யாருக்காகவோ காத்திருந்தேன். ஒருவர் ஒருவராக வந்தார்கள், யார் இவர்கள் எங்கோ பார்த்த ஞாபகம்

 என்னுள் கலந்த இவர்கள் இப்பொழுது எங்கிருந்து வருகிறார்கள்…

 

என்னையும் பின்னோக்கி அழைத்துச் சென்றார்கள். பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்தது வந்தது போல இருந்தது. சிரித்தேன், அழுதேன், சிறகடித்து பறந்தேன் சில நிமிடங்கள்

 

 இத்தனை இன்பங்கள், இத்தனை சந்தோஷங்கள், இத்தனை இதயங்கள்,

 எனக்காகவும் இருக்கிறதா இறைவா ஏன்? இதை இத்தனை ஆண்டுகள் மறைத்து வைத்தாய்

 

கடிகார முள்ளே நேற்று நின்று இருக்கக் கூடாதா. காலச்சக்கரமே நேற்று ஒரு நாள் நீண்டிருக்கக் கூடாதா

கடமையே நேற்று ஒருநாள் என்னை அழைக்காமல் இருந்திருக்கக் கூடாதா

 

பிரிவது எல்லாம் மீண்டும் சந்திக்கத்தான். மீண்டும் சந்திப்போம் என்ற எண்ணத்தோடு காற்று போல் கலந்து இருக்கிறேன் உங்களோடு….

 

GHSS இது ஒரு (ஸ்டார்) குரூப்.  நாம் அதில் பிக் பாஸ் குடும்பம் மாதிரி. இந்த Bigg Boss குடும்பத்தில் சந்தோஷம், சண்டை, சச்சரவு, ஆனந்தம், கொண்டாட்டம் அனைத்தும் இருக்கும்.. இந்த மூன்று ஆண்டுகள் (Reunion) நண்பர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது என்றால் எல்லாம் இந்த குழுவில் உள்ள (பாக்கியலட்சுமிகளின்) கருணையால் நாம் எல்லாம் குக் வித் கோமாளிகளே…,,,, இந்த பாக்கியலட்சுமிகளுக்காக அவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ பலகாரமோ முக அழகு சாதனங்களோ எந்த பொருள் வேண்டுமானாலும் உங்களுக்காக ஒரு ஸ்டோரை அதாவது (பாண்டியன் ஸ்டோர்) போலவே உருவாக்க நினைக்கிறோம் !! வாருங்கள் இப்போதே (சிறகடிக்கடிக்க ஆசையாக) உள்ளது.. என்ன பண்றது எங்கள் (பாரதிக் கண்ணம்மா) அதாவது எங்கள் புனிதா ஞாயிற்றுக்கிழமை தான் என்று சொல்லிவிட்டார்கள்.. பழைய கசப்புகளை மறந்து (செல்லமா) பேசிக்கொள்வோம் ஏனென்றால் இது நம் வெள்ளி விழா நம் குடும்ப விழா (கலக்கப்போவது யாருங்க) நம்ம விஜிபி ல வந்து பாருங்க அன்புடன் GHSS

 

Reunion லில் 🎆 கலந்து கொண்ட நண்பர்கள்

1.   Padmanabhan   

2.   Arun Kumar       

3.   Prabhakaran.     

4.   Magesh.              

5.   Jaya                     

6.   Ramesh               

7.   Velmurugan.       

8.   Malini                   

9.   Balamanikandan

10. Saritha.                

11. Vanitha.               

12. Hema.                 

13. Parthiban.           

14. Senthil Ooran.    

15. Punitha                

16. Arumugam          

17. Natarajan            

18 mano

19. Kumutha.            

20. Venkatesh.         

21. Vipin                   

22. Ravi                     

23. Meena                

24. Balamurugan    

25. Panaiyappan      

26. Haja                     

27. Vijayakumar

 

_*கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்*_

 

_பேச்சுத் துணைக்கு_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_பேசும்போது_

_பேசாமல் இருக்க_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_துன்பங்களைப்_

_பகிர்ந்துகொள்ள_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_தூங்கும் போதும்_

_காத்திருக்க நல்ல_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_நடைபயிற்சிக்கு_

_துணையாக_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_நல்லது கெட்டது_ _சொல்ல_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _பயணங்களின் போது_

 _பேசி மகிழ_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_படித்ததில் சிலவற்றை_

 _பகிர்ந்து கொள்ள_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_அறிவுரை சொல்ல_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_அன்பே உருவான_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _ஆற்றல் நிறைந்த_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_ஆலயங்களுக்கு செல்ல_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _அடித்து திருத்த_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_அணைத்துக்கொள்ள_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_குடும்ப உறவாக_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _குதூகலமாய் இருக்க_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _கொடுப்பதற்கு_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _கேட்பதற்கு_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _தடுத்து நிறுத்த_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _தட்டிக்கொடுக்க_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _புகழ்ந்து பேச_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_புரட்சிகள் செய்யும்_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _பொறுமை மிகுந்த_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_பொறுப்பான_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_புண்ணியம் செய்கின்ற_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_புறம் பேசாத_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _படைத்தலைவன் போல்_

 _*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _படித்ததை சொல்ல_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _பாசத்தை கொட்ட_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_பக்குவமாய்_

_எடுத்துச் சொல்ல_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_ஓடி விளையாட_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

 _உதவி என்றால் ஓடோடி வர_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_உயிருக்கு உயிராய பழகிட_

_*சில நண்பர்கள் வேண்டும்*_

 

_இவை_ _அனைத்தும்_

_கலந்த ஒரு_ _நண்பன்_

_எப்போதும் உடன் வேண்டும்_

 

_*அது யார் என்று*_ 

_*நீங்கள்*_ _*அறியவேண்டும்*_

 

_அந்த நட்பை எந்நாளும் போற்றி  தொடர்ந்திடவேண்டும்_

 

_*அதுவரை*_ _*கிடைக்கின்ற*_

_*நல்லநட்பை*_ _*போற்றிடவேண்டும்*_





0 Response to "அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், 1997 – 98 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் வெள்ளி விழா – சந்திப்பு - 15.10.2023"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel