அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் ஆண்டு விழா
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, அயப்பாக்கம் , பள்ளியில் 17.2.24 அன்று மாலையில் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. அ. ம.துரைவீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வின தொடக்கமாக அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் அ.ம.துரை வீரமணி அவர்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்களும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். நிகழ்வில் முன்னதாக வரவேற்புரையை உதவித் தலைமையாசிரியர் சி. சாலமன், நிகழ்த்தினார். இவ்வாண்டிற்கான ஆண்டறிக்கையைத் தலைமை ஆசிரியர் சி. கருணாகரன் அவர்கள் படித்தார். நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன. இந்நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் நன்றாக ஏற்பாடு செய்தனர் .
ஆசிரியர் சுசிலா, சுஜிதாமேரி , விஜயவேணி, மேரிப்பிரியா, நீலமதி, தெய்வானை, கல்யாணி, சரளாதேவி, பத்மாவதி, மரியதீபா போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்தனர். மாணவர்கள் பாடல் , பாடலுக்கு நடனம் மற்றும் நாடகம், மேஜிக் ஷோ, தனித்திறன் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனர். நிகழ்வில் விளையாட்டுப் போட்டிக்கு என்று நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்குக் கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 33 மாணவர்களுக்கும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு தினமும் வந்த 20 மாணவர்களுக்கும் சான்றிதழ் என்று இவர்களுக்கான பரிசுகளைச் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு கொடுத்து தம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆண்டு விழாவிற்கு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பங்காற்றினார் . 1100 மாணவர்கள் பொதுமக்கள் 200 நபர்கள் என்று பலர் ஆண்டு விழாவைக் கண்டுகளித்தனர். ஆசிரியர்களின் ஈடுபாடும் மாணவர்களின் பயிற்சியும் நிகழ்வு வெற்றி பெற காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுமக்களும் மாணவர்களும் ஊராட்சி மன்ற அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் திரு. முரளிதரன் அவர்கள் மாணவர்களை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்தினார்.
பாலமுருகன் இருவரும் நன்றாக தொகுத்து வழங்கினர்.
0 Response to " திருவள்ளூர், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் ஆண்டு விழா 17.02.2024"
Post a Comment