நன்றி / நன்றிகள்
எது சரி?
தங்களுக்கு யார் என்ன உதவி செய்தாலும் அவர்களுக்கு 'நன்றி' சொல்வது தமிழர் மரபு.
'நன்றி' என்ற சொல்லை வெறும் சொல்லாக பார்க்காமல் உணர்வாக பார்ப்பவர்கள் தமிழர்கள்.
அதனால் 'நன்றி' என்ற சொல்லை
எப்போதுமே உள்ளன்போடு சொல்வார்கள்.
கொஞ்சம் காலமாகவே நம் தமிழ்மக்கள் ஆங்கில மோகத்தில் மதிமயங்கி
இருக்கிறார்கள். அதனால் 'பொருள் மயங்கும் '
சொற்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் .
THANKS என்ற ஆங்கிலப் பன்மைச் சொல்லின் தாக்கத்தினால் 'நன்றி
' என்பதற்கு மாற்றாக ' நன்றிகள் ' என்ற சொல்லைப்
பயன்படுத்தி வருகிறார்கள். "புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை
" போல இருக்கிறது இன்று நம் தமிழ் மக்களின் மொழிப் புலமை .
'நன்றி ' என்ற சொல் ஒட்டு மொத்த மன உணர்வின் தொகுப்பாகவே பார்க்க
வேண்டும்.
அதற்கு ஒருமை, பன்மை இருக்க முடியாது.
"நான் அவர் மீது சினம் கொண்டேன்" என்று சொல்லலாம்.
"நான் அவர் மீது
சினங்கள் கொண்டேன்" என்று சொல்ல முடியுமா? .
'அறம் ' என்று தான் சொல்ல வேண்டும். 'அறங்கள்' என்று சொல்லக் கூடாது.
உணர்வு அடிப்படையில் உருவாகும் எந்த சொற்களுக்கும் ஒருமை, பன்மை
கிடையாது.
அழுகைகள்
மகிழ்ச்சிகள்
வெறுப்புகள்
கோபங்கள் என்றெல்லாம் சொல்லக் கூடாது.
வள்ளுவர் கூட தம் குறட்பாவில்
எந்நன்றி
செய்ந்நன்றி
நன்றி மறப்பது நன்றன்று
என்று தான் பயன்படுத்தி இருக்கிறார். எங்குமே 'நன்றிகள் ' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை
.
எனவே 'நன்றி' என்றே சொல்லுவோம்!
'நன்றிகள்' சொல்வதைத் தவிர்ப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! -10 - நன்றி / நன்றிகள் எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment