விவரம்
/ விபரம்
எது
சரி?
'விவரி
' என்பது வினையடி (வேர்ச்சொல்)
இதிலிருந்து
விவரம், விவரித்தல் ஆகிய தொழிற்பெயர்கள் உருவாகின்றன .
வினைமுற்றின்
வகைகளை விவரி? என்று அமைவதைக் கண்டிருக்கிறோம்.
"இவர்
விவரமான ஆளு " என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம்.
Bio
data - தன்விவரக் குறிப்பு என்று எழுதுவதைப் பார்த்து இருக்கிறோம்.
எனவே,
'விவரம் ' என்பதே சரி.
'விபரம்
' என்பதற்கு எது வினையடி? விபரி எனச் சொல்வது எப்படி பொருந்தும்?
அப்படிச்
சொன்னால் அது "விபரீதம் " ஆகிவிடும்.
'விபரித்தார்
' என்ற சொல்லை நாம் எங்காவது பயன்படுத்துகிறோமா?
இல்லை.
'விபரம்'
என்பது போலி .
எனவே,
'விபரம்' என்ற சொல்லை இனி பயன்படுத்தாதீர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! -11 விவரம் / விபரம் எது சரி? - ஆ.தி.பகலன்"
Post a Comment