பன்னிரண்டு
பனிரெண்டு
பன்னிரெண்டு
எது
சரி?
"இரண்டு
முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட
ஒற்று 'ன'வ்வாகும் என்ப "
(நன்னூல்
: எழுத்ததிகாரம் : உயிரீற்றுப் புணரியல் நூற்பா - 198)
வருமொழியில்
இரண்டு என்னும் எண்ணுப்பெயர் வந்து புணரும்போது, நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப் பெயரின் இறுதியில்
உள்ள 'து' என்னும் உயிர்மெய் கெடும். நடுவில்
நின்ற தகரமெய் (த்) னகர மெய்யாகத் (ன்) திரியும் .
பத்து
+ இரண்டு
பத்
+ இரண்டு
பன்
+ இரண்டு
'தனிக்குறில்
முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் ' (நன்னூல்
- 205 )
என்ற
விதிப்படி ' நிலைமொழி ஈற்று ஒற்று (ன்) இரட்டிக்கும்.
பன்ன்
+ இரண்டு.
'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ' (நன்னூல் - 204 )
என்ற விதிப்படி நிலைமொழி ஈறும் (ன்) வருமொழி முதலும்
(இ) புணர்ந்து ( ன்+இ=னி) 'பன்னிரண்டு ' என
வரும்.
எனவே, 'பன்னிரண்டு ' என்பதே சரி.
பனிரெண்டு
'ரெண்டு'
என்பது வழூஉச்சொல்.
'பனிரெண்டு
' பெய்யும் பனியில் இரண்டு என்று பொருள்.
பன்னிரெண்டு
பன்றியில்
(பன்னி) இரண்டு என்று பொருள்.
இனி
"பன்னிரண்டு " என்றே எழுதுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 12 பன்னிரண்டு பனிரெண்டு பன்னிரெண்டு எது சரி? - ஆ.தி.பகலன்"
Post a Comment