தமிழ் அறிவோம்! - 13 - காவிரி / காவேரி எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 13 - காவிரி / காவேரி எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   - 13 - காவிரி / காவேரி  எது சரி? ஆ.தி.பகலன்

 


காவிரி / காவேரி

எது சரி?

 

காவேரி :

காவேரன் என்ற அரசனின் மகள் தான் காவேரி. அவளே பின் நதியாகவிட்டாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த அடிப்படையில் உருவான பெயர்தான் 'காவேரி ' .

 

'இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால்' என்ற விதிப்படி 'வி' என்பது ' வே' ஆகி காவேரி ' என்று ஆகிவிட்டது.

 

காவிரி :

கா+விரி = காவிரி

கா - காடு, சோலை.

 (பூ + கா = பூங்கா - பூக்கள் நிறைந்த சோலை. )

 

தான் செல்லும் இடம் எல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால்  'காவிரி '  எனப்பெயர் பெற்றது. அதாவது நீர் வளத்தை அள்ளித் தந்து மண்ணில் சோலைகளின் பரப்பை அதிகப்படுத்துவதால்  'காவிரி ' என்று அழைக்கப்படுகிறது.

 

"வான் பொய்ப்பினும் தான் பொய்யா,

மலைத் தலைய  கடற்காவிரி " என்று காவிரியைப் போற்றுகிறது பட்டினப்பாலை.

 

காரணம் கருதி வழங்கப்படும் பெயரான 'காவிரி ' என்ற பெயரையே இனி பயன்படுத்துவோம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to "தமிழ் அறிவோம்! - 13 - காவிரி / காவேரி எது சரி? ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel