
கேள்வி - பதில் /
வினா - விடை
எது சரி?
கேள்வி :
கேள் + வி.
'கேள் ' என்பது கேட்டல் என்ற பொருளைத் தரும்.
'வி' என்னும் தொழிற்பெயர் விகுதியைப் பெற்று 'கேள்வி' என்றானது.
'கேள்வி' என்பது நல்ல தமிழ்ச்சொல் ஆகும். இதை பயன்படுத்துவதில்
எந்தத் தவறும் இல்லை.
பதில் :
'பதில்' என்பது 'தமிழ்ச்சொல்'
அன்று. 'உருது' மொழிச்சொல்லின் திரிபாகும்
. ஆகையால், 'பதில்' என்னும் சொல்லை பயன்படுத்தத்
தேவையில்லை.
'பதில்' என்னும் சொல்
'விடை' என்ற பொருளைத் தவிர வேறு பொருளிலும் வருகிறது.
பதில் மடல் (மறு மடல்)
பதில் ஆள் ( மாற்று ஆள்)
'அவருக்குப் பதிலாக இவர் ' என்றால் அவருக்கு மாற்றாக இவர் என்று
பொருள்.
எனவே ' பதில் ' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
வினா - விடை ::
ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இப்படி
வினவுவப்படுவதையே 'வினா' என்கின்றனர்.
வினவப்பட்ட வினாவுக்கு , விடுக்கப்படும் மறுமொழியே
'விடை' என்பர்.
ஆதலால் 'வினா-விடை' என்பதே சரியானது.
நம் தமிழ் இலக்கண நூல்களும் "அறுவகை வினா " என்றும் " எண்வகை விடை "
என்றும்தான் வகைப்படுத்தி வைத்துள்ளன.
எனவே இலக்கண முறைப்படி "வினா - விடை " என்றே பயன்படுத்துவோம்
.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! -9 - கேள்வி - பதில் / வினா - விடை எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment