தமிழ் அறிவோம்! 100. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 100. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 100. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க  ஆ.தி.பகலன்

 


" பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க "
 

ஒருவரை வாழ்த்தும் போது " பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று சொல்லி வாழ்த்துவோம்.

அந்த பதினாறு பேறுகளை  (செல்வங்களை) அறிவோம். 

"கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், ,இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி" என்பவைதான் அந்த  பதினாறு செல்வங்களாகும் . 

ஒரு மனிதன் பெருவாழ்வு வாழ பதினாறு செல்வங்கள் தேவைப்படுவது போல, ஒரு மொழி பெருவாழ்வு வாழவும் பதினாறு செல்வங்கள் தேவைப்படுகிறது. அந்த பதினாறு செல்வங்களையும் அறிவோம் . 

" தொன்மை, முன்மை, நுண்மை,

திண்மை, எண்மை, ஒண்மை,

இனிமை, தனிமை, இளமை,

வளமை, தாய்மை, தூய்மை,

மும்மை, செம்மை, இயன்மை,

வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ; அதுவே நம்மொழி " என்கிறார் தேவநேயப் பாவாணர் .

செம்மொழிக்கான பதினாறு செவ்வியல் தன்மைகளையும் முற்றிலும் பொருந்திய  உலகின் ஒரே  மொழியாக தமிழ்மொழி மட்டுமே விளங்குகிறது . உலகில் உள்ள மற்ற செம்மொழிகள் எல்லாம், செவ்வியல் தன்மைகளுள் பத்தைக் கூடத் தாண்டவில்லை .

தமிழ்மொழி மட்டுமே பதினாறு செவ்வியல் தன்மைகளைப் பெற்று சிறப்புற்று இருக்கிறது. 

அதனால்தான் ,

யாராலும் அசைக்க முடியாத மொழியாகவும்,

எந்த மொழியாலும் அழிக்க முடியாத மொழியாகவும் நம் தமிழ்மொழி காலம்கடந்து நிற்கிறது. 

ஒரு செம்மொழிக்கு தேவையான பதினாறு ( செல்வங்களை ) செவ்வியல் தன்மைகளைப் பெற்ற  மொழியாக தமிழ்மொழி இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து பெருவாழ்வு வாழ்கிறது. இனியும் பலகோடி ஆண்டுகள் கடந்து பெருவாழ்வு வாழும் நம் தமிழ்மொழி. 

இனிவரும் காலங்களில் நாம் ஒருவரை வாழ்த்தும்போது,

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என வாழ்த்தாமல்

" பதினாறும் பெற்ற தமிழ்மொழியைக் கற்று பெருவாழ்வு வாழ்க " என வாழ்த்துவோம்.

பதினாறு செல்வங்கள் நம்மிடம் இல்லையென்றாலும் பரவாயில்லை. பதினாறும் பெற்ற தமிழ்மொழி மட்டும் நம்மோடு இருந்தால் போதும் .நாம் அனைவரும் பெருவாழ்வு வாழலாம். 

"இந்த உலகம் இருக்கும்வரை

தமிழ் இருக்குமோ  இருக்காதோ " எனக்குத் தெரியாது!

ஆனால்,

"தமிழ் இருக்கும்வரைதான்

 இந்த உலகம் இருக்கும் " என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

 


0 Response to "தமிழ் அறிவோம்! 100. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel