"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
"
இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டை ஆள்பவனே சிறந்தவன்,
உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டு அதிகார போதையில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆள்பவனை விடவும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்கும் அழகான பாடல் ஒன்றை
இங்குக் காண்போம்.
" மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. ( மூதுரை - 26)
ஒரு நாட்டின் மன்னனைவிட குற்றமறக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.
ஏனெனில்,
மன்னனுக்கு அவன் ஆட்சி செய்கின்ற நாட்டில் மட்டுமே
மதிப்பு உண்டு. மாலை மரியாதை எல்லாம் உண்டு. அம்மன்னன் மற்ற நாடுகளுக்கு சென்றால்
மதிப்பு என்பது துளியளவு கூட கிடைக்காது .
ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற நாட்டில்
எல்லாம் அவர்களுக்கு மதிப்பும் உண்டு. புகழும் உண்டு. எந்த ஒரு
நாட்டிலும் கற்றவர்களுக்கென்று தனி மரியாதை உண்டு.
ஆதலால், மன்னனை
விட மாசறக் கற்றவர்களே மதிப்பு மிக்கவர்கள். சிறப்பு மிக்கவர்கள்" .
இந்த உலகத்தை
ஆள்பவர்களை விட உயர்ந்த இடத்தில்
நிற்க வேண்டும் என்றால் , நாம் கற்றவர்களாக இருக்கவேண்டும். அறிவைப்
பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதற்கு ஒரே வழி நாம் நூல்களை வாசிக்கும் பழக்கம்
உடைவர்களாக மாற வேண்டும்.
இந்ந உலகமே நம் உள்ளங்கையில் இருக்க வேண்டும் என்றால் ,
நம் கையில் எப்போதும் புத்தகம் இருக்க வேண்டும்.
நல்ல மனிதன் என்பவன், புத்தியோடும்
இருக்க வேண்டும். புத்தகத்தோடும் இருக்க வேண்டும்.
நூல்களை
வாசிக்கப் பழகு!
நீ வாழும் வாழ்க்கைக்கு
அதுதான் உண்மையான அழகு!
"உலக புத்தக நாள் "
( ஏப்ரல் - 23)
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்"
Post a Comment