"ஐம்பெரும்பூதங்கள் "
நிலம், நெருப்பு, நீர், காற்று, வானம் ஆகியவையே ஐம்பெரும்பூதங்களாகும்.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என தொல்காப்பியம் கூறுகிறது.
" நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
" ( தொல்காப்பியம், மரபியல் - 635 )
இன்று அறிவியல் ஏற்றுக்கொண்ட இச்செய்தியை ஐந்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறது தொல்காப்பியம்.
" மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைந்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே " ( திருமந்திரம்
- 2290)
மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்ட
குழந்தை, 'யானை! யானை ' என்று அஞ்சி தன்
தாயிடம் செல்கிறது.
" இது யானை
இல்லை. மரம்" என்று கூறி குழந்தையின் அச்சத்தை நீக்குகிறாள் தாய்.
யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை.
மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை.
அது யானையா? மரமா?
ஒன்றை உணர்ந்தவர்களுக்கு மற்றொன்றை உணர முடியவில்லை.
அது போலவே,
ஐம்பூதங்களைக் காண்பவர்களுக்கு இறைவன் புலப்படுவது
இல்லை.
இறைவனைக் காண்பவர்களுக்கு ஐம்பூதங்கள் புலப்படுவது இல்லை.
மரம் வேறு யானை வேறு இல்லை. அதுபோல,
இறைவன் வேறு ஐம்பூதங்கள் வேறு இல்லை. எல்லாம் அவரவர்
பார்வையில்தான் இருக்கிறது.
மரம்தான் யானையாக இருக்கிறது என்று தெளிவுபெற்ற தாயைப்
போல, ஐம்பூதங்கள்தான் நமக்கு இறைவனாக
இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் தெளிவு பெறுவோம்!
இந்த உலகிற்கு
உண்மையான இறைவன்
ஐம்பெரும்பூதங்களே!
" மாசற்ற பூமியே
மனிதர்க்கு சாமி! "
"புவி நாள் " (ஏப்ரல் -22)
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 98. ஐம்பெரும்பூதங்கள் ஆ.தி.பகலன்"
Post a Comment