"மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி"
மன்னன் நல்லவனாக இருந்தால் மக்களும் நல்லவர்களாக இருப்பர். மன்னன் கெட்டவனாக இருந்தால் மக்களும் கெட்டவர்களாகவே இருப்பார்.
"மன்னன் எதை செய்கிறானோ, அதையே மக்களும் செய்ய வேண்டும் " என்ற மன்னராட்சி தத்துவத்தை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம்.
" இகழின் இகழ்ந்தாங்கு இறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற்று என்செயும்
நீர்வழிப் பட்டதே புணை. ( நீதிநெறி விளக்கம் - 44)
மன்னன் ஒரு பொருளை இகழ்ந்து பேசினால், குடிமக்கள் தாமும் மன்னனோடு சேர்ந்து அதனை இகழ்வர். மன்னன் ஒரு பொருளைப் புகழ்ந்து பேசினால், குடிமக்கள் தாமும் மன்னனோடு சேர்ந்து புகழ்வர்.
ஆற்றுநீர் செல்லும் போக்கிலேயே தெப்பம் செல்லாமல் வேறு என்ன செய்யும்?
அதுபோலவே ,
மக்களும் வலிமை மிக்க மன்னனின் ஆணைக்கு அடங்கியே அவன்வழி செல்வர்.
தான் செல்லும் வழியிலேதான் மக்களும் செல்வர் என்பதை நன்குணர்ந்து நல்வழியை நாடி மன்னன் செல்ல வேண்டும்.
இது மன்னராட்சிக்கு மட்டுமல்ல.
மக்களாட்சிக்கும் பொருந்தும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 101 மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ஆ.தி.பகலன்"
Post a Comment