
பிஞ்சும் இருக்கிறது
அரசரைப் புகழ்ந்து பாடி பொன்னாடை ஒன்றைப் பரிசாகப் பெற்றார் புலவர் ஒருவர்.
அந்தப் பொன்னாடையைத் தடவிப் பார்த்ததும் அது கிழிந்து இருப்பதைக் காண்கிறார் . அதனால் வருத்தமுற்ற அப்புலவர், இந்தக் கிழிந்த பொன்னாடையை எப்படி கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தார்.
புலவரின் முக வாட்டத்தை உணர்ந்து கொண்ட அரசர், "பொன்னாடை பிடித்திருக்கிறதா புலவரே? எனக் கேட்டார்.
"அரசே ! தாங்கள் வழங்கிய பொன்னாடை மிகவும் அருமையாக
இருக்கிறது .
அதில் மரம் இருக்கிறது.
கிளை இருக்கிறது.
இலை இருக்கிறது.
காய் இருக்கிறது.
கனி இருக்கிறது.
இதோ , பிஞ்சும் இருக்கிறது" எனக் கூறினார் .
அதாவது, பொன்னாடை பிய்ந்து போய் இருக்கிறது என்பதை
நயமாக அரசருக்குச் சுட்டிக் காட்டினார் அப்புலவர் .
பொன்னாடை கிழிந்து இருப்பதை சிலேடை மூலம் உணர்த்திய அப்புலவரின் கவி நயத்தைக் கண்ட அரசர், புதிய பொன்னாடையுடன் பொன்முடிப்பையும் பரிசாகத் தந்து அப்புலவரைச் சிறப்பித்தார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 102. பிஞ்சும் இருக்கிறது ஆ.தி.பகலன்"
Post a Comment