
பழக்கம்
'பழக்கம் ' என்றாலே பழகுதல் , பயிற்சி செய்தல் என்று பொருளாகும்.
ஒரு செயலை நாளும் செய்து வந்தால் நாளடைவில் அது பழக்கமாகிவிடும்.
நல்லது கெட்டது எல்லாமே பழக்கத்தால் வருவது என்பார்கள். எல்லாவற்றையும் பழக்கத்தால் கொண்டு வர முடியாது. சில நற்குணங்கள் மரபு வழி வருவனவாகும் என்று வகைப்படுத்தி உள்ளார் ஔவையார்.
" சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
(தனிப்பாடல் திரட்டு - ஔவையார் பாடியது)
ஓவியத்தை வரைய வரைய ஓவியம் வரைவது பழக்கமாகிவிடும்.
பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும்.
திரும்பத் திரும்ப நினைத்துப்பார்த்தால் கற்ற கல்வி மனத்தில் பதிந்துவிடும். மனனம் செய்வதும் பழக்கமாகிவிடும்.
நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால்
அதுவும் பழக்கமாகிவிடும்.
ஆனால்,
நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப்பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
"நட்பு, இரக்கம், கொடை போன்ற நற்பண்புகள்
பழக்கத்தால் வருவதல்ல.
பெற்றோர்களிடம் இருந்து நமக்குக் கிடைக்கும் கொடையாகும்.
இதையே பிறவிக்குணம்" என்கிறார் ஔவையார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 104. பழக்கம் ஆ.தி.பகலன்"
Post a Comment