பொதுவுடைமை
'பொதுவுடைமை ' என்ற கருத்தியல் ஏதோ உருசியா ( Russia)
வில் கண்டறியப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கருதுகிறார்கள்
தோழர்கள் சிலர்.
உருசியா நாட்டில் உயிரினம் தோன்றுவதற்கு முன்னரே '
பொதுவுடைமையைப் பற்றி பேசியவர்கள் ,
பொதுவுடைமை வாழ்வை நிலைநாட்டியவர்கள் தமிழர்கள்.
பொதுவுடைமை கருத்தியலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கவிதை வடிவில் பேசியவர் கணியன்
பூங்குன்றனார்.
இதைவிட சிறந்த பொதுவுடைமை கருத்தை இந்த உலகில் யாரேனும்
சொன்னதுண்டா?
எல்லா ஊரும் எங்கள் ஊரே!
எல்லா மனிதர்களும் எங்கள் உறவினர்களே! என்று வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலையே தன் கவிதையில்
பாடியுள்ளார் கணியன் பூங்குன்றனார்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுவுடைமை தோழர்களுக்கு எல்லாம்
முன்னோடியாக இருந்தவர் தோழர் ஜீவானந்தம் ( ஜீவா) .
கம்பராமாயணத்தில் உள்ள சில பாடல்கள் பொதுவுடைமை கருத்துக்கு வலுசேர்க்கும்
விதத்தில் இருப்பதைக் கண்டு கம்ராமாயணத்தைப் போற்றினார் . கம்பரைக் கொண்டாடினார் .
தோழர் ஜீவா அவர்கள் போற்றிய கம்பராமாயணப் பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
"கல்லாது நிற்பர் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லவர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையர்களும் இல்லை மாதோ "
( கம்பராமாயணம் : பால காண்டம் - நகரப்படலம் - 167 )
கல்லாது நிற்பவர் எவருமே இலர். அங்ஙனம் இருக்கும் போது
" இவர் படித்தவர் , இவர் படிக்காதவர் என்ற வேறுபாடு அங்கே இல்லை.
செல்வம் எல்லோரிடமும் சமமாக இருந்தது. எல்லோரும் செல்வம்
பெற்று இருந்தனர். அதனால், அங்கே ஏழையும்
இல்லை. பணக்காரரும் இல்லை.
"பெறுவதற்குரிய செல்வமும் கல்வியும் பெற்று இனிது
வாழ்ந்தனர். அந்நகர மக்கள் அடைந்த
வாழ்வானது பேரின்ப வாழ்வு " என்று போற்றுகிறார் கம்பர்.
தமிழர்களின் வாழ்வியலை மனத்தில் நிறுத்தியே
கம்பராமாயணத்தைப் படைத்தார் கம்பர் என்பது யாவரும் அறிந்ததே. பொதுவுடைமை வாழ்வினை
இதைவிட சிறப்பாக யாரேனும் சொன்னதுண்டா?
பொதுவுடைமை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நம்
கண்முன்னே நிறுத்துகிறது கம்பனின் இப்பாடல்.
இதைவிட சிறந்த பாடல் உலகில் உண்டோ?
தோழர் ஜீவாவைப்
போல தமிழிலக்கியத்தைப் படிக்காததால்தான் அந்நியக் கருத்தியலுக்கு கவரி
வீசிக் கொண்டு இருக்கிறார்கள் தோழர்களுள்
சிலர்.
பொதுவுடைமை நெறியில்
வாழ வேண்டும் என்கிறார்கள் இன்றைய பொதுவுடைமை தோழர்கள்.
பொதுவுடைமை வாழ்வினை வாழ்ந்துவிட்டு பொதுவுடைமை இதுவென
சொன்னார்கள் தமிழர்கள்.
ஆகவே,
பொதுவுடைமை கருத்தியலுக்குத்
தமிழர்களே முன்னோடி!
மற்றவர்கள் எல்லாம்
தமிழர்களுக்குப் பின்னாடி!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 107. பொதுவுடைமை ஆ.தி.பகலன்"
Post a Comment