
கருமியின் செல்வம்
வானம் பெரிதுதான்.
அதைவிட பெரிது மனிதனின் ஆசை.
அளவற்ற செல்வங்களை ஈட்ட வேண்டும். அடுக்கடுக்காக. மாளிகைகளைக் கட்ட வேண்டும். தங்க நகைகளை வாங்கிக் குவிக்க வேண்டும். ஆயுள் முடிந்தால் ஆறடி நிலம்தான் சொந்தம் என்பதை அறியாமல் , கண்ணில் படுகின்ற நிலங்களை எல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணில் அடங்கா ஆசைகளோடு வாழ்கிறார்கள் சிலர்.
"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள் - கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்." ( நல்வழி - 22)
செல்வத்தை அரும்பாடுபட்டுச் சேர்த்து, அதனை உண்ணாமலும்
பிறர்க்கு வழங்காமலும் நிலத்தில் புதைத்து வைத்து அழிவினை அடைந்த மனிதர்களே!
கேட்பீர்களாக; உடம்பாகிய கூட்டினை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்தச் செல்வத்தை இங்கு யார் அனுபவிப்பார்கள்?
பாவிகளே! சொல்லுங்கள்.
அறச்செயல்கள் செய்து ஆழிசூழ் உலகை அறம்சூழ் உலகாக மாற்றாமல் அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைப்பவர்களுக்கு, அடுத்த தலைமுறை என்ற ஒன்று இருக்கும். ஆனால், அது தரம்கெட்டு இருக்கும். உழைப்பின் அருமை தெரியாமல் சோம்பேறிகளாய் இருந்து பரம்பரை சொத்தில் சோறு உண்பவர்களுக்கு உண்ட சோறு செரிக்காது. வாழும் வாழ்க்கையும் நிலைக்காது.
" வள்ளல்களாய்
வாழவில்லை என்றாலும் பரவாயில்லை!
மற்றவர் வயிற்றில்
அடித்து வாழாமல் இருந்தாலே போதும்!
நீடித்த புகழ் வந்து சேரும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 109. கருமியின் செல்வம் ஆ.தி.பகலன்"
Post a Comment