கத்திரி வெயில் ( அழல் மீன்)
'கத்திரி ' என்ற சொல்லுக்கு 'சூடு' என்பது பொருளாகும். உடம்பில் சூட்டை உண்டாக்கும் காய்க்கு ' கத்திரிக்காய் ' என்று பெயர் வைத்து அழைத்தனர். உடலுக்கு சூடு தரும் காய் இது. அரிப்பை உண்டாக்கும். புண்கள் ஆறவும் அதிக நாள் ஆகும். குளிர்காலத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்திரிக்காய் குழம்பு வைத்து உண்பது தமிழர் வழக்கம் .
மண்ணுக்கும் , மனிதனுக்கும் சூட்டை உண்டாக்கும் வெயிலுக்கு " கத்திரி வெயில் " என்று பெயரிட்டு அழைத்தனர் .
பூமியைச் சுற்றி பல விண்மீன் குழுக்கள் உள்ளன . அவற்றில் ஒரு விண்மீன் கூட்டத்தின் பெயர் " பெருநாய் ( Canis Major) . கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். இந்த விண்மீன் கூட்டம் பார்ப்பதற்கு பெரிய நாயைப் போல இருப்பதால் அதற்கு " பெருநாய் " என்று பெயரிட்டனர்.
இந்தப் பெருநாய் விண்மீன் கூட்டத்தில் உள்ள விண்மீன்களில் முதன்மையானதாக இருப்பது சிரியஸ் ( Sirius) என்ற விண்மீன் ஆகும். புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக ஒளியோடு தென்படும் விண்மீன் 'சிரியஸ் ' ஆகும்.
இந்த 'சிரியஸ் ' விண்மீனையே கத்திரி மீன் என்றும், அழல் மீன் என்றும் தமிழர்கள் பெயர் சூட்டி அழைத்தனர். இதை "வானத்தின் அரசி " என்று ஜப்பான் நாட்டினர் போற்றுகின்றனர்.
"பெருநாய்" விண்மீன் கூட்டத்தில்
ஒளிமிக்க வீண்மீனான ' கத்திரி '
என்ற அழல்மீன், மேழம் ( சித்திரை)
மாதத்தில் சூரியனுக்கு மிக அருகில் வரும். அப்போது " எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது
போல் " வெப்பத்தை உமிழும் வெயிலுக்கு " கத்திரி வெயில் " என்று
பெயரிட்டு அழைத்தனர்.
சூரியனின்
பயணத்தை வீதியாக பகுத்து அதனை எரி ( மேழம்) , சடை, ஆடவை என மூன்று வீதியாக
பிரித்த செய்தியைப் பரிபாடல் விளக்குகிறது. சூரியனின்
முதல் பாதை மேழத்தில் தொடங்கி நான்கு மாதங்கள் (சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி) பயணிக்கும். இந்த நான்கு மாதங்களும் புவி வெப்ப மயமாகவே இருக்கும் .
" கத்திரி" விண்மீனானது மேழம் ( சித்திரை) மாதத்தில் , மேற்கு திசையில் மாலை ஏழு மணிக்கு மேல் எட்டரை மணி வரை அதிக ஒளிர்வுடன் வெறும் கண்ணுக்கே புலனாகும்.
மேழம் ( சித்திரை) மாதத்தின் கடைசி பத்து நாள்கள் , விடை ( வைகாசி) மாதத்தின் முதல் பதினைந்து நாள்கள் என மொத்தம் 25 நாள்களில் கொளுத்தும் வெயிலை " கத்திரி வெயில் " என்பர். மனிதனையும், அவன் மன நிம்மதியையும் கத்திரிக்கோல் கொண்டு வெட்டி வீசுவதே இந்தக் கத்திரி வெயிலின் தலையாயக் கடமையாகும்.
" கத்திரி வெயில் " பற்றி இனிக் கவலை வேண்டாம் :
"வீட்டுக்கு ஒரு வேப்ப மரம் இருந்தால்
வைத்தியர் தேவையில்லை" என்பார்கள்.
கண்ணுக்குத் தெரியாத எல்லா வகை நுண்ணுயிர்களையும் கொல்லும் ஆற்றல் வேப்ப
மரத்திற்கு உண்டு. நாம் வேப்ப மரத்தோடு இருப்பதும் மருத்துவரோடு இருப்பதும்
ஒன்றே . ஆதலால், வீட்டுக்கு ஒரு
வேப்ப மரம் வளர்ப்போம். இல்லையேல் வேப்ப மரத்திற்கு பக்கத்தில் எப்போதும் நாம்
இருப்போம். ஒரு வேப்ப மரம் என்பது 500 குளிரூட்டிக்கு ( AC) சமமாகும். அந்த அளவுக்கு குளிர்ச்சியைத் தரும்
மரம் வேப்ப மரமாகும்.
நாள் முழுவதும் வேப்ப மரத்தோடு இருந்து பாருங்கள்.
கத்திரி வெயில் உங்களை கடுகு அளவு கூட துன்புறுத்தாது.
இனியாவது,
வேப்ப மரத்தை நடுங்கள்!
வேப்ப மரத்தை நாடுங்கள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 110. கத்திரி வெயில் (அழல் மீன்) ஆ.தி.பகலன்"
Post a Comment