பிணி இல்லா வாழ்க்கை "
'பிணி' என்ற சொல்லுக்கு நோய், துன்பம் என்று பல பொருள்
உண்டு. இன்றைய உலகில் இருக்கும் மிகப்பெரிய துன்பமே நோய்தான். நோயால் வரக்கூடிய துன்பமும்,
இறப்புமே மனித சமூகத்தை எப்போதுமே
மனக்கவலையில் வைத்திருக்கிறது.
இந்தப் பிணி என்னும்
துன்பத்தில் இருந்து விடுபட என்னதான் வழி?
" நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி
உண்பவர்தம்
பேருரைக்கின் போமே பிணி. ( தேரையர் பாடல்)
நீர் சுருக்கி :
நீரை நன்றாக கொதிக்க வைத்து உண்ண வேண்டும். நீரை நான்கில்
மூன்று பங்காக கொதிக்க வைத்து ஆறிய
பின்னர்தான் குடிக்க வேண்டும். அப்போதுதான் நீரில் உள்ள நுண்கிருமிகள் அழியும்.
நீர் உணவாக மாறும். வெந்நீரைக் குடித்தே (
உணவு உண்ணாமல்) பலநாள் உயிர் வாழ்ந்தவர்
வள்ளலார். வெந்நீரின் அருமைகளை வெளியுலகிற்கு அதிகமாகச் சொன்னவர் வள்ளலார்தான் .
நமக்கு வரும் நோய்களுக்கு அடிப்படைக் காரணம்
தண்ணீர்தான். தண்ணீர் வழியாகத்தான் எல்லா நோய்களும் வருகின்றன. ஆகையால், நாம்
எப்போதுமே வெந்நீரையே குடிக்க வேண்டும்.
மோர்பெருக்கி :
மோரில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுத்த பின்னர் அதில்
அதிக அளவில் நீரைச் சேர்க்க வேண்டும்.
எந்த அளவுக்கு நீரை மோருடன் சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு மோரின் பயன்
பன்மடங்கு அதிகரிக்கும். அதனால்தான் மோரை ' மோர்' என்று அழைக்காமல் "
நீர்மோர் " என்று அழைத்தார்கள் தமிழர்கள்.
நெய் உருக்கி :
நெய்யில் கொழுப்புச் சத்து அதிகம். நெய்யை உருக்குவதன்
மூலம் கொழுப்புச்சத்தின் செறிவைக் குறைக்க முடியும். நெய்யானது தீக்கூறுகள்
உடையதால் அதனை சட்டியில் வைத்து
காய்ச்சிய பின்தான் உணவில் சேர்க்க
வேண்டும். அப்போதுதான் அது எந்தக் கெடுதலையும் தராமல் நன்மைகளை மட்டும் தருவதாக
இருக்கும்.
தேரையர் கூற்றுப்படி
நீர், மோர், நெய் ஆகியவற்றை உண்பவரின் பெயரைச் சொன்னாலே , சொல்பவரின்
உடம்பில் ஒருநாளும் நோய் அண்டாது.
"மருந்து உண்டால் நோய் வராது " என்றுதான்
எல்லா நாட்டு மருத்துவர்களும் சொல்வார்கள். ஆனால், மருந்து என்று எதையும் தனியே
உண்ணாமல் "உணவையே
மருந்தாக" உண்பவரின் பெயரைச்
சொன்னாலே நோய் போகும் என்றால், அந்த உணவு
முறை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று எண்ணிப் பாருங்கள்.
இப்படிப்பட்ட வியத்தகு மருத்துவ முறையை உலகில்
வேறெங்கும் கண்டதுண்டா?
தமிழர்களால் மட்டுமே
இது போன்ற மருத்துவத்தைக் கண்டறிந்து சொல்ல முடியும்.
பிணி இல்லா வாழ்க்கை வாழ இம்முறையை இன்றுமுதல்
கடைப்பிடிப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 111. பிணி இல்லா வாழ்க்கை ஆ.தி.பகலன்"
Post a Comment