"மூச்சுப்பயிற்சி "
ஒரு மனிதன்
நாளொன்றுக்கு எத்தனை முறை மூச்சு
விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் 'சித்தர்கள் '.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை தன் மூச்சை
உள்ளிழுத்து விடுகிறான்.
ஒரு மணி நேரத்திற்கு (60 × 15) 900 முறையும்,
ஒரு நாளுக்கு ( 900 × 24) 21,600
முறையும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.
இந்த 21,600 மூச்சைக் குறிக்கவே தமிழில் 216 உயிர்மெய் (
21600 இல் கடைசியாக உள்ள இரண்டு சுழியை நீக்கினால் மீதம் இருப்பது 216) எழுத்துகள்
உருவாக்கப்பட்டன. உயிரும், மெய்யும் ( உடலும்) வாழ 21,600 மூச்சுகள் தேவை
என்பதை இது உணர்த்துகிறது .
நாள் ஒன்றுக்குச் சராசரியாக நாம் விடத்தக்க மூச்சுகளின்
எண்ணிக்கை 21600 என்பதற்கான இலக்கியச் சான்று இதோ.
"விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளம்கொள் இரட்டியது ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே " ( திருமந்திரம்
- 2177)
திருமூலரின் இப்பாடலே நமக்குப் போதுமான சான்றாகும்.
விளக்கமிக்க முந்நூறும் , முப்பதைப் பத்தினால் பெருக்கக்
கிடைத்த முந்நூறும் சேர்த்தால் அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் (
6× 6 = 36) பெருக்கக் கிடைப்பது முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்கக் கிடைப்பது
( 600 × 36 ) 21,600 ஆகும். இந்தக்
கணக்கில் நாம் நாளொன்றுக்கு மூச்சு
விட்டால் நம் வாழ்நாள் 120 ஆண்டுகள் ஆகும்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சை
உள்ளிழுத்து விட்டால் 90 ஆண்டுகள்தான் வாழ்வான். ஒரு நிமிடத்திற்கு 2 முறை என்றால்
750 ஆண்டுகள் வாழ்வான். 1 முறை என்றால்
1500 ஆண்டுகள் வாழ்வான். 0 முறை என்றால் இறப்பே இல்லை. இது சித்தர்களால் மட்டுமே
முடியும். திருமூலர் இப்படித்தான் 3000 ஆண்டுகள்
வாழ்ந்தார் என்பர்.
இது எப்படி முடியும் என்பதுதான் பலரது ஐயம்.
விளக்குகிறேன்.
நீரில் நீச்சல் அடிப்பவர்கள் அந்த நீரை உள்வாங்குவதில்லை
. அதனால்தான் மிதக்கிறார்கள். நீரை குடித்தால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால்
மூழ்கிவிடுவர். நீரில் மூழ்கி
இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
நீரில் நீந்துவதற்கான பயிற்சியுடன் நீரை உள்ளிழுக்காமல் இருந்தால் இறப்பு இல்லை.
அதுபோலவே, காற்று இல்லாமல் வாழவும் அல்லது
காற்றைக் குறைவாக உள்ளிழுத்து விடுவதன் மூலம் நீண்ட நாள் வாழ்கின்ற பயிற்சியையும்
நாம் அறிந்து கொண்டால் நமக்கும் இறப்பு
இல்லை. அதற்கு யோகக்கலை பெரிதும் உதவும்.
யோகக்கலை மூலமாக எந்த ஒரு பயிற்சியையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
10 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யும் போது ஒரு பங்கு
நேரம் உள்ளிழுத்தல், நான்கு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே
விடுதல் என்று கடைப்பிடித்தால் 140 மூச்சுகள் குறையும். அதுவே, காலை மாலை என ஒருநாளில் இருமுறை செய்தால்
( 2 × 140) 280 முறை மூச்சு உள்ளிழுத்து விடுவது குறையும் .எந்த அளவுக்கு
மூச்சைக் குறைவாக உள்ளிழுத்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு ஆயுள்
அதிகரிக்கும். கடல் ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே மூச்சு விடுகிறது.
அதனால்தான் அது 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறது.
ஒரு நிமிடத்தில் , ஒரு மனிதன் உட்கார்ந்து இருக்கும்போது
12 மூச்சும், நடக்கும்போது 18
மூச்சும், ஓடும்போது 25 மூச்சும்,
தூங்கும்போது 32 மூச்சும்,
உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளும் போது 64 மூச்சும் உள்ளிழுத்து
விடுகிறான்.
இப்போது புரிகிறதா? கோபம் கொள்கிறவர்களுக்கு ஆயுள்
குறைவு என்று!
மூச்சுப் பயிற்சி ஆயுனைக் கூட்டும்!
முன்கோபம் ஆயுளைக் குறைக்கும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
அற்புதம்
ReplyDelete