"திருக்குறளைப் பாதுகாக்கும் கிரெம்ளின் மாளிகை
"
தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசியா ( Russia) நாடு தமிழைக் கொண்டாடுகிறது.
உருசியாவின் புகழ்பெற்ற கவிஞரான. லியோ தால்சுதாய்,
திருக்குறளையும், தமிழையும் நேசித்ததால்
அந்த நாட்டு மக்கள் இன்றுவரை தமிழையும், திருக்குறளையும் கொண்டாடி வருகிறார்கள்.
உருசியாவின் தலைநகரமான மாசுகோ ( Moscow) வில் உள்ளது கிரெம்ளின் மாளிகை. இது உருசியாவின்
அதிபர் மாளிகை ஆகும். இந்த மாளிகையின் முகப்பில் "கிரெம்ளின் மாளிகை"
என்று நான்கு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும்,
இரண்டாவதாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழியான சீனத்திலும் (
மாண்டரின்) , மூன்றாவதாக உலகின் தொடர்பு
மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் , நான்காவதாக தமிழிலும் எழுதி இருக்கிறார்கள்.
தமிழில் எழுதியதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்று தெரியுமா?
உலகில்
முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்மொழி. அதனால்தான் தமிழில் எழுதினோம்
என்கிறார்கள்.
கிரெம்ளின் மாளிகையின் அடிப்பகுதியில் சுரங்கம் ஒன்று
உள்ளது. அந்தச் சுரங்கத்தில் அணுதுளைக்காத பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உள்ளது.
இந்த உலகம் இயற்கை பேரிடர்களாலோ, அணுகுண்டு வெடிப்பினாலோ
ஒருவேளை அழிந்து போகலாம். அந்த அழிவுக்குப்பின் இந்த உலகில் புதிய மனித சமுதாயம்
தோன்றலாம். அப்படி தோன்றினால் அந்த மனித சமுதாயத்திற்கு நாம் கொடுக்கும்
கொடைகளாக சில பொருட்களைத் தேர்வு செய்து அதையெல்லாம் அந்தப் பெட்டகத்தில்
வைத்துப் பாதுகாக்கிறார்கள். அணுகுண்டே போட்டாலும் அந்தப் பெட்டகம் ஒன்றும் ஆகாது.
அப்படியேதான் இருக்கும். அந்த அணு துளைக்காத பாதுகாப்புப் பெட்டகத்தில்தான் உலகப்
பொதுமறையான திருக்குறளை லைத்துப் பாதுகாக்கிறார்கள் உருசியா நாட்டு மக்கள். உலகம் அழிந்தாலும் மீண்டும் ஒரு மேன்மையான மனித
சமுதாயத்தை கட்டமைக்க திருக்குறளால் மட்டுமே முடியும் என்பது உருசிய மக்களின்
நம்பிக்கை ஆகும்.
இப்படி உருசியா நாட்டு மக்கள் திருக்குறளைப்
பாதுகாப்பதைக் கேள்விப்பட்ட தமிழன் ஒருவன், உருசியா நாட்டுக்குச் சுற்றுலா
சென்றானாம். அப்போது அந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தைக் கண்காணிக்கும்
அதிகாரிகளிடம் "நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அறிவாளிகளா? உலகம் அழிந்தாலும்
அடுத்த தலைமுறை மக்கள் படிக்க திருக்குறளைப்
பாதுகாக்கிறீர்களே , ஒருவேளை உலகம் அழிந்து அடுத்த மனித சமுதாயம் உருவானால் அவர்களுக்கு எப்படி தமிழ் எழுதப் படிக்கத்
தெரியும் என்று நம்புகிறீர்கள்? அவர்களுக்குத் தமிழ் தெரியாமல் போனால் என்ன செய்வார்கள்? நீங்கள் பாதுகாத்தது எல்லாம் வீண்தானே? என்று
அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டானாம்.
அதற்கு அந்த உருசிய அதிகாரி என்ன பதிலளித்தார் தெரியுமா?
இந்த உலகில் இயற்கையாக
தோன்றிய மொழி, இயற்கையோடு இயைந்த மொழி
தமிழ்மொழி மட்டுமே.
ஆதலால், உலகம் எத்தனை முறை அழிந்தாலும் அது மீண்டும்
மீண்டும் தோன்றும்போது முதலில் உருவாகும்
மொழி தமிழாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், அது இயற்கை உருவாக்கும் மொழி.
அதனால், எல்லா தலைமுறை மக்களும் தமிழைப் படிக்கத் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்புகிறோம் "
என்றாராம்.
ஏதும் பேச இயலாமல் வாயடைத்துப் போனான் அந்தத் தமிழன்.
உருசியா நாட்டு மக்களை திருக்குறள் மிகவும்
கவர்ந்துள்ளது. உருசிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூலை
மாசுகோவில் ( Moscow) ஒரு மகிழுந்து (Car) ஓட்டுநர் ஆர்வத்துடன் படித்துத் தம்முடன் அது
பற்றிப் பேசியதைத் தமிழறிஞர் தெ.பொ.மீ. அவர்கள் தமது சோவியத் பயணக் கட்டுரையில்
பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உருசியக் கவிஞர் லியோ தால்சுதாய் " திருக்குறளைப்
படித்தேன், உலகப் புகழ் பெற்றேன் " என்றார். அவரைப் பின்பற்றி அந்த நாடே
திருக்குறள் படித்தது. திருக்குறளைப் பாதுகாக்கிறது.
நம் நாட்டில் மகாத்மா காந்தி " திருக்குறளைப்
படித்தேன். அறவழியைக் கண்டேன். அழியாப் புகழ் பெற்றேன் " என்றார்.
ஆனால்,
இங்கு திருக்குறளைப் படிக்க
ஆளில்லை.
காரணம்?
நம் நாட்டு மக்களுக்கு வாய்த்த அறிவு அவ்வளவுதான்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 119. திருக்குறளைப் பாதுகாக்கும் கிரெம்ளின் மாளிகை ஆ.தி.பகலன்"
Post a Comment