"காலைப்பிடி! காரியம் நடக்கும்! "
தனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக பணம் படைத்தவனையும், பலம் படைத்தவனையும் நாடிச்சென்று அவன் காலைப் பிடித்து நாம் நீனைத்த காரியாத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்பது இப்பழமொழிக்கான பொருள் இல்லை.
"கால் " என்பதற்கு காற்று என்றும் பொருள்
உண்டு.
உடலில் இருந்து காற்றை எடுத்துச் சென்று விடுவதால் எமனை ' காலன் ' என்று அழைக்கிறோம்.
வீட்டின் உள்ளே சென்று வர, அமைக்கப்படும் சன்னலுக்கு " காலதர் "
என்று பெயர்.
( கால் + அதர் = காலதர் .
கால் - காற்று ; அதர் - வழி) .
மூக்கின் வழியே செல்லும் காற்றைப் பிடித்து வைத்தால் நீ நினைத்த காரியம் நடக்கும் என்பதே இதன் உண்மைப் பொருளாகும்.
இதை திருமூலரின் பாடல் வழி அறிவோம்.
" வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வெளியனும் ஆமே " ( திருமந்திரம் - 569)
இடப்பக்க மூக்கின் வழியாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வசப்படுத்தி , உள்ளேயே அடக்கினால் உடல் பளிங்கு போல் ஒளி வீசித் திகழும். முதுமை வந்தாலும் உடல் இளமை மாறாதிருக்கும். குருவின் திருவருள் துணை இருக்குமானால் , இந்தப் பயிற்சி உடையவரின் உடல் காற்றை விட மென்மைத் தன்மை அடையும். போற்றத்தக்க மேன்மை உடையவராக இருப்பார் . அவர் நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். அதாவது, அவர் எங்கும் செல்லும் ஆற்றல் உடையவராக இருப்பார்.
காலைப்பிடி - மூச்சுப் பயிற்சியினால் காற்றை உனக்குள் அடக்கி வை .
காரியம் நடக்கும் - மரணத்தை வென்று இம்மண்ணில் நீ வாழ
நினைக்கும் காலம்வரை வாழலாம். அதுவும் இளமையோடு வாழலாம் .
நீ நினைத்த காரியம் எல்லாம் நடக்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 128 காலைப்பிடி! காரியம் நடக்கும் ஆ.தி.பகலன்"
Post a Comment