"புலி
பசித்தாலும் புல்லை தின்னாது "
ஏன்
தெரியுமா?
சிங்கம்,
நாய், நரி, பூனை, பன்றி வெள்ளெலி , பாம்பு போன்ற ஒரு சில விலங்குகள் குட்டி ஈனும் போது
ஏற்படும் அதிகப்படியான வலி காரணமாகவும், அளவற்ற
பசி காரணமாகவும் தான் ஈன்ற சில குட்டிகளை தானே
உண்ணும்.
இதுபோன்ற
செயல்களை நாம் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகள் இன்றளவும் செய்து
வருவதைக் கண்கூடாகக் காணலாம் .
ஆனால்
, புலி இந்த விலங்குகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.
அதாவது,
புலி குட்டி போடும் போது எவ்வளவு கடுமையான பசியில் இருந்தாலும் புலி தான் ஈன்ற குட்டிகளை உண்பதில்லை.
புலி
தன் குட்டிகளை தன் பார்வையிலேயே வைத்திருந்து
மிகவும் கவனமாக பாதுகாக்கும்.
இதன்
காரணமாகவே "புலி பசித்தாலும் பிள்ளையைத்
தின்னாது " என்ற பழமொழி உருவானது. அதுவே காலப்போக்கில் மருகிப்போய் " புலி
பசித்தாலும் புல்லை (பிள்ளை என்பது புல்லை
ஆனது) தின்னாது " என்று மாறியது.
"புலி
பசித்தாலும் புல்லை தின்னாது '
ஏன்
தெரியுமா?
அது
புல்லை தின்னும் மாடுகளையும் மான்களையும் மட்டுமே தின்பதால்! 😄
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 15 - "புலி பசித்தாலும் புல்லை தின்னாது " ஏன் தெரியுமா? ஆ.தி.பகலன்"
Post a Comment