வண்ண
மயில் ஆகுமோ
வான்கோழி?
காட்டில்
தன் அழகிய தோகையை விரித்து மயில் ஆடிக்கொண்டு இருந்தது. இதைப் பார்த்து வான்கோழியும்
தனது அருவருப்பான சிறகை விரித்து ஆட முயன்றதாம்.
இதை நேரில் பார்த்த ஔவையார் இந்தக் காட்சியை உவமையாக்கி தன் 'மூதுரை ' யில்
ஒரு பாடலை அமைத்தார்.
"கான
மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும்
அதுவாகப் பாவித்துத் - தானும்தன்
பொல்லாச்
சிறகை விரித்துஆடினால் போலுமே
கல்லாதான்
கற்ற கவி.
( மூதுரை - 14)
கற்க
வேண்டிய கல்வியை முறையாகக் கல்லாத ஒருவன், வேறு ஒருவர் எழுதிய கவிதையை மனப்பாடம் செய்துகொண்டு
வந்து மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுதல் என்பது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை
விரித்து ஆடுகையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தன்னையும் அம்மயிலாகவே
நினைத்துக் கொண்டு தானும் தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதைப் போன்றதாகும்.
வான்கோழி
வான்கோழிதான்!
ஒருபோதும்
வண்ணமயில் ஆகாது!
இந்தப்
பாடலின் பாதிப்பு ஔவையின் வாரிசுகளிடம் இப்போதும் பார்க்க முடிகிறது.
ஆம்!
ஒரு கடையின் முகப்பில் எழுதப் பட்டிருந்த கவிதை
இது!
"கான
மயிலாட
கடன்
வந்து மேலாட
வாங்கியவன்
கொண்டாட
நான்
இங்கு திண்டாட"
தயவு
செய்து கடன் சொல்லாதீர்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 17 - வண்ண மயில் ஆகுமோ வான்கோழி? ஆ.தி.பகலன்"
Post a Comment