
பொங்கல் முடிந்ததும் "காணும்பொங்கல்
" அன்று சான்றோர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் ஆகியோரை நேரில் கண்டு வாழ்த்து
பெறுதல் தமிழர் மரபு.
நல்லோரைக் காணுதல், கண்டு வாழ்த்து பெறுதல்
என்பதே "காணும் பொங்கல் " என்று ஆயிற்று.
ஏழை, எளியோர் எல்லாம் பொருள் உடையவர்களிடம்
சென்று "பொங்கல் அன்பளிப்பு " பெறுவதும் வழக்கம்.
இப்படி வாழ்த்து பெற செல்பவர்களும், பொங்கல் அன்பளிப்பு பெற செல்பவர்களும் தாங்கள் நாடிச் சென்றவர்களிடம் "உங்கள் வீட்டில் பால் பொங்குச்சா? " என்று கேட்பார்கள்.
இதற்கு பொருள் என்னவென்றால்
"நீங்கள் பொங்கல் கொண்டாடினீர்களா?
" என்று மறைமுகமாக கேட்கிறார்கள்.
தமிழர் மரபுப்படி வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால்
அந்த துக்கத்தை கடைப்பிடிக்க ஓர் ஆண்டு எந்த விழாக்களையும் கொண்டாட மாட்டார்கள் . அவர்களிடம்
வாழ்த்து பெறுவதும் " அன்பளிப்பு கேட்பதும் நாகரிகம் ஆகாது .
இதைத்தான் நாகரிகமாக " உங்கள் வீட்டில்
பால் பொங்குச்சா " என்று கேட்பார்கள்
. பால் பொங்கியது என்று அவர்கள் சொன்னால்
, அவ்ர்கள் பொங்கல் கொண்டாடி இருக்கிறார்கள் என்று பொருள் . அவர்களிடம் வாழ்த்தோ ,
அன்பளிப்போ கேட்பார்கள் . ஒருவேளை அவர்கள் " பால் பொங்கவில்லை " என்று சொன்னால்
அவர்கள் பொங்கல் கொண்டாடவில்லை என்பதை புரிந்து கொண்டு நாகரிகமாக அவர்களை கடந்து செல்வார்கள்
.
பொங்கல் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியோடும் , மனநிறைவோடும் இருப்பவர்களிடம் தான் வாழ்த்தோ ,அன்பளிபபோ பெறவேண்டும் . எதையும் மனநிறைவோடு தந்தால்தான் அதை பெறுபவர்களுக்கு மேலும்மேலும் செல்வத்தைச் சேர்க்கும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். (பால் பொங்கியது என்றால் பாலோடு சேர்ந்து பொங்கல் பொங்கியது என்று பொருள்)
காணும்பொங்கல் அன்று சான்றோர்களையும்
, பெரியோர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய
காலில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து
வாழ்த்து பெற வேண்டும் . அப்போது அவர்கள் மலர்தூவி மனநிறைவோடு வாழ்த்துவார்கள் . வாழ்த்து
சொல்லி வெறும் கையோடு அனுப்பக்கூடாது எனக்
கருதி கையில் காசு கொடுத்து அனுப்புவார்கள் . இப்படித்தான் " பொங்கல் காசு
" கொடுக்கும் வழக்கம் உருவானது .
ஆனால் இன்றோ " பால் பொங்குச்சா " என்று கேட்டாலே கண்டிப்பாக காசு கொடுக்க வேண்டும் என்ற தவறான பழக்கம் உருவாகிவிட்டது.
சரி, இப்போ சொல்லுங்க. உங்க வீட்டில்
"பால் பொங்குச்சா? "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! - 2 பால் பொங்குச்சா? - ஆ.தி.பகலன் "
Post a Comment