
"நயாகராவில்
உச்சம் தொட்ட தமிழ் "
அமெரிக்காவில்
உள்ள உலகப் புகழ் மிக்க நயாகரா நீர்வீழ்ச்சியின்
முகப்பில் (உயரமான இடத்தில்) "நல்வரவு " என்று தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
"உலகின்
மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா " . அதுபோல. " உலகின் மிகப்பெரிய மொழி, உலகத்தின் தொன்மையான மொழி, உலக மொழிகளில் மூத்த மொழி, எல்லா
மொழிகளைவிடவும் உயர்ந்த மொழி தமிழ்மொழி . அதனால் உலகின் மிகப்பெரிய மொழியான தமிழை உலகின்
மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்துள்ளோம் " என்கிறது அமெரிக்க
அரசு .
நம்
நற்றமிழ் நயாகரா நீர்வீழ்ச்சியின் முகப்பில்
" நல்வரவு " என்று எழுதப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமை தான் . ஆனால்
நம் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்களில்
பாதி கூட தமிழ்ப்பெயர்களில் இல்லை . அதுவும் தமிழில் இல்லை என்பது வருத்தத்திற்கு
உரிய ஒன்றாகும்.
"தமிழ்நாட்டின்
தமிழ்த் தெருவில்
தமிழ்தான்
இல்லை "
என்று பாவேந்தர் பாரதிதாசன் அன்றே பாடிச் சென்றுள்ளார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி-
9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! - 20 - "நயாகராவில் உச்சம் தொட்ட தமிழ் " ஆ.தி.பகலன்"
Post a Comment