
இன்று
பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் திறன் குறைந்து கொண்டே வருகிறது. அண்மையில்
எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 25 விழுக்காடு மாணவர்களுக்கு தமிழை முழுமையாக
எழுதவும் படிக்கவும் தெரியவில்லை என்பது
வேதனையான செய்தியாகும்.
தமிழகத்தில்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள எழுத படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு "குறைதீர் கற்பித்தல் கட்டகம் "
வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருக்கும் மாணவர்களின் குறைகளை சுட்டிக் காட்டும்
ஆசிரியர்களை குற்றவாளியாக பார்க்கிறது
இன்றைய மாணவ சமுதாயம்.
இன்றைய
மாணவர்களின் நிலையை அன்றே கணித்து அழகாக பாடல் அமைத்து பாடியிருக்கிறார் ஔவையார்.
"
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல
நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை
வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா
தவன்நல் மரம். "
( மூதுரை - 13)
கிளைகளை
உடையனவாகவும் , கிளையின் கொம்புகளை உடையனவாகவும் காட்டினுள்ளே நிற்கும் அந்த
மரங்கள் நல்ல மரங்கள் ஆகா.
கற்றோர்
சபையின் நடுவே கற்றவர் ஒருவர் கொடுத்த ஓலையை ( புத்தகத்தை ) படிக்க மாட்டாமல்
நின்றவனும், குறிப்பை அறிய மாட்டாதவனுமே நல்ல மரங்கள் ஆகும்.
"கல்வி
இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை
அறியாதவனும் , ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்திருந்தாலும் அவர்கள் ஓரறிவுடைய
மரத்தினுக்கே ஒப்பாவர்" என்கிறார் ஔவையார்.
"சொல்லில்
உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத்
தொழுது படித்திடடி பாப்பா " என்று பாரதி பாடியது பாப்பாவுக்கு
மட்டுமல்ல. படிக்கின்ற மாணவர்கள்
அனைவருக்குமே!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 21 - "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே ஆ.தி.பகலன்"
Post a Comment