"நான்கு
கோடி பாடல்களைப் பாடிய ஔவையார் "
சோழ
மன்னன் ஒருவன் தன் அவைக்களப் புலவர்களை அழைத்து, " நாளை, பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி
பாடல்களைப் பாட வேண்டும் " என்று ஆணையிட்டான்.
ஓர்
இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள்
திகைத்தனர். அப்போது அங்கே ஔவையார்
வந்தார் . புலவர்களின் கவலையோடு
இருப்பதற்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து,
"இதற்காகவா திகைத்தீர்கள் . கவலை வேண்டாம் . இப்போதே நாலு கோடி பாடலைப்
பாடுகிறேன் ; மன்னனிடம் சென்று அப்பாடலைப் பாடுங்கள்" என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும்
பாடினார்.
ஒரு
பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா?
இதோ
அந்த நாலு கோடி பாடல்!
மதியாதார்
முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை
கோடி பெறும் ;
உண்ணீர்
உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை
கோடி பெறும் ;
கோடி
கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல்
கோடி பெறும் ;
கோடானு
கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை
கோடி பெறும் .
(ஔவையார் தனிப்பாடல் - 42 )
இப்பாடலில் 'கோடி' என்று குறிப்பிடப்படுவது "ஒரு கோடி பொன்
" ஆகும். இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு
கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.
1.
நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன் பகுதியை மிதிக்காமல் இருப்பது கோடி
பொன்னுக்கு இணையானது ஆகும்.
2.
உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி
பொன்னுக்கு இணையானது ஆகும்.
3.
கோடி பொன் கொடுத்தாவது நற்குடியில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி
பொன்னுக்கு இணையானது ஆகும்.
4
. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லில் இருந்து தவறாமல் வாழ்வது கோடி
பொன்னுக்கு இணையானது ஆகும்.
நல்வாழ்விற்கான
இலக்கணங்கள் கோடிப் பொன்னிற்கும் உயர்ந்தவை என்ற செய்தியினை எளியவர்க்கும்
புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார் ஔவையார்.
கோடிகளோடு
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், ஔவையார் சொன்ன
கோடிகளை கடைப்பிடித்து வாழ்ந்தால் கோடிகளைத் தேடி நாம் போக வேண்டிம்.
நம்மைத் தேடி பல்லாயிரம் கோடிகள்
வரும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 23 - நான்கு கோடி பாடல்களைப் பாடிய ஔவையார் " ஆ.தி.பகலன்"
Post a Comment