அயனம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 24.8.2024 - SMC மறு கட்டமைப்பு நிகழ்ச்சி

Trending

Breaking News
Loading...

அயனம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 24.8.2024 - SMC மறு கட்டமைப்பு நிகழ்ச்சி

அயனம்பாக்கம்,  அரசு  மேல்நிலைப்பள்ளியில் 24.8.2024 - SMC மறு கட்டமைப்பு நிகழ்ச்சி




திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம், அரசு  மேல்நிலைப் பள்ளியில் 24.8.24 அன்று காலை 10 மணிக்கு   SMC மறு கட்டமைப்பு நிகழ்ச்சி

நடைபெற்றது. நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. பார்த்தசாரதி அவர்கள் தலைமையேற்றார் . நிகழ்வில் முன்னதாக வரவேற்புரையைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அனிதா அவர்கள் மிகச்சிறந்த முறையில் வழங்கினார். மேலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை மிகத்தெளிவாக விளக்கினார். 

மேலும்  பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் திரு பரந்தாமன் ஐயா அவர்களும் உள்ளாட்சி பிரதிநிதி தெய்வசிகாமணி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். பள்ளி மேலாண்மைக் குழு பார்வையாளராக வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தனசேகரன் அவர்களும் கலந்து கொண்டார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா அவர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.  நிகழ்வில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தம் கருத்துக்களைக் கூறினர்.  நன்றியுரையைப்  பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமதி சிவகாமசுந்தரி அவர்கள் சிறப்பான முறையில் நிகழ்த்தினார். இந்நிகழ்வு இறுதியில் நாட்டுப்பண்ணுடன்  இனிதே நிறைவற்றது. இந்நிகழ்வைத் தமிழாசிரியர் வெ. பாலமுருகன் அவர்கள் தொகுத்து வழங்கினார்... இவ்விழாவிற்கான புகைப்படங்களை பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா அவர்கள் எடுத்தார். உடற்கல்வி ஆசிரியர் திருமதி கலைமகள் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்தினார்.


















































































0 Response to "அயனம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 24.8.2024 - SMC மறு கட்டமைப்பு நிகழ்ச்சி "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel